காயத்ரி ரகுராம்: மோடி பொய்களாலும், மோடி ஆட்சியாலும் மக்கள் சோர்வடைந்துள்ளனர்…! சதவீதம் வெகு தொலைவில் இல்லை…!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளின் ஆளும் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சியை தொடர முயல்கிறது. இதை முறியடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்துள்ளது. அதோபோல தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் நவம்பர் 30 தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளிலும், மிசோரமில் நவம்பர் 7, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25, வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராஜஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த ஆட்சியை அமைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில், கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தனது நடிகை காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில், 329/638 பாஜக வெற்றி பெற்றது. 309/638 மற்றவர்கள். சதவீதம் வெகு தொலைவில் இல்லை. 2024க்கான காங்கிரஸுக்கு இது எளிதான இலக்கு. 49% பேர் மோடியையும் பாஜகவையும் எளிமையாக விரும்பவில்லை.

மேலும் அண்ணாமலை தெலுங்கானாவில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நட்சத்திர பிரச்சாரகர் அண்ணாமலையை காங்கிரஸ் தவறவிட்டது. தென்னிந்தியா பாஜக மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது. பாஜக தெற்கில் நுழைய முடியாது. அவர்கள் வடக்கையும் தெற்கையும் பிரித்துள்ளனர். தெற்கில் வளர்ச்சி இல்லை. தெற்கில் வளர்ச்சி இல்லை. தமிழகத்தில் பாஜக வளர்ச்சி 0, அண்ணாமலையின் பொய் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அனைத்தும் ஒளியியல் மட்டுமே. ஒளியியல் வேலை செய்யாது கண்ணா.

2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டிற்கும் இன்னும் பந்தயம் என்று என்னால் சொல்ல முடியும். இது வெற்றிகரமான வெற்றியாக இருக்காது. இது ஆரோக்கியமானது. மோடி பொய்களாலும், மோடி ஆட்சியாலும் மக்கள் சோர்வடைந்துள்ளனர். 5 மாநிலத் தேர்தலும் பாஜகவுக்கு வெற்றியல்ல. 2024 ராகுல் காலம். ராகுல் கலாம் இந்தியாவுக்காக பணியாற்றுகிறார் என தெரிவித்துள்ளார்.

அங்கப்பிரதிட்சணம் செய்யச் சொல்லுங்கள்…! அண்ணாமலையை காயத்திரி ரகுராம் கடுமையாக விமர்சனம்..!

திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு என்பவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடத்தினர்.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அங்கிட் திவாரியின் வீடு, அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது .பணம் வசூலித்து பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது, ”லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது முதல் கிடையாது, கடைசியாகவும் இருக்கப் போவதில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி என பல மாநிலங்களில் இதுபோல் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை பொறிவைத்துப் பிடித்துள்ளனர். இவ்வாறாக பிடிக்கும் அதிகாரம் அத்துறைக்கு உள்ளது. சிக்கிய பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்குச் சொல்லிக் கொள்ளலாம். அதனால் இந்தக் கைதோ, ஊழல் தடுப்புத் துறையின் நடவடிக்கையோ நியாயமானதே. அதை மறுப்பதற்கு இல்லை.

ஆனால் ஒரு தனி மனிதர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத் துறையையுமே குறை சொல்ல முடியாது. தமிழக காவல்துறையில் யாரேனும் ஒருவர் தவறு செய்தால் காவல்துறையே மோசம் என்று சொல்லிவிட முடியாது அல்லவா? அதுபோலத்தான் இதுவும். நேற்று அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை தொழில்முறை பார்வையோடு அணுக வேண்டும். இதற்காக மொத்த அமலாக்கத் துறையுமே இப்படித்தான் என்று சாயம் பூச முடியாது.

ஆனால், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு தனி மனிதத் தவற்றை கட்சியோடும் தலைவர்களுடன் ஒப்பிடுகின்றனர்.தமிழகம் இப்படியான அரசியல்வாதிகளைக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் சாபக்கேடு அந்த சாபக்கேட்டை 2026-ல் பாஜக விலக்கும்” என தெரிவித்தார்.

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய கருத்திற்கு காயத்திரி ரகுராம் தனக்கு எக்ஸ் தளத்தில் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார்.

காயத்திரி ரகுராம் தனக்கு எக்ஸ் தளத்தில் அங்கப்பிரதிட்சணம் செய்யச் சொல்லுங்கள். திமுக files – திமுகவில் யாரேனும் தவறு செய்தால், அரசியலில் இல்லாத குடும்பத்தினர் அனைவரையும், ஒட்டுமொத்த தமிழக அரசையும், ஒட்டுமொத்த தமிழ்நாடு காவல்துறையும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மாநிலத்தையும் குற்றம் சாட்டி மச்சூரிட்டி குறித்து பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்கு எவ்வாறு தப்பிச் செல்கின்றனர் …, அவர்களுக்கு யார் உதவுகிறார்கள்?

பெண் குழந்தைக்கு தாயாக தனித்து வசித்து வந்த நடிகை கௌதமிக்கு பாஜக பிரமுகரான அழகப்பன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். நடிகை கௌதமிக்கு அவரது குழந்தைக்கும் அழகப்பனின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் ஆறுதலாக இருந்த காரணத்தால் கௌதமி அழகப்பனை முழுமையாக நம்பினார். மேலும் தனக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கோட்டையூரில் உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை நல்லவிலைக்கு விற்று தருமாறு கவுதமி நம்பிக்கைக்குரிய அழகப்பனை அணுகி கேட்டுள்ளார்.

அழகப்பனும் தனக்கு தெரிந்த சென்னை அண்ணாநகர் 6 ஆவது அவென்யூவை சேர்ந்த பலராம், செங்கல்பட்டு மகிந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோரை கௌதமிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக கௌதமிக்கு உறுதி அளித்தனர்.

இதையடுத்து அந்த நிலத்தை கடந்த 2015 -ம் ஆண்டு பலராமன், ரகுநாதன் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணமாக கௌதமி எழுதி கொடுத்தார். பின்னர் அந்த இடத்தை தனியார் நிறுவனம் வாங்க விரும்புவதாக அந்த இருவரும் கௌதமியிடம் தெரிவித்தனர். மேலும் நிலத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி ரூ 4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2 தவணையில் பணத்தை கொடுத்துவிட்டு கௌதமியிடம் கையெழுத்து பெற்றனர்.

இந்நிலையில் தான் கடந்த 2021 -ம் ஆண்டு செப்டம்பர் 24 -ம் தேதி வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து கௌதமிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ. 11,17,38,907 க்கு விற்பனை செய்ததில் கேபிட்டல் கெய்ன்ஸ் டேக்ஸ் ரூ 2.61 கோடி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதை கண்டு கவுதமி மன உளைச்சலுக்கு ஆளானார். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நிலம் விற்பனை தொகையில் 25 விழுக்காடு ரூ.2,61,25,637 கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ரூ 4.10 கோடிக்கு விற்பனையானதாக பலராமனும் ரகுநாதனும் சொன்னதன் பேரில் கௌதமி ரூ.65,31,500 வரி கட்டியுள்ளாராம். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.

வருமான வரித் துறை கடிதத்தால் சந்தேகம் அடைந்த கவுதமி சொத்து விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து பார்த்த போதுதான் 8.16 ஏக்கர் நிலத்தை 2016-ம் ஆண்டு பலராமனும் ரகுநாதனும் ரூ 11,17,38,907 க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதில் 4.10 கோடியை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 7,07,38,908 பணத்தை மூவரும் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கௌதமி இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பல நாட்களாகியும் இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து எல்லாவற்றையும் வெளிப்டையாக சொன்ன கௌதமி, பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த கடிதமும் எழுதினார்.

இந்நிலையில் நடிகை கௌதமியின் புகாரின் பேரில் அழகப்பன், அவருடைய மனைவி நாச்சி அழகப்பன் , மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.அவர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் அவர்கள் 6 பேரும் தலைமறைவானார்கள். அவர்களை காவல்துறை தேடி வருகிறாரக்ள். அவர்கள் வெளிநாடு தப்பி விட்டார்களா என்பது தெரியவில்லை.

இந்நிலையில் நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவருடைய மனைவி நாச்சியம்மாள் வெளிநாடு தப்பிச் சென்று இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைமறைவாக உள்ள 6 பேரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டும் உள்ளது.

இந்நிலையில் கௌதமிக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், அனைத்து மோசடியாளர்களும் மற்ற நாடுகளுக்கு எவ்வாறு தப்பிச் செல்கின்றன, அவர்களுக்கு யார் உதவுகிறார்கள்? ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும். சாமானியர்கள் இந்த உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும், அரசியல் பலம் வாய்ந்தவர்களால் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

“உங்களின் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் ..” – மன்சூர் அலிகான் மீது குஷ்பூ காட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். மன்சூர் அலிகானும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்தார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த மன்சூர் அலிகான், “த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன். மிஸ் ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மன்சூர் அலிகான் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரையுலகில் நடிகைகள், நடிகர்கள் பெரும்பாலானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை குஷ்பூ, அவரது எக்ஸ் தளத்தில், “இவர்கள் தாங்கள் செய்த தவறுகளை மறைக்க மற்றவர்களின் தவறுகளை உதாரணங்களாக காட்டி தங்கள் செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.

மற்றவர்களை குறை சொல்லும் முன் முதலில் உங்களை நீங்களே எண்ணிப்பாருங்கள் மன்சூர் அலிகான். உங்கள் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் நீங்கள் எத்தகைய ஆணாதிக்க, அகங்காரம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து விடபட முடியும் என நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும், அது முடியாது. மன்னிப்பு கேட்பதால் உங்கள் ஆண்மையின் அடையாளம் பறிபோகாது. மாறாக உங்கள் வீட்டு பெண்களுக்கு கண்ணியத்தைக் கொடுக்கும். நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை போலவே தனிப்பட்ட முறையில் இருந்திருக்கலாம். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்..!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா கொரானா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்கள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கொரானா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து இன்று கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா கொடி ஏற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வரும் 20ஆம் தேதி வசனம் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்வும், 21ம் தேதி குண்டம் வைத்து பூ போடுதல் நிகழ்வுகளும் இருபத்தி இரண்டாம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்வும் இருபத்தி மூன்றாம் தேதி தேர் வடம் பிடித்து ஊர்வலம் வரும் நிகழ்வும் இருபத்தி நான்காம் தேதி மகா தரிசனம் நிகழ்வும் இருக்குமென விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரியங்கா காந்தி: பாஜக அரசின் கொள்ளைச் சிந்தனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், இது திருவிழா நேரம். பணவீக்கம் குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர். ஆனால் பாஜக அரசின் கொள்ளைச் சிந்தனை, பண்டிகைக்கு முன் பணவீக்கத்தைக் குறைக்காமல், காஸ் சிலிண்டர், பெட்ரோல்-டீசல், எண்ணெய், காய்கறிகளின் விலையை விண்ணுக்கு உயர்த்தியது.

மேலும் தேர்தல் நேரத்தில், 1-2 ரூபாய் குறைத்து, பா.ஜ., மக்கள் மத்தியில் சென்று, அதற்கு தகுந்த பதில் கிடைக்கும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்து தானிய விற்பனைக் கூடங்களாக மாற்றுவோம்

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தொடங்கிய அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் சுமார் ஓராண்டாக போராடி வருகின்றனர். இந்த போராட்டக்களங்களை சுற்றி காவல்துறை வேலி அமைத்து இருந்தனர். இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உண்டு என்றாலும், கால வரையின்றி போக்குவரத்தை மறிக்க முடியாது என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து காசிப்பூர், திக்ரி எல்லைகளில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை போலீசார் அகற்றியுள்ளனர். டெல்லி எல்லைகளில் தடுப்பு வேலிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கூடாது என விவசாயிகள் மத்திய அரசுக்கு அவர்கள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.

இது குறித்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி நடந்தால், நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்து அவற்றை தானிய விற்பனைக் கூடங்களாக மாற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.

பிரதமர் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை  ரூ.100-ஐ கடந்து விட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ எட்டி விட்டது. இதற்கிடையே பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளனர்.

இந்நிலையில்  மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில்,  100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை அமைச்சர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும்.  மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டும் போது கொண்டாட மற்றொரு வாய்ப்பு  இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

ப்ரியங்கா காந்தி: மோடிஅரசாங்கத்தால் மோடியின் கோடீஸ்வர நண்பர்கள் தினமும் 1000 கோடி சம்பாதிக்கிறார்கள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில். நீங்கள் தினமும் விலையுயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கும்போது நினைவில் கொள்ளுங்கள்.மோடி அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி மூலம் 23 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது.

நீங்கள் தினமும் விலையுயர்ந்த எண்ணெய் மற்றும் காய்கறிகளை வாங்கும்போது நினைவில் கொள்ளுங்கள். இந்த அரசாங்கத்தில், 97% குடும்பங்களின் வருமானம் குறைந்தது, ஆனால், மோடியின் கோடீஸ்வர நண்பர்கள் தினமும் 1000 கோடி சம்பாதிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி: இறுதிவரை நாங்கள் நீதிக்காக போராடுவோம்

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அவரது ட்விட்டர் பக்கத்தில், இறுதிவரை நாங்கள் நீதிக்காக போராடுவோம். மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கொலையாளிகள் கைது செய்யப்படும்போது தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் கூறுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.