தமிழக முதலமைச்சர் அவர்கள் தகவல் தொழில்நுட்ப நண்பன் வலைதளத்தை தொடங்கி வைத்தார்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “இ-முன்னேற்றம்” மற்றும் “தகவல் தொழில்நுட்ப நண்பன்” வலைதளம், “கீழடி-தமிழிணைய விசைப்பலகை” மற்றும் “தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி” தமிழ் மென்பொருள்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக விற்பனை

தமிழகத்தில் 2003-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுக்கு லாட்டரி சீட்டு விற்பனை மூலம் கிட்டத்தட்ட 1500 க்கு மேல் ஆண்டு வருமானம் கிடைத்தது. இந்த லாட்டரி சீட்டு விற்பனையால் கூலி தொழிலாளிகள் தன்னுடைய உழைப்பை முழுமையாக இழந்து நடுத்தெருவில் நின்றது மட்டுமின்றி பல குடும்பங்கள் தற்கொலை வரை சென்றதால் கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய அதிமுக அரசு தடை செய்தது.

தொடக்க காலத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை காவல்துறை கைது செய்த்து சிறையில் அடைத்தது. அதன் பின்னர் காவல்துறையின் கண்காணிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இதன் காரணமாக லாட்டரி சீட்டு விற்பனை திரைமறைவில் சுகந்திரமாக நடைபெற தொடங்கியது. இதுமட்டுமின்றி கேரளாவில் இருந்து பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக லாட்டரி சீட்டுகள் கடத்தி வரப்பட்டு கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக அதிகளவில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றான வால்பாறையில சுற்றுலா பயணிகள் பலரும் வந்து செய்கின்றனர். இங்குமுகாமிட்டுள்ள சமூக விரோதிகள் பலர் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் குற்ற செயல்களை செய்து வருகின்றனர்.

அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, கள்ள மது, விபச்சாரம், லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக அங்கு சுற்றுலா செய்வோர் கவலை படுகின்றனர். தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் 2003 -ஆம் ஆண்டே தடை செய்யபட்டாலும், அந்த தொழிலை ஏற்கனவே செய்தவர்கள் சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் இன்றும் மறைமுகமாக செய்து வருகின்றனர். இதன் விளைவாக காவல்துறையினரும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குமுறுகின்றனர்.

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் லாட்டரி சீட்டுகள் உயிர்ப்புடன் கூலி தொழிலாளிகளை இன்றும் சுரண்டப்படுகிறார்கள் என்பதே வேதனையான சம்பவம். எனவே காவல்துறை இனிமேலாவது விழித்து எழுந்து பல இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் கஞ்சா, லாட்டரி விற்பனை மற்றும் விபச்சார தொழிலை தடுத்து வால்பாறையை மீட்டு எடுக்குமா? காவல்துறை என்று எதிர்பார்க்கும் சமூக ஆர்வலர்கள்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பள்ளி மாணவி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேற்று மீண்டும் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ஆர்.சி. நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் இளந்தென்றல் என்ற மாணவி பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு அளித்தார். அந்த மனுவில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் அரசு உதவி பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மது பாட்டில்களை குடித்துவிட்டு பள்ளியில் உள்ளே தூக்கி எறிந்து விடுகின்றனர்.

இதனால் பாட்டிலில் உடைந்து காணப்படுவதாகவும் மதுக்கடை அருகே அமர்ந்து குடிப்பதாலும் கூட்டமாக நிற்பதாலும் அடிக்கடி சண்டை நிகழ்வதாகவும் பள்ளி வந்து செல்வதற்கு அச்சப்படும் சூழ்நிலை உள்ளதாகவும் மேலும் வரும் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மதுக் கடைகளை அகற்றி மாணவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு வரவும் படிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் அப்பள்ளியில் ஆறாவது படிக்கும் மாணவி இளந்தென்றல் மற்றும் அவரது சகோதரர் மனு அளித்தனர்.

காமன்வெல்த் போட்டியில் தகுதி பெற்ற இ.ராஜா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திப்பு

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் வென்ற சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா அவர்கள் இன்று காமன்வெல்த் போட்டியில் தகுதி பெற்றுள்ளத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தாலுகா அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட தங்கமாள் ஓடை நீர்நிலை புறம்போக்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் குடியிருந்து வந்தனர். இந்த ஓடையை ஒட்டியவாறு கட்டியிருந்த வீடுகளை கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி நிர்வாகம் அகற்றியது.

