நஞ்சராயன் குளத்தில் ஆயிரம் மரங்கள் நடும் விழாவை திருப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாநகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையம் நான்கு ரோடு அருகே நஞ்சராயன் குளம் அமைத்துள்ளது. திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக கூலிபாளையம் நான்கு ரோட்டில் உள்ள நஞ்சராயன் குளத்தில் ஆயிரம் மரங்கள் நடும் விழா சுற்றுச்சூழல் அணி மாநிலத் துணைச் செயலாளர் மா.நாராயணமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மத்திய மாவட்ட கழகத்தினுடைய ஆற்றல்மிக்க செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் க.செல்வராஜ்MLA அவர்கள் மரம் நடும் விழாவை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி IAS அவர்களும் தெற்கு மாநகர பொறுப்பாளர் அண்ணன் TKT நாகராஜ் அவர்களும் வடக்கு மாநகர பொறுப்பாளர் அண்ணன் ந.தினேஷ் குமார் அவர்களும் மாவட்டத்தின் புதல்வர் அண்ணன் திலகராஜ் அவர்களும் மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு அரசாணை: நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த குழு அமைத்து

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் அதாவது நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்கும் திட்டதை செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக குழுவை அமைக்கவும் கேட்டுக் கொண்டிருந்தது.

அதைப்போல, இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நல உதவிகள் வழங்கல்

திராவிட கழகத்தை நிறுவிய பெரியாருடன் தொடக்கக் காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினர்.

அண்ணா தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்துவிட்டு, கடைசி வரை பொதுச் செயலாளராகவே அண்ணா இருந்தார்.

இந்நிலையில் தி.மு.க.வின் தாய் கழகமான திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது.  அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு இன்று கொளத்தூர் – ஜி.கே.எம் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடிகளான 260 கழக உடன் பிறப்புகளின் உழைப்பை பாராட்டி பொற்கிழி, நல உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  சிறப்பித்தார்.

விபத்தில் சிக்கியர்களுக்கு அமைச்சசர் மா. மதிவேந்தன் அவர்கள் உரிய சிகிச்சை வழங்க உத்தரவு

சுற்றுலா துறை அமைச்சசர் மா. மதிவேந்தன் அவர்கள் இன்று காலை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாமக்கல்லில் இருந்து இராசிபுரம் சென்று கொண்டிருந்தேன். அப்போது பொம்மைகுட்டைமேடு பகுதியை கடக்கும் பொழுது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது.

உடனடியாக அமைச்சசர் மா. மதிவேந்தன் அவர்கள் விபத்து தொடர்பாக விசாரித்து, விபத்துகுள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சையை விரைந்து வழங்க உத்தரவிடடார்.

அரசு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி – விடுதி – கலந்தாய்வுக் கட்டணங்களை அரசே ஏற்கும்

அரசு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில்,பொறியியல் படிப்பிற்க்கான சேர்க்கை ஆணைகளை வழங்கி, அவர்களின் கல்வி – விடுதி – கலந்தாய்வுக் கட்டணங்களை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 

ஒன்றிய அரசை கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் டந்த மாதம் 20-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் – டீசல் – சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பொருளாதார சீரழிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தனியார் மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்தும், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தி.மு.க. தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெற்று கொண்டுள்ளது. அதன்வரிசையில் இன்று ஒன்றிய அரசை கண்டித்து ஈரோடு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் டந்த மாதம் 20-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் – டீசல் – சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பொருளாதார சீரழிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தனியார் மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்தும், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெற்று கொண்டுள்ளது.

அதன்வரிசையில் வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் சகோதரர் அரிமா SU.SEKAR அவர்கள் முன்னிலையில் 178-வது வட்டக் கழக #செயலாளர் சேவை மாமணி அண்ணன் K.N.DAMOTHARAN அவர்கள் தலைமையில் கழக உடன்பிறப்புகள் அனைவரும் வட்டக் கழக பகுதிகளில் ஆங்காங்கே வீடுகள்தோறும் கழக கொடியேற்றி ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் மத்திய அரசு செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவும் கோஷமிட்டனர்.

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து குறைகளை கேட்டறிந்தார்

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் அவர்கள்  இன்று திருச்செங்கோடு நகராட்சி, சீத்தாராம்பாளையம் பகுதியில் சட்டமன்றத் தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து குறைகளை கேட்டறிந்தார்.

காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை அமைக்க இடத்தினை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தளபதி அவர்கள் ஒப்புதலின்படி, கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் மருதூர் கிராமத்தில் ரூ.750 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை அமைக்கும் பணிக்கான இடத்தினை மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள் தேர்வு செய்யும் ஆய்வினை மேற்க்கொண்டார்.

தாசில்தாருக்கு பாராட்டு சான்றிதழ்

2021-ஆண்டின் கொரோனா நேரத்தில் பொதுமக்கள் பயந்து கொண்டிருந்த நிலையில் இரண்டாம் கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில் சாமர்த்தியமாக தலைவாசல் ஆத்தூர் பகுதியில் இரண்டாம் அலை தடுப்பு பணியில் முனைப்புடன் செயல்பட்ட தலைவாசல் தாசில்தார் அன்பு செழியன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார் .

ஆத்தூர் பகுதி கெங்கவல்லி தலைவாசல் பகுதியில் மிகத் துரிதமாக செயல்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முடிந்த அளவு இரண்டாவது அலை தாக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்பட்டு பொதுமக்களை பத்திரமாக காப்பாற்றிய தாசில்தாருக்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.