பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் தடம் பதித்த தமிழக மாணவிகள்

தமிழைப் போற்றும் வரலாற்று சிறப்புமிக்க இணைய வழியிலான உலக சாதனை நிகழ்வு தமிழ்ச் செம்மொழி மன்றம் முப்பெரும் விழாவாக அண்மையில் நடத்தியது.

தமிழ்ச் செம்மொழி மன்றம் மற்றும் பீனிக்ஸ் புக்ஸ் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் வெற்றி விழாவில் நேரடியாக கலந்து கொண்டு தன்னை இன்ற தாய் தந்தைக்கும், பள்ளிக்கும், (நாகனூர்) ஊருக்கும் பெருமை சேர்க்கும் பல்வேறு போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு சாதனை (கரூர் மாவட்ட அளவில் முதன் முறையாக) சாதனை படைத்த சாதனையாளர்களை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகம், தமிழ்ச் செம்மொழி மன்றம் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவபடுத்தி உள்ளது.

வி.கே. சசிகலா வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கல்

தொடர் கன மழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கபட்ட மக்களுக்கு பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன பொருட்க்களை வழங்கி வருகிறார்கள்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றார். அந்த வகையில், சென்னையில் தி.நகர்- லாலா தோட்டம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளை வி.கே. சசிகலா பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, கோரிமேடு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வி.கே. சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர், பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, சசிகலா பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று, பெண்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வி.கே. சசிகலா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கன மழையால் பல்வேறு முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கபட்ட மக்களுக்கு பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன பொருட்க்களை வழங்கி வருகிறார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த வி.கே. சசிகலா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஜோதி நிர்மலாசாமி: சார் பதிவாளர் அலுவலகத்தில் புதிய வசதி

வணிகவரி மற்றும் பதிவுத்துறை் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, வணிகவரி மற்றும் பதிவு அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்பொது , அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்தப்பட்டுள்ள காட்சிக் கருவியில் அடையாளவில்லை எண்ணோடு ஆவணதாரர்களின் பெயரும் காட்சிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

அதன்டிப்படையில் மேம்படுத்தப்பட்ட காட்சிக்கருவிகளை அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் பதிவின்போது ஆவணதாரர்களின் வரிசைக்கிரம எண்ணோடு அவர்களின் பெயரும் அறிவிக்கப்படும். இதன் மூலம் சரியான முன்னுரிமை உறுதிப்படுத்தப்படுவதுடன், பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும். பதிவு செய்யும் பொதுமக்களுக்கு வெளிப்படையான குழப்பமற்ற வரிசைக் கிரமத்தை கடைபிடிக்க இது ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர்.

ஐ லவ் யூ அம்மா…சித்தப்பா…மணிமாமா, அம்மு,, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நான் உங்க கிட்டலாம் சொல்லாம போறேன்..

பெண்ணாக பிறந்து இந்த பூமியில் வாழ்வதற்குள் எவ்வளவோ அவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை. இன்று வாழ வேண்டிய பல பிஞ்சுகள் தங்களை தாங்களாகவே மாய்த்துக்கொண்டு இருப்பதும் அதற்கு சரியான தீர்வு காண வேண்டியவர்கள் வேடிக்கை பார்ப்பதும் மிகவும் கொடுமையான சம்பவங்கள் ஆகும். இன்று கரூர் அரசு காலனியைச் சேர்ந்த ஜெயந்தியின் மகள் வெண்ணமலையில் ஒரு உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் அடுத்தடுத்து இறந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, வீட்டு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் ஜெயந்தி, வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் காவல்துறை இறந்த மாணவியின் அறையில் சோதனை போது இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் ஒன்றை காவல்துறை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்….என்னை யார் இந்த முடிவை எடுக்க வச்சார்ன்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழன்னு ஆசைப்பட்டேன்.

ஆனா இப்போ பாதிலேயே போகுறேன்…இன்னோரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனுன் நு ஆச ஆன முடியாதில்ல.. ஐ லவ் யூ அம்மா…சித்தப்பா…மணிமாமா, அம்மு,, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நான் உங்க கிட்டலாம் சொல்லாம போறேன்.. மன்னிச்சிருங்க இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி…என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தாளவாடியில் இருந்து கர்நாடகவிற்கு வீணாக செல்லும் தண்ணீர்; தாளவாடி மக்களை காப்பார்களா …? இல்லை மீண்டும்.. மீண்டும்… வேடிக்கை பார்ப்பார்களா…?

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகாவில் உள்ள மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1,105 மீட்டர் உயரத்தில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அமைத்துள்ளது. அங்கு விவசாயம் முக்கிய தொழிலான மஞ்சள், மக்காச்சோளம், ராகி, முட்டைகோஸ், கரும்பு, தக்காளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதாவது விவசாயத்தை தவிர வேறு எந்த ஒரு தொழிலும் இல்லை.

இந்த பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் மழைநீரை மட்டும் நம்பி விவசாயம் நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆழ்குழாய் கிணறு மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர். கோடை காலத்தில் வனவிலங்குகள் தண்ணீர் கிடைக்காத நிலை தாளவாடி மலைக்கிராமங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லாததால் மலைக்கிராம மக்கள் வறட்சி காலத்தில் பெரும் துயரத்தை சந்திக்கின்றனர்.

ஆண்டுதோறும் தாளவாடியில் 600 மி.மீட்டர் முதல் 800 மி.மீட்டர் வரை மழை பொழிந்தும் தண்ணீர் சேமித்து வைக்க இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள் மற்றும் ஆண்டு கொண்டு இருப்பவர்கள் எவ்வித முன்னேரிக்கை நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தண்ணீர் முழுவதும் ஓடையின் வழியாக வீணாக சென்று சுமார் 8 டி.எம்.சி. முதல் 12 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக மாநிலத்துக்கு வீணாக செல்கிறது.

வீணாக செல்லும் மழைநீரை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும் மேலும் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் மழைநீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தும் வகையில் பெரிய தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் ண்டநாட்களாக கோரிக்கைகளாக உள்ளது

அடாது மழையிலும் விடாத மரங்களை வெட்டும் கொள்ளையர்கள் …! “நான் கடவுள்” பாணியில் சமூக ஆர்வலர்…!

நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகா பந்துமை வழியாக கோத்தகிரி செல்லும் சாலை மற்றும் கம்பிசோலை கிராமம் கீழ்ப்புறம் பகுதி சாலை ஓரங்கள் மற்றும் வனப்பகுதியில், இருக்கக்கூடிய மரங்களை டேஞ்சர் மரங்கள் என்ற போர்வையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எழுத்துப்பூர்வமாக அனுமதி எதுவும் கொடுக்காமல், வாய் வார்த்தையில் சொன்னதாகக் கூறி சுமார் 50 மரங்களை சில சமூக விரோதிகள் தங்களுடைய சுய லாபத்திற்காக மரங்களை வெட்டும் வேலையை செய்து வருகின்றனர்.

இதனை அந்த பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்.சென்று வருவாய் ஆய்வாளர் சுப்பு அவர்களிடம் புகார் செய்தனர். ஆனால் வருவாய் ஆய்வாளர் சுப்பு எனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாக பதில் கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் கிராம நிர்வாக அலுவலகம் சென்று கிராம நிர்வாக அலுவலர் அருள் ரத்னா அவர்களிடம் சென்று கேளுங்கள் என தெரிவிக்கிறார்.

அதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அருள் ரத்னா அவர்களிடம் இதுபற்றி விசாரித்தபோது எனக்கு ஒன்றும் தெரியாத ( கிராமத்திலுள்ள சாலை ஓர மரங்களை காப்பாற்றுவது கிராம நிர்வாக அலுவலரின் முக்கிய கடமை என்பதனை மறந்து) நீங்கள் தாசில்தார் தினேஷ் அவர்களிடம் சென்று கேளுங்கள் என்று சொல்கிறார்.

சமூக ஆர்வலரும் விடாது இறுதியாக தாசில்தாரிடம் சென்று கேட்போம் என்று போய்க் கேட்டால் எனக்கு அப்படி ஒன்றும் தெரியல… நான் வந்து பார்த்துட்டு என்ன ஏதுன்னு உங்களுக்கு சொல்றேன் என்று அலட்சியமான பதிலை சொல்கிறார்.

“நான் கடவுள்” பாணியில் சமூக ஆர்வலர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என ஒவ்வொருவராக நடந்தது தான் மிசசம். இது இப்படியே போய்க் கொண்டிருந்தால் சமூக விரோதிகளின் செயல்கள் அதிகமாகி மரங்கள் அழிந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேதனையாக அமைகிறது.

ஆபாசப் படங்கள் அனுப்புவது, பகிர்வது தொடர்பாக தமிழகத்தில் சி.பி.ஐ அதிரடி சோதனை

சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நம் நாட்டில் குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் எடுப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் ஆபாசப் படங்கள் பார்ப்பது, பகிர்வது உள்ளிட்ட குற்ற செயல்கள் ஈடுபாடுயோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுக்கும் மாஃபியா கும்பல்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பவர்கள், பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் தொடர்பாக கிடைத்த பல்வேறு துப்புகளின் அடிப்படையில் தமிழகத்தில் 6 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆர்.எச். காலனியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய கேம்களை அனுப்பி விளையாட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 14 மாநிலங்களில் 83 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில், அரசு ஊழியரின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரசு ஊழியரின் மகனான கல்லூரி மாணவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதி சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது.

விபசார கும்பலிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 காவல் ஆய்வாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

கடந்த 8.1.2018 முதல் 15.5.2018 வரை சென்னை விபசார தடுப்பு பிரிவில் ஆய்வாளர்களாக பணியாற்றிய சரவணன் (சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர்), சாம்வின்சென்ட் (கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர்) போது விபசார கும்பலிடம் தொடர்பு வைத்துக்கொண்டு லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் உண்மை இருப்பது தெரிய வந்ததால், 2 பேர் மீதும் லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சாம்வின்சென்ட் சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் வீடு மற்றும் சரவணன் சென்னை புழுதிவாக்கம் ஜெயலட்சுமி நகரில் உள்ள வீடு மட்டுமின்றி இவர்கள் தொடர்புடைய 5 இடங்களிலும் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

தெருக்களில் கரைபுரண்டு ஓடும் நீரில் சந்தோஷமாக மீன் பிடிக்கும் இளசுகள்…!

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது இருந்த நிலையில். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பை விட தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம், குடமுருட்டி கரையோரம் உள்ள கணபதி நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததுடன் தெருக்களிலும் ஆக்கிரமித்து தேங்கி நின்றன. குடமுருட்டி வெள்ள நீர் காவிரி ஆற்றில் கலக்கும் வேளையில் அங்கிருந்து மீன்கள் புதுவெள்ளத்தை நோக்கி எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் கணபதி நகர் பகுதியில் தெருக்களில் தேங்கிய வெள்ளத்தில் அப்பகுதி இளம்பெண்கள் தங்களது துப்பட்டாவை பிடித்து மீன்பிடித்து மகிழ்ந்தனர்.