5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக மாட்டினார்

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய சமீபத்தில் திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், சிலம்பரசனிடம் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் திருமால் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிலம்பரசன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை எனவே திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை சிலம்பரசனிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்து அனுப்பினர். அதன்பேரில் சிலம்பரசன், திருப்பாச்சூர் கிளை அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் திருமாலிடம் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விரைந்து சென்று கையும் களவுமாக திருமாலை பிடித்து கைது செய்தனர்.

கூட்டு பட்டா விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வத்திபட்டி கிராமத்தை சேர்ந்த சின்னழகன் என்ற விவசாயி தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக சாத்தாம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அங்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த தங்கவேல், பட்டா மாறுதல் செய்வதற்கு சின்னழகனிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேடடுள்ளார்.

ஆனால் சின்னழகன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை எனவே திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.4 ஆயிரம் நோட்டுகளை சின்னழகனிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்து அனுப்பினர். அதன்பேரில் சின்னழகன், கோமனாம்பட்டியில் உள்ள கிளை அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தங்கவேலுவிடம் ரூ.4 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விரைந்து சென்று கையும் களவுமாக தங்கவேலை பிடித்து கைது செய்தனர்.

உள்ளாட்சித்துறை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தூய்மைப்பணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு, அலுவலக பணிகள் என்று சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் இவற்றில் 75 சதவீதம் பேர் தினக்கூலி வேலை செய்து வருகிறார்கள். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தினக்கூலியாக வேலை செய்துவரும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் சுயஉதவிக்குழு, ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறைகளில் பணியாற்றி வரும் அனைவரையும் நேரடி பணியாளர்களாக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனைவரையும் பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் இருந்து ஆண்-பெண் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர்.

ஓட்டுகளை பெறுவதற்காக பச்சைப் பொய்யை சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார்

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய எடப்பாடி  பழனிசாமி உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு விவகாரத்தில், மக்களிடம் பச்சைபொய்யை தி.மு.க., தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது.

தி.மு.க அறிவித்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, சிலிண்டர் மானியம் ரூ.100, முதியோர் ஓய்வூதியம் உயர்வு போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? மக்களவை தேர்தலின் போது தி.மு.க., கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை அளித்தது. ஓட்டுகளை பெறுவதற்காக பச்சைப் பொய்யை சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க.,வினர் வாக்குறுதியை அளிப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை சொல்லி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்க வேண்டும். நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் அமுதவல்லி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை: அமைச்சர் கே.என்.நேரு

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி விரிவாக்கம் மற்றும் லால்குடி, முசிறி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தர உயர்வாக்கம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அமைச்சர் பெ. கீதா ஜீவன் தலைமையில் பெண்களுக்கான மாநிலக் கொள்கை உருவாக்கம் குறித்து ஆலோசனை

சென்னை, வேளச்சேரியில் அமைந்துள்ள வெஸ்டன் ஹோட்டலில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற, பெண்களுக்கான மாநிலக் கொள்கை உருவாக்கம் குறித்த இரண்டாவது பயிற்சிப் பட்டறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, தமிழக சட்டமன்ற உறுப்பினர் டி. ஆர். பி. ராஜாஆகியோருடன் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

இந்நிகழ்வில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவர் ஆராய்ச்சியாளர் மற்றும் , உறுப்பினர்கள், உலக வங்கியின் – சமூக மேம்பாட்டு நிபுணர் காஞ்சன் பர்மார், மனித மேம்பாட்டுத் திட்டத்தின் தலைவர் கமிலா ஹோல்மெமோ, ஐ.நா. மகளிர் அலுவலகத் திட்ட நிபுணர் அஞ்சு துபே பாண்டே, ஐ.நா பாலின உணர்திறன் பட்ஜெட் ஒருங்கிணைப்பாளர் அபிலாஷ் சூட், அரசுத்துறை உயர் அதிகாரிகள், கழக மகளிரணி பிரச்சாரக்குழுச் செயலாளர் சல்மா சமூக ஆர்வலர் ஓவியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் இன்று ஆலோசனை

உலகம் முழுவதும் கொரோனா அதி தீவிரம் அடைந்த காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளை நடத்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்ற வந்தன.

மேலும், குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும் 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6, 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 755 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 626 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்களுக்கு அக்டோபர் 9-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த இரண்டு வாக்குப்பதிவுக்கும் சேர்த்து வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், நேற்று ஏராளமானோர் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 9 மாவட்டங்களிலும் பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா ஃபஸ்ட் மாத இதழின் அரசியல் ஆசிரியர் முனைவர் சி. அமல்தாஸ் அவர்கள் மா. சுப்பிரமணியம் மற்றும் ஹஸ்ஸான் மௌலானா அவர்களை சந்தித்தார்

தமிழக முதல்வரின் மக்களாட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறையை மகுடமாய் ஏற்று மக்களின் சுகாதாரத்திற்காக சுழன்று சுழன்று சுறு சுறுப்புடன் மாநிலம் முழுவதும் சூறாவளி பயணத்தால் மாவட்டந்தோறும் ஆய்வு பணிகள் மேற்கொண்டு அவ்வப்பொழுது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அரசு அலுவலர்களுக்கு வழங்கி முதல்வரின் நம்பிக்கை நாயகரான அண்ணன் DR.M.SUBRAMANIYAN, BA,LLB. அவர்களை இன்று அவர் தம் இல்லத்தில் இந்தியா ஃபஸ்ட் மாத இதழின் அரசியல் முனைவர் சி. அமல்தாஸ் அவர்கள் இன்று சந்தித்தார்.

மேலும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு JMH.ASAAN MOULAANA.M.L.A,. அவர்களை இன்று அவர் தம் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சந்தித்தார்.