அப்போது அவர்களுக்கு புக்குளம் பகுதியில் கட்டப்படும் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் வீடுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மாற்று இடத்திற்கு குடிபெயர்ந்தனர். ஆனால் இது நாள் வரை அதிகாரிகள் உறுதி அளித்தபடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பொதுமக்கள் உடுமலைப்பேட்டை தாலுகா அலுவலகத்தில் திரண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டத்தை விலக்கிய நீதிபதி

ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .ஆத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக இந்த முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை பொறுப்பை ஏற்று நடத்தியவர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் நடத்தினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி தனலட்சுமி BA,B.L அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியது மாணவர்கள் எந்த ஒரு தவறு செய்யாமல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் இப்பொழுது அதிகமாக பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் அதிகமாக கைது செய்யப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள் உஷாராக இருந்து பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்று கூறினார்.

பெண்களுக்கு 18 வயது முடிந்த பின்பும் ஆண்களுக்கு 21 வயது முடிந்த பின்பு மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வயது வரம்பு மீறி திருமணம் செய்தால் அதிகமாக மாணவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் அதனால் மாணவர்கள் முக்கியமாக கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பு நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தேவையில்லாமல் சட்டத்தை மீறி கொண்டு வாழ்க்கையை வீண்யடிக்க வேண்டாம் என்றும் கூறினார்

அதுமட்டுமில்லாமல் உங்களுக்காக நான் மாதம் மாதம் கூட உங்கள் பள்ளிக்கு வந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துகிறேன் என்று நீங்கள் நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று எடுத்துக் கூறினார் இந்த விழாவில் மூத்த வழக்கறிஞர் ராமதாஸ் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் பெரியசாமி சங்கத்தின் செயலாளர் வாசு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் உதயகுமார் அரசு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஜவ்வரிசி பளபளப்பாக இருப்பதற்கு வேதிப்பொருட்கள் கலப்படம் குறித்து ஆய்வு

சென்னை உச்ச மன்றத்தில் நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாக மரவள்ளிக்கிழங்கு நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஆனால் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் பல சேகோ பேக்டரிகள், ஜவ்வரிசி பளபளப்பாக இருப்பதற்கு வேதிப்பொருட்கள் பலவற்றைக் கலந்து தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

இதை தடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. கடைகளில் விற்பனை செய்யப்படும் 3 வகையான ஜவ்வரிசியை நீதிபதி வாங்கி வந்திருந்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஜவ்வரிசி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று கூறினார். அதையடுத்து, தான் வாங்கி வந்த ஜவ்வரிசி பாக்கெட்டுகளை அரசு வக்கீல் மூலம், மன்றத்தில் ஆஜராகியிருந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் நீதிபதி வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் தள்ளுபடி

கடந்த மாதம் 24 ஆம் தேதி சாத்தூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பது தொடர்பாக அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, இராமகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் வீரா ரெட்டி புகாரின்பேரில் ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது சாத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேரை கைது செய்யக்கூடாது என, ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, அமைச்சரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.

தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி மரணம்

சென்னையை அடுத்து பொன்னேரி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ரேவதி மற்றும் குமார் தம்பதியினரின் 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயதான லட்சிதா. கடந்த மாதம் 27-ந்தேதி லட்சிதா உடல் நலக்குறைவால் பொன்னேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் ஊசி போட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் லட்சிதாவின் கழுத்தில் கட்டி ஏற்பட்டு பெரிதாக மாறிய நிலையில் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்த உடன் மீண்டும் அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் பின்னர் சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்துவிட்டார்.

தவறான சிகிச்சையால் 2-ம் வகுப்பு மாணவி இறந்ததாக கூறி பொன்னேரியில் உள்ள தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு அங்கு இருந்த நாற்காலிகளை தூக்கி வீசியும் விளம்பர பலகைகள், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

பழ மூட்டைகளுக்கு நடுவே மூட்டை, மூட்டையாக மறைத்து புகையிலை பொருட்கள் கடத்தல்

தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்கள் அது பல வழிகளில் அதிக விலைக்கு இன்றும் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து லாரி, பஸ்களில் புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருவது மட்டுமின்றி ரெயில்களில் மூலமும் புகையிலை பொருட்கள் கடத்திவரப் படுகின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மதுரைக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக நெடுஞ்சாலை ரோந்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சின்னாளப்பட்டி அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறை நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பழங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை நிறுத்தி காவல்துறை சோதனை நடத்தினர். அதில் தர்பூசணி, அன்னாசி, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள் 20 மூட்டைகளில் இருந்தது. பின்னர் லாரியில் வந்த 2 பேரிடம் காவல்துறை விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்க சந்தேகம் அடைந்த காவல்துறை லாரியில் ஏற்றிவந்த பழ மூட்டைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது பழ மூட்டைகளில் இருந்து புகையிலை பொருட்கள் வாசனை வந்தது. இதைத்தொடர்ந்து பழ மூட்டைகளை காவல்துறை அகற்றி பார்த்தபோது, அதற்குள் 27 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.