Birender Singh: பிரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகி மனைவியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

அதோடு தேர்தலுக்கு முன்னர் பாஜகவிலிருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் பெரும் செல்வாக்கை கொண்டுள்ள பிரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. பிரேந்தர் சிங்குடன் முன்னாள் எம்.எல்.ஏ.வான அவரின் மனைவியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது.