எஸ்.பி.வேலுமணி ரூ.58.23 கோடி சொத்துக்குவிப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் .

இவர் மீது 2016 முதல் 2021-ம் ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை, மாநகராட்சி தொடர்புடைய அலுவல்பூர்வ ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வேலுமணியுடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இதைப்போலவே கோவை சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராமன் வீட்டிலும் சோதனை நடக்கிறது. இதுமட்டுமின்றி கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய பல நபர்களின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. கோவை, சென்னை, சேலம் என மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகின்றது.

இந்த முறை அவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடன் சேர்த்து மேலும் 13 பேர்மீதும் இதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக பதவிவகித்த காலத்தில் சுமார் ரூ.58.23 கோடி சேர்த்திருப்பதாக இந்த வழக்கு எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது தொடரப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்திருந்த சொத்துகளின் அடிப்படையில், இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதல் தகவலறிக்கையின்படி, 27.04.2016 முதல் 15.03.2021 வரையுள்ள காலக்கட்டத்தில் மட்டும் வருமானத்தை விட அதிகமாக ரூ.58,23,97,052 சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர் நகராட்சி மன்ற தலைவர் பொறுப்பு ஏற்பு

ஆத்தூர் நகர மன்ற தலைவராக நிர்மலா பபிதா மணிகண்டன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டு மூன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் வந்த நகரமன்ற தலைவர் ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் நகராட்சி நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
முதல் திர்மானமாக  வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தீர்மானமும் இரண்டாவது தீர்மானமாக நகராட்சி அலுவலகத்தில் தமிழ் வாழ்க என்ற பலகை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மூன்றாவது தீர்மானமாக நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் ரூபாய் 18 லட்சம் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் எல்ஈடி விளக்கு வைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த மூன்று தீர்மானமும் வருகிற நகரமன்ற கூட்டத்தில் வைக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
மேலும் பொதுமக்களிடம் மற்றும் கவுன்சிலர்களிடம்  மனுவைப் பெற்று கொண்டு  மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் கூறினார் இந்த விழாவில் துணைத்தலைவர் கவிதா ஸ்ரீராம் மற்றும் ஆத்தூர் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் நூத்தப்பூர் துரை ,மாணிக்கம் ,அரிமா செல்வமணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

வி.கே சசிகலா சூளுரை: தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்.. 

வி.கே சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் முருகப்பெருமான், விஜயாபதி விஸ்வாமித்திர், இலஞ்சி இலஞ்சிக்குமார் ஆகியோரை வழிபாடு செய்ய கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு பயணம் சென்று வந்தது மிகவும் மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி அளித்ததற்கு இறைவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நான் மேற்கொண்டது ஆன்மீக பயணமாக இருந்தாலும், தென் மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து எனக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்து என்னை திக்கு முக்காட செய்த அத்துனை நல்உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இதுமட்டுமின்றி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய தென் மாவட்டங்களில், சென்ற அனைத்து இடங்களிலும், அதிமுக கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் வழி நெடுகிலும், நீங்கள் அளித்த சிறப்பான வரவேற்பினாலும், கள்ளம் கபடமற்ற உங்களுடைய உண்மையான அன்பாலும் மனம் நெகிழ்ந்து போனேன். அனைவரும் என்னை காண்பதற்காக வெகுநேரம் காத்திருந்த நிலையில், உங்களையெல்லாம் சந்தித்து வந்த பின்னர், விமான பயணத்தையும் மேற்கொள்ள இயலாமல், சாலை மார்க்கமாகவே பயணித்து சென்னை இல்லத்திற்கு வந்தடைந்தேன்.

நம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவையும் ஒவ்வொரு கழக தொண்டர்களின் கண்களில் என்னால் காண முடிந்தது. உங்களுடைய எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. அனைத்து பகுதிகளில் உள்ள ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரும் ஒருசேர “நம் இயக்கத்தை காப்பாற்றிடவேண்டும்” என்ற முழக்கத்தை, எழுப்புகிறீர்கள். நீங்கள் அனைவரும் என்மீது வைத்துள்ள இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகாத வகையில், உங்கள் அனைவருக்காகவும், தமிழக மக்களுக்காகவும் என் எஞ்சியுள்ள வாழ்நாட்களை அர்ப்பணித்து, நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எத்தகைய சோதனைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் முறியடித்து, கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக உறுதியோடு இருந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழியில் கழகத்தை காப்போம், கவலை வேண்டாம். நம் இயக்கத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர், சிறப்பாக வழிநடத்திய ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் வழியில் அதே மக்களாட்சியை மீண்டும் அமைத்து “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை மனதில் வைத்து, தமிழக மக்களின் நலன் காப்பாற்றப்படும் என்று மனம் நிறைந்து சொல்கிறேன்.

இது உறுதி.

நாளை நமதே,

என  வி.கே சசிகலா அறிக்கையில் தெரிவித்திருந்தார்..

சென்னை மாநகராட்சியின் 340 வருட வரலாற்றில் தலித் பெண் மேயர் பதவியேற்பு..!

340 வருட வரலாற்றில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியில் திமுக சார்பில் முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர மா.சுப்பிரமணியன் போன்றோர் அலங்கரித்த நிலையில் இன்று திருவிக நகர் 74-வது வார்டு பகுதியில் வெற்றி பெற்ற பிரியா ராஜன் சென்னை மேயராக பொறுப்பேற்க உள்ளார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சென்னை மாநகராட்சியில் 153 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. மேலும் அதிமுக 15 இடங்களிலும், அமமுக, பாஜக தலா ஒரு இடங்கள் மட்டுமின்றி சுயேட்டைகள் 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் வார்டு உறுப்பினராக நேற்று பதவியேற்று கொண்டனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி முதன்முறையாக பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் சென்னை மாநகராட்சியின் அடுத்த மேயராக சென்னை திருவிக நகர் 74-வது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் திமுக தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்த 28 வயதான பிரியா ராஜன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டவேட்பாளரை 6,299 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்ற பிரியா ராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி என்பது மட்டுமின்றி பிரியா ராஜன் தந்தை பி.ராஜன், அப்பகுதியின் தி.மு.க துணைச்செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் சென்னை மாநகராட்சி, 1957 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகிய இரு பெண் மேயர்களாக பதவி ஏற்ற நிலையில் தற்போது பிரியா ராஜன் மூன்றாவது பெண் மேயரராகவும், முதல் தலித் மேயராக பிரியா ராஜன் பதவி ஏற்ற என்பதும் குறிப்பிடத்தக்கது.

வி.கே. சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தல்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடந்தது. கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின்னர் இந்த தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை செய்தார்.

அப்போது நிர்வாகிகள் சிலர், ” வி.கே. சசிகலா, தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். தமிழகத்தில் ஆட்சியை அ.தி.மு.க. தக்க வைத்திருக்கும். எனவே அவர்கள் இருவரையும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

பொறுப்பில்லாத மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையால் பாதிக்கபட்ட மாணவர்கள்..!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு உற்பட்ட வடுகபட்டியில் கடந்த பல ஆண்டுகளாகவே இரு தரப்பினர் இடையே விரோத போக்கு நடைபெற்ற நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிர் பலி வாங்கும் அளவிற்கு  விபரீதமானது. அதன்பின்னர் பல ஆண்டு காலம் பொதுமக்கள் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்  சேந்தமங்கலம் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

அதனைத்தொடர்ந்து சிறுசிறு சம்பவங்கள்அவ்வப்போது நடந்த வண்ணமே உள்ளது. 2021 புத்தாண்டு கொண்டாத்தின்போது மீண்டும் மோதல் வெடிக்க இதனைத்தொடர்ந்து மீண்டும் பகை மூண்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் குறித்து  மற்றொரு தரப்பினர் தரக்குறைவான வார்த்தைகள் பேசி வாட்ஸ் ஆஃப் வெளியிட அது பூதாகரமான நிலையில் காவல் நிலையம் செல்ல முயற்சி செய்தபோது  வாட்ஸ் ஆஃபில் தரக்குறைவான வார்த்தைகள் பேசி வெளியிட்டவர்கள் பெற்றோர் பிள்ளைகள் தெரியாமல் தவறு செய்து விட்டனர் நீங்கள் புகார் கொடுத்தால் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் இனிது போன்று பார்த்து கொள்கின்றேன் என்ன கோட்டுக்கொள்ள பாதிக்கபட்ட சமுதாயத்தினர் பெருந்தன்மையாக நடந்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த ஆங்கில புத்தாண்டு ஆண்டு அன்று ஒரு தரப்பு இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துகள் சாலையில் எழுதி உள்ளனர். அன்று இரவு மற்றொரு தரப்பு ஜாதி சங்க கொடியை யாரோ ஒரு சில சமூக விரோதிகள் கிழித்துள்ளனர் இந்த செயல் மற்றொரு தரப்பிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அன்று இரவு வாழ்த்துகள் சாலையில் எழுதிய கல்லூரி மாணவர்கள் சிலர் மீதி பஞ்சாயத்து துணை தலைவர் மற்றும் ஜாதி சங்க தலைவர் தூண்டுதலின் பேரில் புகார் கொடுத்து அழுத்தம் கொடுத்தனர்.

இதன்விளைவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் அவர்கள் உடனடி கைது செய்ய அழுத்தம் கொடுக்க சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஷ் அவர்கள் எதுவும் விசாரிக்காமல் நள்ளிரவில் தீவிரவாதிகளை கைது செய்வதை போல கைது செய்தார். கடைசியில் ஜாதி சங்க கொடியை கிழித்தவரே குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர். ஆனால் சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்தை விசாரிக்காமல் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் உத்தரவிட  சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஷ்  நள்ளிரவில் தீவிரவாதிகளை கைது செய்தது அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓ.பன்னீர்செல்வம் ரூ.500 கோடி கிராவல் மண் எடுத்ததான புகாரில் அதிகாரிகள் மீது விசாரணை

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஞானராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், “தேனி மாவட்டத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள கிராவல் மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது என தாக்கல் செய்துள்ளார். இதற்காக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஏராளமான புகார்களை அரசுக்கு கொடுத்துள்ளேன்.

கடந்த ஆண்டு ஜூலை 21-ந்தேதி லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகார் மீது விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், “இந்த குற்றச்செயலில் வருவாய் துறை, புவியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த தேனி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கிவிட்டார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் அனுமதி இன்னும் வழங்கவில்லை. அனுமதி கிடைத்ததும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி வி.பாரதிதாசன் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நிலுவையில் இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

எனவே, புலன் விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி கேட்டு காவல்துறை அனுப்பியுள்ள ஆவணங்களை தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் பரிசீலித்து தகுந்த உத்தரவை வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி அல்லது அதற்கு முன்பு பிறப்பிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கை பிப்ரவரி 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மாணவ-மாணவிகளை சாதியை சொல்லி திட்டிய தலைமை ஆசிரியை கைது

திருப்பூர் மாவட்டம் அருகே இடுவாயில் அமைத்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த மாதம் 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை பட்டியலின மாணவ-மாணவிகளை சுத்தம் செய்யச் சொன்னதாகவும், சுத்தம் செய்ய மறுத்த மாணவ-மாணவிகளை சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதாகவும் தலைமை ஆசிரியர் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின்பேரில் கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை செய்து பின்னர் தலைமை ஆசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணகுமார் தலைமை ஆசிரியை மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையில் கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய அந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கீதா நேற்று திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வி.கே.சசிகலா: முருகன் கோவிலுக்கு 35 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசம் மற்றும் தங்க கண் மலர்கள் காணிக்கை

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் மொளச்சூர் கிராமத்தில் புகழ்பெற்ற வள்ளி, தெய்வானை முருகன் கோவில் அமைத்துள்ளது. இந்த கோவிலில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வழிகாட்டு நடைமுறை உள்ளதால் தைப்பூச தினமான நேற்று முன்தினம் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று நடைபெற்ற கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். அப்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா கலந்துகொண்டு முருகபெருமானுக்கு ரூ.35 லட்சத்தில் 4 அடி உயரமும், 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கி சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் மொளச்சூர் பெருமாள் உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

தாராபுரம் நகராட்சிக்கு பொதுப்பணித் துறை தேவையா..?  மீண்டும் மீண்டும் தொடரும் சோகம் 

திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த 30 பேர் திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை பகுதியில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் தாராபுரம் வழியாக திருப்பூர் புறப்பட்டு வரும் வழியில் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஒருவர் புதைகுழியில் சிக்கி மூழ்கி உள்ளார்.

அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக 8 பேர் சென்று மீட்க முயற்சி செய்து புதைகுழியில் சிக்கி மூழ்கி உள்ளார். அருகில் இருந்த மற்றவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து சென்ற தாராபுரம் தீயணைப்புத் துறையினர் சரண், ஜீவா என்ற இரண்டு பேரை உயிருடன் மீட்டனர்.

பின்னர் புதைகுழியில் சிக்கி உயிரிழந்த அமிர்தகிருஷ்ணன், சக்கரவர்மன், ஸ்ரீதர், ரஞ்சித், யுவன், மோகன் என்ற 4 கல்லூரி மாணவர்கள், 1 பள்ளி மாணவர் உட்பட 6 பேரின் உடல்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாராபுரம் காவல்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த வங்கி ஊழியர் மணிகண்டன் என்பவர் மகன் சஞ்சய் கடந்த 10 ஆம் தேதி தெற்கு புறமுள்ள புதைகுழியில் சிக்கி உயிரிழந்த போது இந்திய ஃபஸ்ட் டெய்லி ஆன்லைன் செய்தியில் அதிகாரிகள் மெத்தனத்தால் தொடரும் சோகம்: புதை மணல் குறித்து அபாய எச்சரிக்கை பலகைகள் எங்கே..!? இனியாவது அபாய எச்சரிக்கை பலகைகள் பளிச்சிடுமா..!? என கேள்வி எழுப்பி இருந்தோம்.

ஆனால் பொதுப்பணித் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்விளைவு இன்று 5 மாணவர்கள் உட்பட 6 பேர் உயிர் பலியாகியுள்ளனர். இனியாவது பொதுப்பணித் துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு பொதுமக்கள் கண்களுக்கு அபாய எச்சரிக்கை பலகைகள் வைப்பார்களா..?