குழந்தைகள் முன்னிலையில் பெண் ஆய்வாளர் கைது..!

பொழுது விடிந்தால் “தொழிலாளர் தினம்” மே 1 உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகளையும், தொழிலாளர் இயக்கத்தையும் நினைவுகூரும் நாள். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். இந்த தொழிலாளர் தினத்தை நாடே விடுமுறை நாளாக கொண்டாட தயாரானது. அதேபோல பெண் ஆய்வாளரும் தொழிலாளர் தினத்தை குடும்பத்துடன் கொண்டாட  தயாரானார்.

அடுத்த நாள் மே 1 புதன் கிழமை மூன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவனை பார்க்க திருச்சூர் செல்லும் வழியில் ஏற்கனவே பேசிய டீலிங் மூலம் கைக்கு பணம் வரப்போகிறது. ஏன் அதை விடவேண்டும் பார்த்துக் கொள்ளலாம் நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற அசட்டு தைரியத்தில் செயல்பட்ட பெண் ஆய்வாளருக்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் காட்டிய பாடம் தவறு செய்யும் அனைவருக்கும் ஒரு படமாக அமைகின்றதோ இல்லையோ..? மூன்று குழந்தைகளுடன் ஒரு காரை ஓட்டி பெண்ணுக்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் செய்த சம்பவம் அந்த பெண் வாழ்நாள் முழுவதும் இரணமாக அமையும்.

கேரள மாநிலம் கொச்சி வைட்டிலாவில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் எட்டாவது கட்டிட ஆய்வாளரான ஸ்வப்னா பணியாற்றி வருகின்றார். ஏற்கனவே வைட்டிலா மாநகராட்சி மண்டல அலுவலகம் மீது  ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்பு, எல்.டி.எஃப் கவுன்சிலர் பி.எஸ். பிஜு, மாநகராட்சியில் உள்ள ஒரு வருவாய் அதிகாரி சட்டவிரோத கட்டிடத்தை முறைப்படுத்த ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த விவகாரம் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, மேயர் விஜிலென்ஸ் விசாரணையை அறிவித்தார். ஆனாலும் விஜிலென்ஸ் விசாரணை என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், வைட்டிலாவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ஐந்து மாடி கட்டிடத்திற்கு கட்டிட அனுமதி  எண் ஒரு கட்டிட உரிமையாளர் பெற விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் ஆய்வாளரான ஸ்வப்னா அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தியுள்ளார். பின்னர், கட்டிட உரிமையாளர் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்து ஆய்வாளர் ஸ்வப்னாவை சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு ஏதோதோ காரணம் கூறிய ஆய்வாளர் ஸ்வப்னா இதனை சரிசெய்ய  ஒவ்வொரு தளத்திற்கும் ரூ.25,000 செலவாகும் என தெரிவித்துள்ளார்.  ஆனால் கட்டிட உரிமையாளர் என்னால் ரூ.25,000 கொடுக்க முடியாது கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என பேரம் பேச கடைசியாக ரூ 15,000 கொடுக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பாத கட்டிட உரிமையாளர், தன்னிடம் லஞ்சம் கேட்ட கட்டிட ஆய்வாளருக்கு பாடம் புகட்ட விரும்பினார். இதுதொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். அதன்பேரில், விஜிலென்ஸ் அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கட்டிட உரிமையாளரிடம் கொடுத்து, ஆய்வாளர் ஸ்வப்னாவிடம் வழங்குமாறு தெரிவித்தனர்.

இந்நிலையில், கட்டிட உரிமையாளரும் , ஆய்வாளர் ஸ்வப்னாவை தொடர்பு கொண்டார். வழக்கமாக, நம்பகமான ஆட்கள்  மூலம் பணம் வசூலிக்கும் ஆய்வாளர் ஸ்வப்னா மறுநாள் மே தினம் என்பதால், ஸ்வப்னா திருச்சூரிலுள்ள கணவனை பார்க்க வீட்டிற்கு செல்லும்போது வழியில் இந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்தார். விஜிலென்ஸ் கொடுத்த பணத்துடன் கட்டிட உரிமையாளர் ஸ்வப்னா குறிப்பிட்ட மூன்று இடங்களுக்கு வந்தாலும் ஸ்வப்னா வரவில்லை.

ஆனாலும் கட்டிட உரிமையாளரும், விஜிலென்ஸ் அதிகாரிகளும் பெண் ஆய்வாளரை விடுவதாக இல்லை. மீண்டும் நான்காவது இடம் குறிக்கப்பட்டது. இறுதியாக, ஆய்வாளர் ஸ்வப்னா தனது மூன்று குழந்தைகளுடன் ஒரு காரை ஓட்டி, வைட்டிலாவில் உள்ள பொன்னுருண்ணி பாலம் அருகே லஞ்சம் வாங்க முடிவு செய்தார். அந்த சமயத்தில், விஜிலென்ஸ் அங்கு மறைந்து நின்று கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கட்டிட உரிமையாளரிடம் இருந்து ஆய்வாளர் ஸ்வப்னா வாங்கியபோது அங்கு மறைந்து நின்று விஜிலென்ஸ் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் ஆய்வாளர் ஸ்வப்னாவின் மூன்று குழந்தைகள் காரில் இருந்ததால் திருச்சூரில் உள்ள ஆய்வாளர் ஸ்வப்னாவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகளை அழைத்து செல்லும்படி தெரிவித்தனர். ஆய்வாளர் ஸ்வப்னாவின் கணவர் திருச்சூரில் இருந்து சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்தார். ஆய்வாளர் ஸ்வப்னா இவ்வளவு நேரம் காரில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்தனர். 3 குழந்தைகள் முன்னிலையில் ஆய்வாளர் ஸ்வப்னாவை 4 மணி நேரத்திற்குப் பிறகு கைது செய்த யாராலும் மறக்க முடியாத சம்பவம் ஆகும். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

டவல் மூலம் மூச்சுத்திணறடிக்க வைத்து மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாய்..!

