தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சிங்கங்களின் நலம் விசாரித்தார்

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோவிட் -19 காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. இதற்கிடையில், பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உட்பட மற்றுமொரு சிங்கம் உயிரிழந்துள்ளது. இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கோவிட் -19 தொற்று குறித்து ஆய்வு செய்தார். தொற்று ஏற்பட்ட சிங்கங்கள் முழு நலன் பெறுவதற்கும் – பரவலைத் தடுப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் மதிய உணவு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கல்

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர், நடேசன் நகர், தசரதபுரம், அருணாசலம் சாலை, நல்லான் தெரு ஆகிய பகுதிகளில், டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா வுடம், தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் மதிய உணவு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கினர்.

நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு

சுவேந்து அதிகாரியின்  நெருங்கிய உதவியாளரை மோசடி வழக்கில் கொல்கத்தா காவல்துறை நேற்று கைது செய்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள மெதினிபூர் மாவட்டத்தின்  உள்ள கந்தி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளார்.

டி.கே.சிவக்குமார்: கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. நாங்கள் ரூ.100 கோடியில் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். இதற்கு அரசு அனுமதி வழங்கினால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவோம். மக்களின் உயிர்களை காக்க எங்கள் கட்சி தலைவர்கள் சக்தி மீறி பணியாற்றி வருகிறார்கள்.

தடுப்பூசி வழங்குவதுடன் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு உணவு தானிய தொகுப்புகளையும் வழங்கி வருகிறோம். கோவிட் -19 வைரஸ் பரவலை தடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டன. இத்தகைய நெருக்கடியான நேரத்திலும் மக்களை ஏமாற்றும் பொருட்டு, தடுப்பூசிகளை தலா ரூ.900-க்கு விற்பனை செய்கிறார்கள்.

ஆனால் போஸ்டர்களில் பா.ஜனதாவினர் தங்களின் புகைப்படங்களை போட்டுக் கொண்டு மின்னுகிறார்கள். ஆனால் எங்கள் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்க சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்கிறார்கள். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

ப.சிதம்பரம் தனது டுவிட்டரில்: வறுமையில் உள்ள எழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது?

இயலாமையும், தவறான கொள்கைகளுமே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்

அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சேலம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை‌க் கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் -19 தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

கலைஞரின் பிறந்தநாளையொட்டி, திருச்சி கருமண்டபம் திமுக சார்பில் சுமார் 1500 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் கே.என் . நேரு அவர்கள் வழங்கல்

ஊரடங்கு காலத்தில் போதிய வருமானமின்றி அவதிப்பட்டு வரும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி, திருச்சி கருமண்டபம் 45-வது வட்ட திமுக சார்பில், சுமார் 1500 நபர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் கே.என் . நேரு அவர்கள் வழங்கினார்.

கோயம்புத்தூர் திமுக சார்பில் கோவிட் -19 சிகிக்சை மையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

கோவிட் -19 பெறுந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வரிசையில், முதலமைச்சரின் கோவிட் -19 தடுப்பு நிவாரண நிதிக்காக கோயம்புத்தூர் கலைஞர் கருணாநிதி கல்லூரியில் இயங்கும் கோவிட் -19 சிகிச்சை மையத்திற்கு ஆக்ஸிஜன் செரிவூட்டிகளை திமுக கோயம்புத்தூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை. சேனாதிபதி அவர்களின் மூலம் வழங்கப்பட்டது.

மனிதநேயம் இன்னும் மரித்துப் போய்விடவில்லை என்பதை உணர்த்தும் சம்பவம்

அசாம் மாநிலம் ராஹா மாவட்டத்தைச் சேர்ந்த நிஹாரிகா சூரஜ் தம்பதியினர். சூரஜின் தந்தை துலேஸ்வர் தாஸும் மகனுடம் வசித்துவருகிறார். அண்மையில், சூரஜ் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது, துலேஸ்வர் தாஸுக்கு உடல்நிலை குன்றியுள்ளது. பரிசோதனையில் அவருக்குக் கோவிட் -19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.


வீட்டிலிருந்த அவருக்கு மருத்துவ சிகிச்சையின் தேவை ஏற்பட்டது. உடனடியாக எதற்காகவும் காத்திருக்காது மருமகள் நிஹாரிகா தனது மாமனாரை முதுகில் சுமந்தவாறு ராஹா மருத்துவ மையத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால், வயது முதிர்ந்த மாமனாரை தனியேவிட முடியாது எனக் கூறி நிஹாரிகா தனக்கும் மருத்துவமனையில் இடம் கோரினார். பின்னர், மருத்துவர் சங்கீதா தர், செவிலியர் பிண்டு ஹீரா இணைந்து அவர்களை நகாவோ போகேஷ்வரி புக்கனானி சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.