அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி

மாற்றுத்திறனாளி மாணவி ஆர் ஷிவானி போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சாசி சிவசங்கர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகத்தில் 2024-2025 -ஆம் கல்வியாண்டில் + 2, SSLC தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 -ஆம் தேதி வரை நடைபெற்றன.+ 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர். விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி அந்த பணிகள் நிறைவடைந்தன.

அத்தனை தொடர்ந்து மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிளஸ்-2 தோ்வு முடிவுகள் மே-9-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், +2 தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்து இருந்தனர்.

இந்நிலையில், அரியலூர் CSI மேல்நிலைப் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி R. ஷிவானி சமீபத்தில் வெளியான + 2 பொது தேர்வில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார் .அதனையடுத்து மாணவி R. ஷிவானி அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் , போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சாசி சிவசங்கரை, தனது தாய் பிரசன்னா தேவியுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வின் போது சாய்பாபா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ் எம் சந்திரசேகர், பள்ளியின் தாளாளர் புனிதவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் நேற்று புதன்கிழமை, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நோயாளிகளிடம் தாயன்பு காட்டி சேவையாற்றும் செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவை ஆற்றும் செவிலியர்களை போற்றும் விதமாக உலக செவிலியர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

செவிலியர் பணியில் தம்மை அர்ப்பணித்து பெரும் போற்றுதலுக்குரியவராக திகழ்ந்தவர் நைட்டிங்கேல் அம்மையார். நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1974-ம் ஆண்டு முதல் உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமையில், தலைமை மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலையில் VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துவிழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியினை செவிலியர் உமா மஹேஸ்வரி மற்றும் செவிலியர் மல்லிகா தொகுத்து வழங்கினார்கள்,செவிலியர் உமா மஹேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி. ஜெகதா அவர்கள் வாழ்த்து மடல் வாசித்தார். செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி. பத்மாவதி, ராசாத்தி , ஜெகதா, வசந்தி மற்றும் முத்துலெட்சுமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

தலைமை மருத்துவர் ஜெஸ்லின் , மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியர்கள் என பாராட்டி, தியாக மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைத்து செவிலிய சகோதர, சகோதரிகளுக்கும், செவிலியர் தின வாழ்த்துக்களை கூறி அனைவருக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார். தலைமை மருத்துவர் ஜெஸ்லின் அனைத்து செவிலியர்களின் சார்பாக தலைமைச் செவிலியர் பத்மாவதி அவர்களையும், தென்காசி மருத்துவமனையோடு இணைந்து செயலாற்றும் VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் அவர்களையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் அவர்கள் அனைவரையும் வாழ்த்தி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செவிலிய சகோதர சகோதரிகளின் ஆட்டம் பாட்டம் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் மருத்துவர் ஜெஸ்லின் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி.ஜெகதா நன்றி தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ: போதையில் பேருந்தில் ஸ்டேரிங்கின் மேல் படுத்து உறங்கிய ஓட்டுநர் ..!

போதையில் மயங்கியபடி பேருந்தில் ஸ்டேரிங்கின் மேல் படுத்து உறங்கிய ஓட்டுநரின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தை ஓட்டுநர் குடிபோதையில் இயக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி செல்வதற்காக 35 பயணிகளுடன் நேற்று அரசு பேருந்து புறப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மூர்த்தி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், பேருந்து பொள்ளாச்சி பகுதியில் இருந்து உடுமலை ரோடு கோமங்கலம் புதூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டு இருக்கும்போது, ஓட்டுநர் அருள் மூர்த்தி மது போதையில் இருக்கையிலேயே தள்ளாடினார். அதிர்ச்சி அடைந்த பயணிகள் என்னவென்று பார்த்தபோது ஓட்டுநர் இயல்பான நிலையில் இல்லை என தெரிய வந்துள்ளது.

இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டபோது, மது போதையில் உளறியபடி பேருந்தை அஜாக்கிரதையாக இயக்கியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பயணிகள் அனைவரும் கூச்சலிட்டதால், பேருந்தை ஓட்டுநர் இயக்க முடியாமல் நடுவழியில் நிறுத்திவிட்டு மது போதையில் மயங்கியபடி பேருந்தில் ஸ்டேரிங்கின் மேல் படுத்து உறங்கி உள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் ராணுவ வீரர்கள்: செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!

செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். ஜம்மு -காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் தாக்குதல் போர் நடவடிக்கை தான் என்றும் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என பாகிஸ்தான் கொக்கரித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நேற்று அதிகாலையில் சீனா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் இந்தியா எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா வழங்கிய பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதற்கிடையே பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மேலும் மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்தார். அப்போது, “2 நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக கூறுகிறது. .

ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” செல்லூர் ராஜு தெரிவித்தார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், செல்லூர் ராஜூ பேச்சை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தினர். எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் என முன்னாள் ராணுவத்தினர் பேசினார்.