மாணவர் சங்கமத்தில் மலர்ந்த கள்ளக்காதலால் பறிபோன உயிர்கள்..:

அந்த காலத்தில், கூட்டுக் குடும்பத்தில் அன்பு பெரிதாக இருக்க, சாகும் வரை இணை பிரியாத உறவு இருந்தது. பெண்கள் வயதுக்கு வந்தவுடனே திருமணம் செய்து வைத்தனர். என்று பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்களோ அன்று இருந்து, கள்ள உறவுகள் ஆரம்பித்தன என்று சொல்லும் அளவிற்கு கள்ளக்காதல் பெருகியுள்ளது. மேலும் ஸ்மார்ட் போன்கள் மக்கள் கைகளில் வரத்தொடங்கியதோ, அன்றே சிறுவர்கள், இளைஞர்கள், குடும்பப் பெண்கள் என பலர், காம வலைகளில் சிக்கி, தங்கள் குடும்ப வாழ்க்கையை சீரழித்து கொண்டுள்ளனர்.

இப்படி நாளுக்கு நாள் கள்ளக்காதல்கள் காரணமாக பச்சிளம் குழந்தைகளையும் பெற்ற தாய்கள் துடிதுடிக்க கொல்லும் சம்பவமும், கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து சில மனைவிகள் கொல்லும் சம்பவமும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் நம்மையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஆந்திராவிலுள்ள சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இருக்கும் அமீன்பூர் என்ற இடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் ரஞ்சிதாவிற்கு சென்னையா என்பவருடன் திருமணமாகி சாய்கிருஷ்ணா, மதுபிரியா, கெளதம் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ரஞ்சிதாவுடன் பள்ளியில் படித்தவர்களின் சங்கமம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டனர். இதில் ரஞ்சிதாவிற்கு அவருடன் பள்ளியில் ஒன்றாக படித்த சிவா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அந்த அறிமுகத்தை தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர். இது நாளடைவில் அவர்களுக்குள் திருமணம் தாண்டிய தொடர்பை ஏற்படுத்தியது.

அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதில் ரஞ்சிதா சிவாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் குழந்தைகள் மற்றும் கணவன் இருப்பதால் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும், அவர்கள் இல்லாவிட்டால் உன்னை திருமணம் செய்வது குறித்து பரிசீலிப்பேன் என்று சிவா தெரிவித்தார்.

இதனால் சிவாவை திருமணம் செய்ய தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட ரஞ்சிதா திட்டமிட்டார். கணவன் சென்னையா இரவு வேலைக்கு சென்றுவிட்டார். அதனை பயன்படுத்தி மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய ரஞ்சிதா திட்டமிட்டார். இது குறித்து சிவாவை தொடர்பு கொண்டு பேசியபோது தாமதிக்காமல் உடனே குழந்தைகளை கொலை செய்துவிடும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஞ்சிதா முதலில் தனது மூத்த மகன் சாய் கிருஷ்ணாவை டவல் ஒன்றால் மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சுத்திணறடித்து கொலை செய்தார்.

அதனை தொடர்ந்து அதே முறையில் மற்ற இரண்டு குழந்தைகளையும் மூச்சுத்திணறடித்து கொலை செய்தார். காலையில் வேலைக்கு சென்ற கணவன் வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் தயிர் சாதம் சாப்பிட்டதால் மயங்கிவிட்டதாக தெரிவித்தார். அதோடு தனக்கும் வயிறு சரியில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு 4 பேரையும் சென்னையா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் மருத்துவர்கள் மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது மூன்று குழந்தைகளும் ஏற்கனவே இறந்திருந்தனர்.

மேலும் குழந்தைகளை சோதித்த போது அவர்களது உடம்பில் எந்தவித விஷமும் கலந்திருக்கவில்லை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விசாரணையை தொடங்கினர். மேலும் குழந்தைகளின் தாய் ரஞ்சிதாவின் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறைக்கு ரகுழந்தைகளின் தாய் ரஞ்சிதாவின் விசாரிக்க தொடங்கினர். இந்த விசாரணையில் அவரது கள்ளக் காதலனை திருமணம் செய்ய குழந்தைகள் தடையாக இருப்பதாக கருதி அவர்களை கொன்றதாக ஒப்புக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் உயிரை விடனும் .! அவனோடவே வாழட்டும்..!

அமெரிக்க கடற்படை நிறுவன அதிகாரி சவுரப் ராஜ்புத் என்பவரை, அவரது மனைவி முஸ்கன் ரஸ்தோகியும், கள்ளக்காதலன் சாஹில் சுக்லாவும் சேர்ந்து கொன்று கணவனின் சடலத்தை 15 துண்டுகளாக வெட்டி உடலை காலி டிரம்மில் போட்டு, டிரம்மின் மீது கான்கீரிட் கலவையால் மூடி சமாதியாக்கினார். அதேபோல, அவுரியாவில், கட்டாய திருமணம் செய்து வைத்ததால், திருமணமான 2 வாரங்களிலேயே தன்னுடைய காதலனுடன் சேர்ந்து தன் கணவரை, இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்கின்றாள்.

இப்படி நாளுக்கு நாள் கள்ளக்காதல்கள் காரணமாக பச்சிளம் குழந்தைகளையும் பெற்ற தாய்கள் துடிதுடிக்க கொல்லும் சம்பவமும், கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து சில மனைவிகள் கொல்லும் சம்பவமும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள சம்பவம் மொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபிர் நகரிலுள்ள கடார் ஜாட் என்ற கிராமத்தில் வசித்து வரும் தொழிலாளி பப்ளு.. கடந்த, 2017-ல் ராதிகா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பப்ளு வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில், ராதிகாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம், பப்ளுவுக்கு தெரியவந்தது.

இதனால் ஊருக்கு திரும்பிய பப்ளு, இதுகுறித்து ராதிகாவை கண்டித்துள்ளார். ஆனால், ராதிகாவோ, விகாஷை தன்னால் மறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். உடனே யாரும் எதிர்பார்க்காத நிலையில், ராதிகாவை அவருடைய கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைப்பதாக பப்ளு கிராம மக்களிடம் அறிவித்தார். அத்துடன், 2 குழந்தைகளையும் தானே வளர்ப்பதாகவும் கூறினார். இதைக்கேட்டு, ராதிகா உட்பட மொத்த பேரும் திகைத்து மட்டுமின்றி கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கிராம மக்களையும் சமாதானம் செய்து பப்ளு ஒப்புதலை பெற்றார். இதையடுத்து குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு, மனைவியின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். மணமக்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு, தன்னுடைய குழந்தைகளை தன்னுடனேயே பப்ளு அழைத்துச் சென்றுவிட்டார்.

இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் குறித்து பப்ளு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “மனைவியின் கள்ளக்காதலால் எனக்கு ஏற்படக்கூடிய தீங்குகளை, ஆபத்துகளை தவிர்ப்பதற்காகவே நான் அவர்களின் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன். சமீப காலமாகவே, கணவர்கள் தங்கள் மனைவிகளால் கொலை செய்யப்படுகிறார்கள். அதுவும் மீரட்டில் நடந்த சம்பவத்தை பார்த்ததுமே எனக்கு குலைநடுங்கிவிட்டது. அதனால்தான், நாங்கள் இருவருமே நிம்மதியாக வாழ என்ன வழி என்று யோசித்து, என் மனைவியை அவளுடைய கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன்” என பப்ளு தெரிவித்தார்.

தமிழகத்தில் தொடரும் ஆணவ கொலைகள்..!

நிலவு குழந்தைகளுக்கு சோறூட்ட மட்டுமல்ல அறிவியல் வளர்ச்சி இன்னும் சில நூற்றாண்டுகளில் நிஜப் பாட்டி அங்கே வடை சுட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற அளவிற்கு இன்றைய நவீன உலகில் மனிதன் உலகையே தனது உள்ளங்கையில் வைக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் மனிதன் மதம், மொழி, இனம் போன்ற மூட நம்பிக்கைகளால் பிளவுபட்டு கிடக்கின்றான். அவனுடைய மூட நம்பிக்கைகள் அவனது ஆறாம் அறிவை செயல்பட வைப்பது இல்லை. அவனது ஆறாம் அறிவு செயல்படாத காரணத்தின் விளைவு ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கின்றது. கெளரவம் என்ற பெயரில் நடக்கும் ஆணவ கொலைகள் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வரும் சூழ்நிலையில் நாடு எங்கே சென்று கொண்டுள்ளது என சிந்திக்க வைக்கிறது.

இந்நிலையில், வேற்று இனத்தை சேர்ந்தவரின் காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி தண்டபாணி. இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகன் சரவணன் மகள் வித்யா உள்ளனர். சரவணன் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். சரவணனின் தங்கை வித்யா கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். வித்யாவும், திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் வித்யா வீட்டிற்கு தெரியவந்தது. வித்யா வீட்டிற்கு வெண்மணி வந்து பெண் கேட்டுள்ளார்.

இந்நிலையில்,கடந்த 30-ஆம் தேதி வித்யாவின் வீட்டில் இருந்தவர்கள் தேவாலயத்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ விழுந்த நிலையில் காயத்துடன் வித்யா சடலமாக கிடந்தார். பீரோ விழுந்து வித்யா இறந்திருக்கலாம் என பெற்றோர் நினைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோரும், உறவினர்களும் உடலை அடக்கம் செய்தனர். வித்யா உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட அவரது காதலன் வெண்மணி அதிர்ச்சியடைந்தார். மேலும் காதலியின் சாவில் மர்மம் உள்ளது என காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல கிராம நிர்வாக அதிகாரிக்கும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பல்லடம் தாசில்தார் சபரிகிரி, கிராம நிர்வாக அதிகாரி பூங்கொடி மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் வித்யா உடல் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். அதில் உடற்கூராய்வில் வித்யா தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வித்யா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறை விசாரணையை தொடங்கினர். வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, வித்யாவை கொலை செய்ததை சரவணன் ஒப்புக்கொண்டார். விசாரணையில், எனது தங்கை மீது அதிக பாசம் வைத்திருந்தேன். அவரது காதல் விவகாரம் தெரியவந்ததும் கண்டித்தேன். காதலை கைவிட வேண்டும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினேன். ஆனால், தங்கை அதனை கண்டுகொள்ளவில்லை. மாறாக என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று அறையில் வித்யா படுத்து இருந்தார். அப்போது, அரிவாளின் பின்பக்கத்தால் அவளது தலையில் பலமாக தாக்கினேன்.

இதில் அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். இதன்பின்னர் கொலையை மறைக்க பீரோ விழுந்து அவள் இறந்ததுபோல் சித்தரிக்க பீரோவை தலை மீது சாய்த்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து, சரவணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் பார்த்து மிக கச்சிதமாக அண்ணாமலையின் சோளியை முடித்த எடப்பாடி பழனிசாமி

தாம் தூம் எகிறி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த வந்த அண்ணாமலையின் குரல் வலையை சமயம் பார்த்து மிக கச்சிதமாக எடப்பாடி பழனிசாமி அடக்கனார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முன்னாள் அமைச்சர்களான KP முனுசாமி, SP வேலுமணி, CV சண்முகம், M தம்பிதுரை MP ஆகியோரின் டெல்லி பயணம் பலரது புருவங்களை உயர்த்த வைத்தது. மேலும் எவ்வித முன்னறிவிப்புமின்றி எடப்பாடி பழனிசாமி அணியை சென்னை விமான நிலையத்தில் பார்த்த அடுத்த நொடியில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது.

இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அணி இறங்கியதில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நகர்வுகளையும் கேமராக்கள் வட்டமிட தொடங்கியது. ஆகையால், இந்த கேமராவின் மூன்றாவது கண்களுக்கு பயந்து சில கார்கள் மாறி மாறி செல்லவேண்டுய சூழ்நிலை ஏற்படாது. எப்படியோ ஒரு வழியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது மட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி மட்டும் அமித் ஷாவை தனியே 50 நிமிடம் சந்தித்து பேசியது தமிழக அரசியல் பேசுபொருளாக மாறியது.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அணி அமித் ஷாவை நடத்திய சந்திப்பை வைத்து அதிமுகவைவும், எடப்பாடி பழனிச்சாமியையும் சமூக வலைத்தளங்களில் பங்கமாய் கலாய்க்க தொடங்கினர். தமிழக சட்டசபையிலும் இது எதிரொலிக்க தொடங்கியது. இந்நிலையில்,  தமிழக சட்டசபை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சிறப்பு திட்டங்கள் மீதான விவாதத்தின் போது, கடந்த 2022 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை கூட்டம் முடிவடைந்து, அமைச்சர்கள், MLA -க்கள் உள்ளிட்டோரை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் கார்கள் தயாராக இருந்தபோது ஆங்கில தொலைக்காட்சி நிரூபர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்விகள் கேட்க அவர்களுக்கு பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக சென்று அங்கு நின்ற சாம்பல் நிற காரில் ஏற கதவை திறக்க அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த காவலர் ஒருவர், சார் இது உங்கள் கார் இல்லை என சொன்னது சுதாரித்துக் கொண்டு பின்னர் அதற்கு முன்னால் நின்றிருந்த அதே நிற காரில் ஏறி எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.

அதன் பின்புதான் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்ற கார், உதயநிதி ஸ்டாலினின் கார் என தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து அன்று தமிழக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி எனது காரில் தவறுதலாக ஏற சென்றார். எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லட்டும், ஆனால் ரூட் மாறி கமலாலயத்திற்கு செல்லாமல் இருந்தால் சரி உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ. பன்னீர்செல்வம், நாங்கள் ரூட் மாறி செல்ல மாட்டோம் என தெரிவித்தார். அந்த நிகழ்வை இன்று சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின் , அன்று ரூட் மாறாதுனு சொன்னீங்களே இன்று 3 கார்களில் மாறி மாறி அமித் ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி சென்றாரே என விமர்சனம் செய்த அடுத்த நொடியே தமிழக சட்டமன்றமே சிரிப்பொலியால் அதிர்ந்து போனது.

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.. என்ற எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ரிக்‌ஷாக்காரன் படத்தில் வரும் பாடல் வரிகளைப் போல டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,அதிமுக சார்பில், புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். அந்த அலுவலகத்தைப் பார்வையிடவே சென்றதாக எடப்பாடி பழனிசாமி ஒற்றை வாயில் பதிலளித்தார்.

மேலும், அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதில் பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஒழிப்பதே எனது இலக்கு என தெரிவித்தார்.

பாஜகவின் மேலிடமும் அனைவரும் ஒன்றிணைந்தால் 2026- ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பில் அண்ணாமலையை தமிழக பாஜகவிலிருந்து நீக்கினால் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வர தயார் என சமயம் பார்த்து மிக கச்சிதமாக எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தினர்.

எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து திரும்பிய அடுத்த நாளே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி விரைந்தார். அதற்கு முன்பு வரை தாம் தூம் எகிறி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த அண்ணாமலையின் குரல் வலையை எடப்பாடியின் சதுரங்க வேட்டையில் சிக்கி சின்னாபின்னமாகினார்.

ஜெயலலிதா என்னும் ஆளுமையை தொலைத்த அதிமுக:

அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என கூறிய ரஜினிகாந்த் போயஸ் கார்டன் ஜெ. இல்லத்தில் அஞ்சலி செலுத்தி அளித்த பேட்டி, தமிழக அரசின் சார்பில் மரியாதை, அதிமுகவின் பிரம்மாண்ட கொண்டாட்டம், அதிமுக உரிமை மீட்புக் குழு, அமமுக, இப்போது செங்கோட்டையன் என அதிமுகவின் அவதாரங்களாக புதிது புதிதாக உதயமாகும் பல்வேறு தரப்பினரின் பெருமிதப் பேச்சுகள் பிப்ரவரி 24 முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த தினம்.   இன்னும் கட்சி கடந்தும், துறைகள் கடந்தும் பதிவாகும் ஜெயலலிதாவுக்கான புகழஞ்சலிகளும், சமூக வலைதள விதந்தோதலும், விமர்சனங்களும் ஜெயலலிதா இன்னமும் தமிழக அரசியலில் நினைவுகளால் நிலைத்து இருக்கிறார் என்றே தோன்றுகின்றது .

“எனக்கு உண்மையான அன்பு கிடைத்ததில்லை, நிபந்தனையற்ற அன்பை நான் என்றுமே பெற்றதில்லை”… என தமிழகத்தின் உச்சத்தில் இருந்த ஒருவர் அடிக்கடி சொன்ன வார்த்தைகள். சர்ச் பார்க் கான்வென்ட் படித்து, திரையுலகில் நிகரில்லா நடிகை, தமிழக அரசியலில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் கட்டியவர், தமிழக அரசியலில் தனக்கென தனி இடம் பதித்த பெண் தலைவர். மாநில உரிமைக்காக குரல் கொடுத்த போராட்ட குணத்திற்கு சொந்தக்காரர்.

இந்திய அரசியல் களத்தில் எதற்கும் அஞ்சாமல் துணிந்து முடிவெடுத்த இரும்புப் பெண்மணி, புரட்சித்தலைவி, தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆரைவிட அதிமுகவை அதிக தேர்தல்களிலும், அதிக தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெற வைத்தவர். அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சியாகவும் வாக்கு வங்கியில் இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் அதிமுகவை மாற்றியவர்.

தமிழகத்தில் பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு, அனைத்து மகளிர் காவல் நிலையம் என பெண்களுக்காக இவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.  மாநில உரிமைகளுக்காகவும் மாநில சுயாட்சிக்காகவும் எப்பொழுதும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்த ஒரு ஒப்பற்ற தலைவர்.

கடந்த 2016 டிசம்பர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி. ஆர், தனக்குப் பிறகு யார் கட்சியை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கவில்லை. ஜெயலலிதாவும் அவ்வாறே. அவருக்குப் பிறகு கட்சியில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப ஓபிஎஸ் கைகளுக்கு முதலமைச்சர் பதவிச் சென்றாலும் அடுத்தடுத்த நிகழ்வுகள் அதிமுக ஜெயலலிதா எப்போதும் பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் ராணுவக் கட்டுப்பாடோடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கேள்விக் குறியாக்கியது.

ஓபிஎஸ் நீக்கம், இரு அணிகள் உருவாக்கம், இபிஎஸ்-க்கு முதலமைச்சர் பதவி, வி.கே. சசிகலா சிறைவாசம், மீண்டும் ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பு என அதிமுகவில் வரிசைகட்டியது சலசலப்புகள். அதிமுக சற்றே மீண்டெழத் தொடங்கிய வேளையில் மீண்டும் அதிகாரப் பகிர்வில் சர்ச்சை ஏற்பட்டு இபிஎஸ் – ஓபிஎஸ் பிரிவினை, அதிமுக அலுவலகம் சூற என பல பிரச்சினைகள் என ராணுவக் கட்டுப்பாடோடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மறைந்து கேலிக்கூத்தானது.

2024 பிப்ரவரியில் பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. அந்த மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. கூட்டத்தில்  கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வந்தவர் அல்ல, எம்ஜிஆர் போலவே ஆட்சியை ஜெயலலிதா தந்தவர். தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் ஜெயலலிதா வாழ்ந்தவன்  என  நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

மேலும், கடந்த மக்களவைத் தேர்தலை ஒட்டி தீவிர இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் தமிழகத்தில் களைகட்டியிருந்த நேரத்தில் கோயம்புத்தூரில் பிரதானப் பகுதியில் மாலை நேரத்தில் பெரும்பாலோனோரின் கைகளிலும் ஜெலலலிதா, எம்ஜிஆர் பதாகைகள் அதிமுக பிரச்சாரம் போல என நினைத்திருந்த அங்கு திடீரென வந்த அண்ணாமலை காரிலிருந்து இறங்கிவந்து பிரச்சாரம் மேற்கொண்டபோதும் தான் அது பாஜகவின் பிரச்சாரம் என்று புரிந்தது.

இந்த இரண்டுமே தமிழக மக்களின் மனங்களில் இடம்பெற ஜெயலலிதா என்ற அடையாள பிம்பத்தையே அதிமுகவிடமிருந்து கைப்பற்ற பாஜக கையிலெடுத்த  உத்தியாகும். அதேபோல் தமிழக அரசியல் களத்திலும் புதுப்புது கூட்டணிகள், அதிமுக என்றால் ஜெயலலிதா என்ற பிம்பத்தை உடைக்க கட்சிக்குள்ளேயே முயற்சி என்ற குற்றச்சாட்டு என பல்வேறு போக்குகள் உருவாகி இருந்தது.

2014 மக்களவைத் தேர்தலின் போது நாடெங்கிலும் “மோடி, மோடி” எனும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வந்த நிலையில் தமிழகத்தில் “மோடியா, இந்த லேடியா?” என்று நேரடியாக ஜெயலலிதா சவால் விட்டவர். ஆனால் அவரையே தனக்கான அரசியல் பக்கபலமாக தூக்கிக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் பாஜக இறங்கியது. அதிமுக வலுவிழந்து சின்னத்துக்கும், கட்சிக்கும், பதவிக்கும் அடித்துக் கொள்ளும் அடுத்தடுத்த முகங்கள். இதற்கிடையில், அதிமுக அனுதாபிகளுக்கு அல்லது அதிமுக பூசல்களால் அக்கட்சியின் மீது அதிருப்தி அடைந்தவர்களுக்கு, “எம்ஜிஆர், ஜெயலலிதா துணை” என்று தேர்தல் அரசியலுக்கு பாஜக பிள்ளையார்  சுழிபோட்டது.

2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில். ஒரு தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிக்கு வலுவான தலைமை இல்லாமல் போனபோது, உட்கட்சிப் பூசல்கள் மிகுந்த அந்தக் கட்சியின் அந்தஸ்தை வெளியில் இருந்து வரும் இன்னொரு கட்சி வெகு சுலபமாக ஸ்வீகரித்துக் கொண்ட  பாஜக பலனை ஓரளவுக்கு அறுவடை செய்தது. மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம் ‘இன்னும் சில காலத்தில் அதிமுக என்ற கட்சியே இருக்காது’ என்று அடித்துக் கூறி அதையே மக்களின் மனங்களில் நிறுவ முயன்றார்.

இந்திய அரசியலுக்கு கூட்டாட்சிதான் ஆன்மா என்றால், அந்த ஆன்மாவை உயிர்ப்புடன் வைப்பவை பலம் பொருந்திய மாநிலக் கட்சிகள் என்றால் அது மிகையாகாது. தேசிய அளவில் ஒரு வலுவான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றால், அதற்கு வலுவான மாநிலக் கட்சிகளின் துணை தேவை என்ற நிலையே இருந்தது. 2014-ல் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பின்னர் மாநிலத்தில் பிரச்சினையின்றி ஆட்சி செய்ய வேண்டும் என்றால் மத்தியில் இருக்கும் அரசுக்கு ஜால்ரா’ போட வேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது. அதை பாஜகவே நீடித்த வளர்ச்சிக்கு ‘இரட்டை இன்ஜின்’ அரசை தேர்வு செய்யுங்கள் என்று மறைமுகமாக பிரச்சாரம் செய்கிறது. அப்படி இல்லாத மாநில அரசுகள் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது.

தன் மீதான பல்வேறு வழக்கு நெருக்கடிகள் இருந்தாலும் கூட ஜெயலலிதா மத்தியில் இருந்த அரசுக்கு எதிர்ப்பு காட்ட சற்றும் தயங்காமல் இயங்க முடிந்தது. அண்ணா, கருணாநிதி என எல்லோரும் மாநில உரிமைகளுக்காக முழங்கியவர்கள்தான். அந்த வரிசையில் எந்த இடத்திலும் மாநில உரிமைக்காக வலுவான குரல் ஜெயலலிதா கொடுத்தவர். தனது அரசியல் குருவான எம்ஜிஆரையும் மிஞ்சி சமரசமின்றி துணிச்சலான முடிவுகளை எடுத்து மத்தியில் இருப்பவர்களை திக்குமுக்காட ஜெயலலிதா வைத்தவர்.

இரட்டை இன்ஜின் அரசு என்று புதுவித அரசியல் போக்கை பாஜக புகுத்தி வரும் சூழலில், ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாமல் போனது தமிழக அரசியல் களத்தில் பாஜக தன்னையும் முக்கிய கட்சியாக உருவாகிக் கொள்ள ஒரு மிகப் பெரிய களத்தை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது.  ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அந்தப் போக்கு தமிழக அரசியலில் வழக்கொழிந்ததுபோல் இருக்கிறது.

அதிமுக மாநில அரசியலில் பிழைத்திருக்க ஒற்றைத் தலைமையோ இரட்டைத் தலைமயோ உள்கட்சிப் பூசல்களோ எதுவாயினும் பிளவுபடாமல் எதிர்கொள்ள வேண்டும். ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாததாலும் அவர் தனக்குப் பின்னர் எம்.ஜி. ஆரைப் போல இவர் தான் அரசியல் வாரிசு என்று அடையாளப்படுத்தி, வளர்க்காது அனைவரையும் கட்டளைகளுக்குப் பணிபவர்களாகவே மட்டுமே பழக்கியதாலும் நேர்ந்த விணை இதுவாகும்.

தன் கலையுலக வாரிசாக பாக்யராஜை சுட்டிக்காட்டி இருந்த எம்ஜிஆர் அவர்கள் மறைவுக்குப் பின் உருவான வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. ஆகவே, எம்ஜிஆரின் இடம் எனக்குத்தான் என்று கட்சிக்குள் பலரும் கனவுக்கோட்டை எழுப்பிக் கொண்டு இருந்தனர். 17 டிசம்பர் 1988-ல் இரட்டை இலையை முடக்கி ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னம். ஜானகிக்கு ஜோடிப் புறாவும் தேர்தல் ஆணையம் வழங்கியது.

