தலைவிரித்து ஆடும் ஊழல்: நல்லா.. இருக்கும் சாலைக்கு 3 கோடியா..?

ஒரு சாமானியன் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் வீடு கட்டி முடித்து பில் வாங்குவது என்றால் சாமானியனின் முழு ஆவியும் போய் அவருடைய வாயில் இருந்து நுரை தள்ளிவிடும் அளவிற்கு அவர் படும் பாடு அந்த இறைவனே ஒரு கணம் விழி பிதுங்கி நிற்பார். இது இன்றல்ல நேற்றல்ல பல ஆண்டுகளாகவே சாமானியன் படும் துயரம் சொல்லில் அடங்காது.

பத்து ஆண்டுகால அதிமுகவின் ஊழல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி தமிழகத்தில் விடியலை உருவாக்குவோம் என விடியல் வசனங்களை பேசி ஆட்சி பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக தமிழகம் முழுவதும் சாலைகள் சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதன் வரிசையில் கரூர் மாவட்டத்தில் சாலைப்பணிகள் மேற்கொள்ள ரூ.170 கோடி நிதியில் எம்.சி.எஸ்.சங்கருக்கு மட்டும் ரூ.140 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளன என முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுலவர் எம்.லியாகத்திடம் புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில் கரூர், ஈசநத்தம் சாலையில் உள்ள வால்காட்டுப்புதூர், வாங்கல் சாலையில் உள்ள என்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் சாலையில் புதிய சாலை அமைத்ததாக கூறி மோசடி நடந்துள்ளதாகவும் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் நன்றாக உள்ள சாலைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாக கூறி சுமார் 3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளன என புகாரில் தெரிவித்து மட்டுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில். ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ் சங்கர் ஆனந்த், கரூர் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி அவசர அவசரமாக சாலை போடும் பணி நடைபெற்றுள்ளது. இதனிடையே, விசாரணை நிறைவடையும் வரை சாலை போடும் பணியை நிறுத்தசொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் எம்.ஆர். விஜயபாஸ்கர் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தில் 4 முறையும், தலைமைச் செயலாளரிடமும் எம்.ஆர் விஜயபாஸ்கர் புகார் அளித்து மட்டுமின்றி தமிழக ஆளுநருக்கும் தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் நெடுஞ்சாலை துறையின் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமாவை, நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் பணியிடைநீக்கம் செய்துள்ளார். மேலும் உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோரை, திருப்பூர் மண்டல பொறியாளர் வளர்மதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

நெடுஞ்சாலைத்துறை கிராமப்புற சாலைகள் கோட்ட பொறியாளர் நித்திலன், உதவி கோட்ட பொறியாளர் முகமது ரஃபிக், கோட்ட கணக்கர் சத்யா, உதவி பொறியாளர்கள் தீபிகா, கார்த்திக்கை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.
கடந்த அரை நூற்றாண்டுகளாகவே அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி தமிழகம் முழுவதும் ஊழல் தலைவிரித்து, ஊழல் அதிகாரிகளை தட்டி கேட்க திறனில்லாத ஆட்சியாளர்கயாகவே வளம் வருகின்றார்கள் என்பதே ஒவ்வொரு சாமானியனின் மன குமுரலாக உள்ளது

தாராபுரம் நகராட்சி தந்தை பெரியார் சிலை அல்லது பேரறிஞர் அண்ணா அருகில் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவச் சிலை அமைக்க தீர்மானம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகர்மன்றக் அரங்கில் தாராபுரம் நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக நகர கழக துணைச் செயலாளரும் 26 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான தனலட்சுமி அயப்பன் அவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவச் சிலையினை தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தந்தை பெரியாரின் சிலையின் அருகில் அல்லது பேரறிஞர் அண்ணாவின் சிலை அருகில் அமைக்க வேண்டும் என இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் அளித்தார்.

மேலும் தமிழ் இனத்திற்காக உழைத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , டாக்டர் கலைஞர், சட்டமேதை அம்பேத்கர் மட்டுமின்றி இன்று தமிழகத்தில் நல்லாட்சி ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகிறோரின் திரு உருவப் படங்களை நகர்மன்ற அரங்கில் வைக்க 26 -வது வார்டு உறுப்பினர் தனலட்சுமி அயப்பன் அவர்களால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.‌

சேலம் ஆத்தூரில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்கு கருத்தரங்கம்

சேலம் மாவட்ட ஆத்தூர் A.T அங்கம்மாள் நினைவரங்கத்தில் மணிக்கூண்டு அருகில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்கு கருத்தரங்கம் கற்போம் பெரியாரியம் ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுகம் விழா நடைபெற்றது.