தமிமுன் அன்சாரி: பாஜகவினரின் மனதில் ஃபாசிச பயங்கரவாதம் பரவி இருக்கிறது..!

பாஜகவினரின் மனதில் ஃபாசிச பயங்கரவாதம் பரவி இருக்கிறது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல் படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசுகையில், “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்” என்று பேசினார்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல் படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசுகையில், “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்” என்று பேசினார். இந்நிலையில் கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

இது குறித்து தமிமுன் அன்சாரி பேசுகையில். நமது ராணுவத்தில் பணியாற்றும் ஒரு பெண் உயர் ராணுவ அதிகாரியை இழிவுபடுத்தும் வகையில், அவரை மதத்துடன் தொடர்புப்படுத்தி, எதிரி நாட்டின் மகள் என்று கூறக்கூடிய அளவிற்கு பாஜகவினரின் மனதில் ஃபாசிச பயங்கரவாதம் பரவி இருக்கிறது. தேசப்பற்றை அரசியல் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு, கர்னல் சோபியா குரேஷியின் தியாகம் பற்றி பேச தகுதி இல்லை என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்: போக்சோ வழக்கில் கைதான மத போதகருக்கு நிபந்தனை ஜாமின்.. !

போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ். கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 17 வயது மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். அந்த 2 சிறுமிகளையும் ஜான் ஜெபராஜ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் தரப்பில் இருந்தும் ஜான் ஜெபராஜ் மீது கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் ஜான் ஜெபராஜ் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜான் ஜெபராஜை காவல்துறை தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை என்பதால் தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர்.

மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சென்று காவல்துறை ஜான் ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது. இவ்வாறு ஜான் ஜெபராஜை காவல்துறை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கேரள மாநில சுற்றுலா பகுதியான மூணாறில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறை ஜான் ஜெபராஜை கைது செய்தனர். அதன்பின்னர் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

ன்னர் மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்ட ஜான் ஜெபராஜுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தள்ளுவண்டி கடைக்கும் பாஸ்ட் புட் கடைக்கும் சண்டை… கடைசியில் உடைந்தது தள்ளுவண்டி காரரின் மண்டை..!

நாமக்கல் பரமத்தி சாலை போதுப்பட்டியில் கொங்குநகர் காலனியை சேர்ந்த ஜோதிமலர், அவரது மகள் நிஷாஸ்ரீ ஆகியோர் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் காவேட்டிப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தள்ளுவண்டி கடை வைத்து இட்லி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த மே 12-ஆம் தேதி அன்று இரவு ஸ்ரீதர் ‘பாஸ்ட் புட்’ கடைக்கு சென்று சிக்கன் ரைஸ் ஆர்டர் கொடுத்து இருக்கிறார்.

அது தயார் செய்து வருவதற்குள் கடையில் இருந்த ஜோதிமலர் மற்றும் நிஷாஸ்ரீ ஆகியோருக்கும், ஸ்ரீதருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் சேர்ந்து ஸ்ரீதரை தாக்க தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் இது குறித்து நிஷாஸ்ரீ தனது கணவர் மவுலீஸ்குமாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தாராம். மேலும் அப்போது சம்பவ இடத்துக்கு மவுலீஸ்குமார் தனது நண்பர் பிலிக்ஸ் என்பவரை அழைத்து வந்தாராம். அப்போது கடை முன்பு நின்று கொண்டு இருந்த ஸ்ரீதரை உருட்டு கட்டை மற்றும் சிக்கன் ரைஸ் செய்ய பயன்படுத்தப்படும் கரண்டி ஆகியவற்றை கொண்டு கடுமையாக தாக்கி உள்ளார்களாம்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ஸ்ரீதரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீதரின் மனைவி பூமதி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்கள். அதில், இந்த கொலை சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொழில் போட்டியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஸ்ரீதரை அவர்கள் காலி செய்தது காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து ஜோதிமலர், நிஷாஸ்ரீ, மவுலீஸ்குமார், பிலிக்ஸ் ஆகியோரை காவல்துறை கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தப்பிக்க உதவிய நாமக்கல் மதுரைவீரன் புதூரை சேர்ந்த கோபிநாத் மற்றும் அடைக்கலம் கொடுத்த கொல்லிமலை தின்னனூர் நாட்டை சேர்ந்த அரவிந்த் என்பவறரையும் கைதானார். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக கடலுக்குள் காற்றாலை அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

வங்க கடலோரம் அமைந்துள்ள கடலுக்குள் காற்றாலை அமைப்பது தொடர்பாக சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. குஜராத்திற்கு அடுத்தபடியாக சுமார் 1076 கிலோ மீட்டர் மிக நீளமான கடற்கரையை கொண்ட இந்தியாவின் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. புவி வெப்பமயமாதலால் உலகின் தட்பவெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக புவி வெப்ப மயமாதலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக புதுப்பிக்க கூடிய எரிசக்தியை பயன்படுத்த உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில், உலகம் முழுவதும் பல முன்னேறிய நாடுகளில் கடலில் காற்றாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரிக்கும் போது எந்த மாசும் ஏற்பட போவது இல்லை. அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்களில் மின் உற்பத்தியை ஒப்பிடும் போது இதில் கார்பன் உமிழ்வு உள்ளிட்டவை கிடையாது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளும் இதனை விரும்ப தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் மிக நீளமான கடற்கரை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ள தமிழகமும் கடலில் காற்றாலை அமைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முடிவை கையில் எடுத்துள்ளது. வங்க கடலோரத்தில் அமைந்துள்ள தமிழகத்தில் கடல் காற்று நிலையானதாக இருக்கும். இதனால், நம் நாட்டிலேயே இங்கு தான் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் எளிதாக செயல்படுத்த முடியும் என்பது நிபுணர்கள் வாதமாக உள்ளது.

கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். இதற்காக விரைவில் டென்மார்க் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது எனவும் அப்போது முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லபடுகிறது. கடலில் காற்றாலை அமைப்பதற்கான டெக்னாலஜி என்பது இந்தியாவில் இல்லை. இதனால், டென்மார்க்கில் இருந்து கொண்டு வந்து இந்தியாவில் முதல் முறையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் ஆவதோடு, புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். தென் மாவட்டங்கள் கடலோர பகுதிகள் இதனால், வளர்ச்சி அடையும். கடலில் காற்றாலை அமைத்து, பெரிய ராட்சத குழாய்களை பயன்படுத்தி அதற்குள் வயர்கள் பதித்து மின்சாரத்தை கரைக்கு கொண்டு வரப்படும். இதற்காக புதிய காற்றாலைகளை உருவாக்க வேண்டும். விரைவில் இந்த பணிகள் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக டென்மார்க்கில் உள்ள டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி, டென்மார்க் தூதரகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இடையே உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை மவுண்ட் ரோடில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. நடைபெற்றது.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 பேரின் பணத்தை ஏப்பம் விட்ட பெண் கைது..!

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 பேரின் பணத்தை ஏப்பம் விட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரை தெரியும், அந்த அதிகாரியை தெரியும்.. அவர் என் மச்சான்.. அவர் என் மாமா.. என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று பலர் லட்சக்கணக்கில் ஏமாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட மீஞ்சூர், புங்கம்பேடு, பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு தனது உறவினர் மூலம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக வேலை செய்து வருவதாக கூறி ஜோதி என்ற பெண் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்கள் என சுமார் 25 நபர்களிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பல தவணைகளாக மொத்தம் ரூ.10 லட்சம் வரை திரட்டி ஜோதியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட ஜோதி யாருக்கும் வேலை வாங்கி தராமல் சதீஷ்குமாரை பணமோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் சதீஷ்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மோசடியில் ஈடுபட்ட மீஞ்சூர் வ.உ.சி தெருவை சேர்ந்த ஜோதி என்ற மாதுரி என்பவரை காவல்துறை கைது செய்தது.

பொள்ளாச்சி தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் பரிசு..!

பொள்ளாச்சி தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என்று நான் நினைக்கிறேன்” என .முக்குலத்தோர் புலிப்படை நிறுவுனத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார். தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள சின்னப்பாளையம் அருகில் 2019-ஆம் ஆண்டு மாணவிகள், இளம் பெண்களை என பலரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட சம்பவம் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை CBI விசாரித்த நிலையில், 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் ஐந்தாம் குற்றவாளியான மணிவண்ணன் ஆகியோரின் ஐபோன் மற்றும் லேப்டாப்பில் இருந்து நூற்றுக்கணக்கான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த மாதம் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று கோயம்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், இரண்டாம் குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் ஐந்தாம் குற்றவாளியான மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மூன்றாம் குற்றவாளியான சதீஷ் மற்றும் ஏழாவது குற்றவாளியான ஹேரன் பால் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நான்காவது குற்றவாளியான வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ஆறாம் குற்றவாளியான பைக் பாபு, எட்டாம் குற்றவாளியான அருளானந்தம் மற்றும் ஒன்பதாம் குற்றவாளியான அருண் குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சாகும் வரை ஆயுள் தண்டனை என்பதால், ஒரு ஆயுள் தண்டனையும், 5 ஆயுள் தண்டனையும் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களின் கேள்விக்கு கருணாஸ் பதிலளித்தார். அப்போது, “அதிமுக ஆட்சிக்காலத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை வெளியிட்டார்கள். இது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் நடந்த அருவருப்பான செயல். இதில் அவரது கட்சிக்காரர்களின் பிள்ளைகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று வழக்கின் விசாரணையை நடத்தாமல் முடக்கி வைத்து இருந்தனர்.

இன்று மக்கள் சட்டத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. என்னை பொறுத்தவரை பொள்ளாச்சி வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என்று நான் நினைக்கிறேன்” என கருணாஸ் தெரிவித்தார்.