ஜானகி அணியில் பி.ஹெச்.பாண்டியன் மட்டும் வெற்றி பெற ஜெயலலிதா அணிக்கு 27 இடங்கள் கிடைக்க திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. பிரிந்துகிடந்தால் லாபமில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியத்தின் விளைவு, பொதுவாழ்வில் இருந்து ஜானகி விலக ஜெயலலிதா ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளராகி இரட்டை இலை மீட்டு எடுத்தார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி இயங்கவே முடியாது என்று ஆரூடங்கள் சொல்லப்பட்ட நிலையில், உருக்குலைந்துபோன கட்சியை ஆளுங்கட்சி என்ற உச்சாணிக் கொம்பில் ஜெயலலிதா உட்கார வைத்தார்.

தனது தலைமையின் கீழ் சுமார் 28 ஆண்டுகள் கட்சியை ராணுவக் கட்டுப்பாட்டுடன் வழிநடத்திய ஜெயலலிதா எனும் ஆளுமையை தமிழக அரசியலும், அதிமுக கட்சியும் மிஸ் செய்கிறது என்பது உண்மைதான். இந்தச் சூழலில் இன்றைய அரசியல் களம் ஜெயலலிதா இல்லாமல் அதிமுக தத்தளித்து கொண்டுள்ளதா..!? அல்ல அதிமுகவினர் ஒன்றுபட்டு “எம்ஜிஆர், ஜெயலலிதா துணை” என்று தேர்தல் அரசியலுக்கு பாஜக பிள்ளையார் சுழிபோட்டு 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கியை அறுவடை செய்தது மட்டுமின்றி இன்னும் சில காலத்தில் அதிமுக என்ற கட்சியே இருக்காது’ என்று  அடித்துக் கூறிவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஓட விடப்போரார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர் வழிப்பறியில் காவல் உதவி ஆய்வாளர்..!

குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்வது சாதனை இல்லை, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்று சொல்வதுதான் காவல்துறையினரின் சாதனையாக இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மக்களின் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் காவல்துறை பல நேரங்களில் மக்களின் நண்பனாக நடந்துகொள்வதும் இல்லை.

மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறை அவ்வப்போது தரம் தாழ்ந்த செயல்களை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். “நெல்லில் பதர் போல” குற்ற செயல்களை தடுக்கும் காவல்துறை குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது மக்களுக்கு காவல்துறையினர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் கொண்டுள்ளது.

வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் காவல்துறையினரே கைது செய்யப்படுவது மிகவும் வேதனையான ஒன்றாகும். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சக காவல்துறையினருடன் இணைந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு சொத்துகளை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து இருப்பது காவல்துறையினர் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை சிதைத்து விட்டது வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் தனது நண்பர் மூலம் தனது நிறுவனத்திற்கு சி.டி.ஸ்கேன் இயந்திரம் வாங்கி ரூ.20 லட்சம் பணத்துடன் சென்றார்.

அப்போது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், முகமது கவுஸை வழிமறித்து இது ஹவாலா பணமா என கூறி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி மிரட்டி ரூ.20 லட்சம் பணத்தை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து சிசிடிவி ஆதாரங்களின்படி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரை காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, இந்த மோசடிக்கு பின்னணியில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சன்னி லாய்டு செயல்பட்டது தெரியவந்தது. உடனே காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, தலைமறைவாகியிட்டார். இதையடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு தனது நண்பர்கள் உதவியுடன் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் டேராடூன் சென்று கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனர்.

பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, சன்னி லாய்டு பூக்கடை மற்றும் திருவல்லிக்கேணி, ஜாம் பஜார் காவல் நிலையங்களில் பணியாற்றிய போது, ஹவாலா மோசடி நபர்களை குறிவைத்து சக நண்பரான சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் பல ஆண்டுகளாக தொடர் வழிப்பறி மற்றும் தங்கம் பறிப்பு செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதுபோன்ற வழிப்பறியில் சம்பாதித்த பணத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு ஜாம்பஜாரில் குளிரூட்டப்பட்ட அதி நவீன உடற்பயிற்சி மையம், கிழக்கு கடற்கரை சாலையில் பல கோடி மதிப்புள்ள ரிசார்ட் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல கோடிக்கு சொத்துகள் வாங்கி குவித்து இருந்தது தெரியவந்தது.

அதேநேரம் சன்னி லாய்டு பல ஆண்டுகளாக தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சொத்துகளை முடக்க சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சன்னி லாய்டு வாங்கி குவித்து வைத்துள்ள சொத்து விவரங்களை ஆய்வு செய்யும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர். சன்னி லாய்டு கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரால் பாதிக்கப்பட்டும், பணத்தை இழந்த நபர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் தொடர் புகார்கள் அளித்து வருகின்றனர்.

தம்மால் முடிந்தவரை ஊரை அடித்து உலையில் போடும் சன்னி லாய்டு போன்றவர்களால் காவல்துறைக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது. ஸ்காட்லாண்ட் காவல்துறைக்கு இணையானது நமது தமிழகக் காவல்துறை என மார்தட்டிக் கொள்ளும் நாம் அந்தப் பெருமையையும், காவல்துறை மக்களின் நண்பன் என்ற பெயரையும் தமிழகக் காவல்துறை மீட்டெடுக்கப்போவது எப்போது..!?

அமைதிப்படை ‘அமாவாசை’ யார்..!?

தமிழக அரசியல் களத்தில் கொங்கு மண்டலம் ஒரு தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாகும். கொங்கு தொகுதிகளின் வெற்றி, தோல்விகளின்  எண்ணிக்கையை பொறுத்தே ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும் . ஆகையால், MGR -ரின் காலம் தொட்டே  அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலம் கலைஞரின் காலம் வரை ஒரு கனவாகவே இருந்து வந்த  நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கொங்கு மண்டல வாக்கு வங்கியை குறிவைத்து தமிழக பாஜக எல். முருகன் மாநில தலைவராக நியமனம். அவரை தொடர்ந்து அண்ணாமலை நியமனம் என கொங்கு மண்டல அரசியல் களம் சூடிப்பிக்கத் தொடங்கியபோது 2018 டிசம்பர் 14 -ஆம் தேதி மீண்டும் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் முழுவதும் செந்தில் பாலாஜி சூறாவளி சுற்று பயணம் மேற்கொண்டு பாஜக, அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை ஒட்டுமொத்தமாக சிதறடித்து ஒட்டுமொத்த கொங்கு மண்டல நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற செய்தது மட்டுமின்றி கரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனக்குள்ள செல்வாக்கை  செந்தில் பாலாஜி நிரூபித்தார். தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கோயம்புத்தூர் உட்பட அநேகமான பகுதிகளில் அமோக வெற்றி பெற்ற, அதிமுகவின் கோட்டையான கோயம்புத்தூரை தகர்த்து விட்டோம் எனச் சூளுரைத்தார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தபோது தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பெயர் பட்டியலில் செந்தில் பாலாஜியின் பெயரும் இருந்தது என்றால் அவர் எந்த அளவிற்கு மக்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்தார் என்பதைக் காட்டுகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கருது வேறுபாடு ஏற்பட்டபோது ஏற்பட்ட கருத்து மோதலில் உனக்கு முன்னாள் நான் அதிமுகவில் எம்எல்ஏ ஆனவன் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, நீ எனக்கு முன்னாள் அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தாலும் நீயும் நானும் ஒரே நேரத்தில் தான் அமைச்சர்கள் ஆனோன் என செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்து எடப்பாடி பழனிசாமியின் வாயடைத்தார் .

இதன்பின்னர் செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் க்ரீன் சிக்னல் கொடுக்க செந்தில் பாலாஜியின் அரசியல் பயணம் அசுர வளர்ச்சி அடைந்தது. ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்தையே தான் கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கொங்கு மண்டல வாக்குவங்கியை சிந்தாமல் சிதறாமல் திமுக பக்கம் திரும்பியது. இதுமட்டுமின்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் விமர்சனங்களுக்கு செந்தில் பாலாஜி ஒருவரே தக்க பதிலடி கொடுத்தார்.

தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தல் இரண்டு முக்கிய ஆளுமைகளான மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் 2021 ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்த தேர்தலை நாடே உற்று நோக்க ஆரம்பித்தது. இதில் ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களை வென்றது, இதில் அதிமுக 65 இடங்களை மட்டும்  கைப்பற்றியது.

மு. க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றியது. இவற்றில் திமுக 125 தொகுதிகளில் கைப்பற்றியது. இதன் மூலம் அதிமுகவின் பத்தாண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. மேலும் திமுக ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க மு. க. ஸ்டாலின் அறுதிப் பெரும்பான்மையோடு முதல் முறையாக தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சரானார். இந்த வெற்றிக்கு பின்னால் பலர் இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்குகளை சிதைத்து திமுகவின் பக்கம் மக்களை திருப்பியதில் செந்தில் பாலாஜி பங்கு அதிகம் என உணர்ந்த மு. க. ஸ்டாலின் அவர்கள் தனது மந்திரி பதவியில் இடமளித்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கோட்டைவிட்டதிற்கு சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜியின் தீவிர பிரசாரமும் ஒரு காரணம் மற்றும் செந்தில் பாலாஜியுடன் ஏற்கனவே இருந்த கருத்து மோதல் இரண்டும் சேர செந்தில் பாலாஜியை சமயம் கிடைக்கும் போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி கலைக்க ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சி, ஆட்சி மாறினால், காட்சிகள் மாறும். ஏழு கட்சி மாறியவரின் பேச்சை கேட்டுத்தான் இப்படி செயல்படுகிறீர்கள் என தெரியும். அவர் இப்போது தி.மு.க-வில் இருப்பார். ஆட்சி மாறியவுடன் வேறு கட்சிக்கு போய்விடுவார்கள் என செந்தில் பாலாஜியை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில், “13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார். மேலும் அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாத எடப்பாடி பழனிசாமிக்கு இதெல்லாம் புரிந்தாலே ஆச்சரியம்”என விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-இன் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியிலுள்ள கண்ணகி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் என பேசி இருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்கும் விதமாக தமது எக்ஸ் பக்கத்தில்,  ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’ ‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி.

பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிசாமி, ‘’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து இருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்திற்கு, சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு அமைதிப்படை அமாவாசை என்ற பெயர் பொருத்தமானது. ஐந்து கட்சிக்கு சென்று திமுகவிற்கு வந்துள்ளார். இனிமேல் எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியாது. ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்ற நபர் செந்தில் பாலாஜி என எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், இந்த பழனிசாமியின் பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் தமது எக்ஸ் பக்கத்தில், தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்.. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.

புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண் என செந்தில் பாலாஜி மீண்டும் எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக வறுத்தெடுத்தார்.

“பிரைன் ரோட்” சீமான்

“போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே.. என்ற எம் ஜி ஆர் நடிப்பில் உருவான  பாடல் வரிகளுக்கு ஏற்ப, திருவள்ளுவர் திருக்குறள் எழுதும் போது ஓலைச்சுவடி கிழித்து கொடுத்தவர்.

ஹிட்லருடன் நூடுல்ஸ் சாப்பிட்டவர். காந்தியடிகளுடன் காஃபி சாப்பிட்டவர். சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பீரங்கி படையில் பயிற்சி பெற்றவர் இப்படி பல அனுபவங்களைக் கொண்டுள்ள சீமானை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கலாய்க்கும் அளவிற்கு இளைஞர்கள் மூளையை சலவை செய்து அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் தமிழ் தேசியம் மற்றும் பிரபாகரன் பின்புலத்தை வைத்தே சீமானின் கட்சி பிரபலமானது. பிரபாகரனை சந்தித்தது, அவருடன் பேசியது, ஆமைகறி, இட்லி கறி சாப்பிட்டது என பல மேடைகளில் சீமான் சிலாகித்து வந்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான பிரபாகரனுடன் சீமான் எடுத்துக்கொண்ட புகைப்படமும் நாம் தமிழர் மேடைகளில் இடம்பெறும்.

மொழி, இன,  மத பேதமின்றி ஒரே குடையின் குடையின் கீழ் வாழும் வந்தோரை வாழவைக்கும்  தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே இவர்கள் பேசும் பிரிவினைவாத பேச்சுகளால் தமிழகம் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டுள்ளது.  இவர்கள் அங்க தொட்டு.., இங்க தொட்டு.., கடைசியில் தந்தை பெரியாரை விமர்சிக்க தொடங்கிவிட்டார்.

கடந்த பொங்கலையொட்டி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த  சீமான், “தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா? காம இச்சையை தாய், மகளுடன் . என கூறியவர் பெரியார்” என்று சீமான் தெரிவித்தார். மேலும் சீமான் பேசுகையில், “அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? இருவருக்கும் சிலை வைத்தால் ஒன்றாகி விடுமா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர். மேலும், பேசிய சீமான், வள்ளலாரைத் தாண்டி என்ன சமூக சீர்திருத்தத்தை செய்தார் பெரியார் என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதற்கு பெரியாரிய திராவிட இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. சீமானை எதிர்த்து கண்டனப் போராட்டங்கள் நடத்தின. அப்போது,  அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் படித்தவர் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்கள் பிரபாகரன் குறித்து அவதூறு பேசுவது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இழிவுபடுத்துவது, தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவது இதுதான் அவர்களுடைய அரசியலாக இருக்கிறது. சீமான்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறாரே அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சவாலிட்டு உள்ளார்.

மேலும், “எந்த தத்துவ பின்புலமும் இல்லாத அரசியல் தரித்திரம் சீமான். பெரியாரை அவமதித்த சீழ் பிடித்த சீமான் கட்சிக்கு ஈரோட்டுலேயே நல்லடக்கம் நடைபெறும் நாஞ்சில் சம்பத் அவரது பணியில் விமர்சனம் செய்தார்.

“சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது என்பதற்கு பதிலாக சர்ச்சையை ஏற்படுத்துவதற்காகவே பேசியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. பெரியாரை குறிவைத்து அல்ல. திமுக அரசை குறிவைத்துதான் இவ்வாறு பேசுகிறார் எனக் கருதுகிறேன்.

வாய்க்கு வந்ததை எல்லாம் கண்டபடி பேசினால் கலவரம் வரும். கலவரம் வந்தால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனச் சொல்லிவிடலாம் என்பது அவருக்கு உள்நோக்கமாக இருக்கலாம். அல்லது அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையாக இருக்கலாம். “நாம் தமிழர் கட்சி கூடாரம் காலியாவதால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பெரியார் போன்ற ஆளுமைகளை விமர்சிக்கிறார் சுப. வீரபாண்டியன் சீமானை விமர்சனம் செய்தார் .

இந்த சர்ச்சை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் சீமான், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. இது தொடர்பாக பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில், “சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட சந்திப்பு தான். இவர் சொல்வதுபோல், என் சித்தியுடன் பழகியதெல்லாம் கிடையாது. சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து உணவு அருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. சீமான் சொல்லும், ஆமைகறி, இட்லி கறி உள்ளிட்ட அனைத்தும் பொய்” என பகிரங்கமாக தெரிவித்தார். இந்தப் பேட்டி சீமான் பிரபாகரன் சந்திப்பு விவகாரம் இன்னும் அனல் பறக்கத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின்  பெண் நிருபர் ஒருவர் பிரபாகரனின் அண்ணன் மகன் சொன்ன குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார். அதற்கு ஆவேசமான சீமான், பொதுவெளியில் பெண் நிருபரின் கேள்விக்கு பீப் போடும் அளவிலான சொல்லை சொல்லி பிரபாகரனின் அண்ணன் மகனை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

எது எப்படியோ..  சீமான் “நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்” அவிழ்த்து விட்ட கட்டு கதைகளும்,  மற்றவர்களை விமர்ச்சிக்கும் விமர்சனங்களும் நாம் தமிழர் கட்சி கூடாரம் காலியாவதால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பெரியார் போன்ற ஆளுமைகளை விமர்சிக்கிறார்.

கடைசியில் சீமான் என்ன பேசுவது ? எப்படிப் பேசுவது?” தெரியாமல் நாதக கோட்பாடு திராவிட கோட்பாட்டிற்கு நேரெதிரானது, தமிழர் சித்தாந்தத்திற்கு நேரெதிரானது திராவிடம்.  தமிழ், தமிழர் பேசிய உரிமைக்கு நேரெதிரானது  திராவிடம்.  திராவிட சித்தாந்தத்தின் ஆணிவேர் பெரியார். பெரியார் என்ற முகமூடியை வைத்துக்கொண்டே பேசுகின்றனர்.

எங்களுக்கு பல்லாயிரக்கணக்கான தலைவர்கள், எங்கள் முன்னோர்கள் எல்லா தளங்களிலும் நின்று வேலை செய்த பெருமக்கள் இருக்கின்றார்கள். எல்லா எங்கள் முன்னோர்களின் ஒற்றை அடையாளத்தில் பெரியார் வந்த பிறகுதான் எங்களுக்கு எல்லாம், பெரியார் வந்த பிறகுதான் எங்களுக்கு நாகரிகம், பெரியார் வந்த பிறகுதான் எங்களுக்கு கல்வி, பெரியார் வந்த பிறகுதான் எங்களுக்கு சமூகநீதி என்று சொல்லும்போது எங்களுக்கு மண்டை வெடிக்கும் அளவிற்கு கோவமும் வெறியும் வந்துவிடுகிறது. அதனால் தான் இது தேவைப்படுகிறது. பெரியார் எதிர்ப்பு என்பது நீங்க கட்டமைத்த போலி பிம்பத்தை நொறுக்குவது தான் பேசுகிறேன் என்று சொல்லும் அளவிற்கு சீமானின் “பிரைன் ரோட்”டாகி விட்டது என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

அரசியல்வாதிகள் அதிகாரிகளின் “கைப்பாவை”யா…!?

லஞ்சம் வாங்குபவன் கையை வெட்டனும், ஊழல் பன்றவன தூக்குல போடனும், அரசியல் ஒரு சாக்கடை என்ற வீர வசனங்கள் பேசிக்கொண்டு சாமர்த்தியம் என்ற பெயரில் எப்படி வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற யதார்த்தத்தில் அறத்தைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் திருக்குறள் உலகப் பொதுமறை, திருவள்ளுவர் என் முப்பாட்டன் என மார்தட்டிக் கொள்ளும் நாம் இன்று அரசு எந்திரத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுகின்றன. அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றும் கடை நிலை ஊழியரில் தொடங்கி, மிக உயர் பதவிகள் வகிப்பவர்கள் வரை பல்வேறு மட்டங்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது.