சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில், விவசாய அணி சார்பில் முன்கள பணியாளர்களுக்காக 1 லட்சம் முககவசம் வழங்கும் திட்டத்தை, மாநிலத்தலைவர் எல்.முருகன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு விவசாய அணி மாநிலத்தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமை தாங்கினார்.
Author: rajaram
கோவில் நிலங்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு
தமிழக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் 36 ஆயிரத்து 861 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் பல ஏக்கர் நிலங்கள் தனியார் வசம் உள்ளன. இதற்கு பலர் வாடகை மற்றும் குத்தகை தொகையை கோவில்களுக்கு செலுத்தினாலும் சிலர் வாடகை தராமல் இருப்பதுடன், கோவில் நிலங்களை தங்கள் பெயர்களுக்கும் மாற்றிக்கொள்வது தெரியவந்து உள்ளது.
இதனால் கோவில்களுக்கு வரவேண்டிய வருமானம் முறையாக வராததால் கோவில்கள் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இந்நிலையில், கோவில்களுக்கு நிலங்களை வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த நிலங்களை விற்பனை செய்யக்கூடாது. குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை 6 வாரங்களில் தயாரித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும். அத்துடன் குத்தகை, வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செலுத்தாதவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.250 கோடி மதிப்புள்ள வடபழனி கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவில்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். தற்போது முழுவீச்சில் இந்தப்பணி நடந்து வருகிறது.
அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 861 கோவில்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான ஆவணங்கள் நேற்று முழுமையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. எந்த கோவிலுக்கு சொந்தமான நில விவரங்களை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
மருத்துவர்களின் அலட்சியத்தின் விளைவு 6 மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை முகத்தில் 13 அறுவை சிகிச்சைகள்
மகாராஷ்டிரா மாநிலம், விதர்பாவை சேர்ந்த நவீன் பால் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி. கடந்தாண்டு செப்டம்பரில் இவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினார். பின்னர், அவரது பற்கள் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. அப்போதே, இந்த அறிகுறிகள் குறித்து மருத்துவர்களிடம் நவீன் தெரிவித்துள்ளார். அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நாளடைவில் இந்த நோய் அதிகமாகி, இந்தாண்டு பிப்ரவரியில் அவருக்கு ஒரு கண் அகற்றப்பட்டது. பின்னர், 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு கண்ணையும் மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். 6 மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளித்து, முகத்தில் 13 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு ஒட்டு மொத்த நவீன் இதுவரையில் ரூ.1.5 கோடி செலவு செய்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு போராட்டம்
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 7 ஆண்டு பாஜ ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 459 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, ரூ.20 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு பெருக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த வருவாய் பெருக்கத்தின் காரணமாக மக்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, 2014 ல் 410 ஆக இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.819 ஆக இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களிடம் கொள்ளையடிப்பதை எதிர்த்தும், எரிபொருட்கள் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், ஜூன் 11ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
அதையொட்டி தமிழகத்தில் நடைபெறுகிற போராட்டங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் துறைகளின் தலைவர் ஆகியோர் அவசியம் பங்கேற்க வேண்டும். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
ஐ.பெரியசாமி: கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்ய விரைவில் அரசாணை
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி என்பவர் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 3 முறை தாம் கருக்கலைப்பு செய்ததாகவும் இதுதொடர்பாக தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அடையாறு காவல்துறையினர் மணிகண்டனுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று வரை அவரை கைது செய்ய கூடாது என்று ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிகண்டன் சார்பில், 12 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றி பின்னர் அரசியலுக்கு வந்ததாகவும், இந்த குற்றச்சாட்டை பொறுத்தவரை அவர் திருமணமானவர் என்று தெரிந்தே நடிகை சாந்தினி தன்னுடன் குடும்பம் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருவே ஏற்படாத போது எப்படி கருக்கலைப்பு செய்ய முடியும். அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை பொறுத்தவரை தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகை சாந்தினி தரப்பில் வழக்கறிஞர் திருமணம் செய்து கொள்வதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதால் தான் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால் உறவுக்கு அளிக்க ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. இந்த அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை பொறுத்தவரை ஒரு எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் பயணமாக கோயம்புத்தூர் உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார்
உரிக்க உரிக்க காணாமல் போகும் அரசியல் வெங்கயாமாக மாறியுள்ள கிருஷ்ணசாமி எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சி கலைப்பு சொல்லி மிரட்டுவது கோமாளித்தனமானது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி 2,50,053 வாக்காளர்கள் உள்ள தொகுதியில் வெறும் 6544 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார். இது மக்களிடத்தில் குறிப்பாக தேவந்திர சமுக மக்களிடத்தில் கிருஷ்ணசாமி செல்வாக்கு இழந்துவிட்டார் என்பதை தெளிவு படுத்துகிறது.
அரசியலில் மக்கள் செல்வாக்கு இல்லாதவராகவும் உரிக்க உரிக்க காணாமல் போகும் அரசியல் வெங்கயாமாக மாறியுள்ள கிருஷ்ணசாமி எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சி கலைப்பு சொல்லி மிரட்டுவது கோமாளித்தனமானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி லட்சுமணன் தெரிவித்தார்.
தியாகராய நகரில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தீரர் ஜெ. அன்பழகன் பவுண்டேஷன் திறப்பு
இன்று சென்னை – தியாகராய நகரில், தீரர் திரு.ஜெ. அன்பழகன் பவுண்டேஷனை, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் ஏற்பாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,. மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், ஆர்.எஸ்.பாரதி , தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு மற்றும் பகுதிச் செயலாளர்கள் ஏழுமலை, நந்தனம் மதி, முரளி, ஆகியோருடன் கலந்துகொண்டேன்.