திராவிட தலைவர் வீரமணி புத்தகம் வெளியிட்டு விழா மற்றும் சிறப்புரை ஆற்றினார்.இந்த விழாவில் ஆத்தூர் திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் செழியன், மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் வார்டுகள் ஆய்வு

ஆத்தூர் நகராட்சி நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் இன்று 17 வது வார்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் குறைகளை கேட்டறிந்து உடன்யடியாக  குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.

அதேசமயம் அந்த பகுதியில் உள்ள சாக்கடைகள் கழிவறைகள் அனைத்தும் உடன்யடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று துப்புரவு பணியாளருக்கு உத்தரவு அளித்தார். அருகில் 17வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் தாவுத் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு நகரமன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் அன்னதானம் வழங்கல்

ஆத்தூர் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உழவர் சந்தை முன்பு உள்ள கலைஞர் திடலில் அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி நகரமன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் வார்டு செயலாளர் துரை, சில்லி முருகன் , அஸ்கர் அலி, பாஸ்கர், சம்பத்,பாபு, குமார்பிரபா ,மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கெங்கவல்லி பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வு

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டி பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நகர் புற அமைச்சர் நேருவிடம் மனு அளித்துள்ளனர். இதனை அடுத்து பஸ் நிலையம் அமைக்கும் இடத்தில் சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதாரம் நிலையம் பழுதடைந்து உள்ளது எந்த ஒரு பயன்பாடும் இல்லாத நிலையில் நேற்று சுகாதார நிலையம் அமைந்துள்ள இடத்தை பாழடைந்த கட்டிடத்தையும் துணை இயக்குனர் நெடுமாறன் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ராணி ,பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர் மருதாம்பாள் , வார்டு உறுப்பினர்கள் 4-வது வார்டு தங்கபாண்டியன் ஆறாவது வார்டு ஹம்சவர்த்தினி, 7-வது வார்டு சையது 3-ஆவது வார்டு லதா 13-வது வார்டு சத்யா 14-வது வார்டு முருகேசன் 15-வது வார்டு அருண் குமார் ,பேருராட்சி அதிகாரிகள் செல்லமுத்து, செல்வராஜ் கலந்து கொண்டனர்.

கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை ஆத்தூர் ஸ்ரீ ராம் பிரதர்ஸ் சந்திப்பு

இல்லம் தேடி கல்வித் திட்டம் மாபெரும் வெற்றியைக் கண்டுள்ள நிலையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் நிலை குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதியைச் சேர்ந்த பள்ளிகள் தொடர்பாக கோரிக்கைகளை தெரிவித்தனர்.

ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”இல்லம் தேடி கல்வி மாபெரும் வெற்றியைக் கண்டுள்ளது” எனத் தெரிவித்தார். .சேலம் மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்பு சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பொழுது மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஆத்தூர் ஸ்ரீ ராம் பிரதர்ஸ் 50-க்கும் மேற்பட்டோர் சந்தித்து பொன்னாடை போற்றினார்கள்.

ஆத்தூரில் மினி கிளினிக் அமைக்க நகர் மன்ற தலைவர் இடத்தை தேர்வு..

ஆத்தூர் நகராட்சி 15-வது வார்டு பகுதியில் 25 லட்சம் செலவில் மினி கிளினிக் அமைக்க நகர்மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் இடத்தை தேர்வு செய்தார் அருகில் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் பிரபா குமார், பாஸ்கர், நுத்தப்பூர் துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

நகர மன்ற தலைவர் தலைமையில் அதிகாரிகள் உடன் ஆய்வுக்கூட்டம்

ஆத்தூர் நகராட்சியின் நகரமன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் ஊழியர்கள் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்  நடைபெற்றது .இந்த கூட்டத்தில் நகரமன்ற தலைவர்  பேசியது.

அதிகாரிகளும் நகராட்சி ஊழியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் பொதுமக்கள் எந்த ஒரு குறைகள் சொன்னாலும் உடன்யடியாக அவர்களுக்கு பணிவுடன் பேசி நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே ஆத்தூர் நகராட்சி நிர்வாகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்கள்.

இந்த ஆய்வு கூட்டத்தில்  நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அமமுக’வின் 5-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் அமமுக கொடியேற்றம்

மறைந்த முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களில் (அதிமுக) விளைவாக அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே லட்சியம்’ என்கிற முழக்கத்தோடு டி.டி.வி தினகரன் அவர்கள் 2018, மார்ச் 15-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்றோடு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அமமுக’வின் 5-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அமமுக’வின் 5ம் ஆண்டு துவக்க விழா நிகழ்வாக திருப்பூர் புறநகர் மாவட்டம், தாராபுரம் நகரத்தில் கழக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்லத்துரை அவர்கள் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை இணை செயலாளர் தங்கநாயகி பெரியசாமி அவர்கள் முன்னிலை வகிக்க, வார்டு பொருப்பாளர் நாகராஜ் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.