சிவசேனா நம்பக்கூடிய ஒரு கட்சி – இந்த அரசு அதன் முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும்

மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கான போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்ற மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயை பிரதமர் நரேந்திர மோடி தனியாகவும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. இதனால் ஆளும் கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 22-வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய கட்சியின் நிறுவனர் சரத்பவார் இந்த அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற சந்தேகம் அடிக்கடி எழுப்பப்படுகிறது.

ஆனால் சிவசேனா நம்பக்கூடிய ஒரு கட்சி. இந்த அரசு அதன் முழு ஆட்சிகாலத்தையும் நிறைவு செய்யும். மேலும் அடுத்து மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் சிறப்பாக செயல்படும்.வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

சென்னை உயர்நீதிமன்றம்: தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது

ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் “ஜி-7” நாடுகள் வழங்கும்

ஜெர்மனி, ஜப்பான், கனடா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு ‘ஜி-7’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் உச்சி மாநாடு, இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே ஓட்டலில் நேற்று தொடங்கியது. முன்னதாக உலக மக்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுமாறு உலகத்தலைவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்தார்.

இதையொட்டி நேற்று போரிஸ் ஜான்சன் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், உலகின் ஏழை நாடுகளுக்கு 100 கோடி கோவிட் -19 தடுப்பூசியை வழங்குவதற்கான அறிவிப்பை உலகத்தலைவர்கள் வெளியிடுவார்கள். டோஸ் பகிர்வு, நிதி உதவி அளித்தல் வாயிலாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

இங்கிலாந்தின் தடுப்பூசி திட்டத்தின் பலனாக எங்களது உபரி தடுப்பூசிகளில் கொஞ்சத்தை தேவைப்படுகிறவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். அவ்வாறு செயல்படுகிறபோது, ஒரு தொற்றுநோயை தோற்கடிப்பதற்கு ஒரு பெரிய உதவி நடவடிக்கையாக இது அமையும் என கூறப்பட்டுள்ளது.

ஜெ.அன்பழகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மலர் வலையம் வைத்து மரியாதை

ஜெ.அன்பழகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி ஆகியோருடன் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தி, அவரது இல்லத்தில் திருவுருவ படத்திற்கு தமிழச்சி தங்கப்பாண்டியன் மலர்தூவி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

உடன், பகுதிச் செயலாளர்கள் ஏழுமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.

மும்முடிசோழமங்கலம் பகுதியில் புதிய அரசு நெல் கொள்முதல் மையம்


விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய உள்ள நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி மும்முடிசோழமங்கலம் பகுதியில் விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய அரசு நெல் கொள்முதல் மையத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

சித்தாலப்பாக்கம் நியாய விலைக் கடை ஆய்வு


சோழிங்கநல்லூர் – சித்தாலப்பாக்கத்தில், நியாய விலைக் கடையை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில், புனித தோமையர்மலை ஒன்றியச் செயலாளர் மேடவாக்கம் ரவி, கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.

சிவசேனாவுடன் கூட்டணியா..!? கூண்டில் அடைபட்ட புலியுடன் எங்களுக்கு நட்பு தேவையில்லை

மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கான போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்ற மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயை பிரதமர் நரேந்திர மோடி தனியாகவும் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. இதனால் சிவசேனா, பா.ஜனதா இடையே மீண்டும் பழைய உறவு துளிர்விடுவதாக கூறப்பட்டது. இதற்கிடையே பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டி ஒன்றில் புலியுடன் நட்பு கொள்ள விரும்புவதாக கூறினார். இது சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்ந்தது.

இந்நிலையில் சந்திரகாந்த் பாட்டீலின் பிறந்த நாளான நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , எனக்கு சமீபத்தில் ஒருவரிடம் இருந்து புலி புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்று பரிசாக கிடைத்தது. இதை பரிசளித்தவரிடம் இது நல்ல பரிசு என்றும் ‘நாங்கள் எப்போதும் புலிகளுடன் நண்பர்கள்’ என்றும் கூறினேன். இருப்பினும் புலி அவர்களின் அடையாளம் என்பதால் ஊடகங்கள் சிவசேனாவுடன் இணைத்து பார்த்துவிட்டனர்.

நாங்கள் எப்போதும் அனைவருடன் நட்பு பாராட்ட விரும்புகிறோம் என்பது உண்மை தான். ஆனால் நாங்கள் காட்டில் உள்ள ஒரு புலியுடனான நட்பையே விரும்புகிறோம். கூண்டில் அடைபட்டுள்ள புலியுடன் இல்லை என தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், 2 சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கல்


சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருச்சி மாவட்டம் இலால்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், 2 சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் ரூ.1.18 லட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகளை தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆய்வு

ஒன்றிய அரசின் SAGY திட்டத்தின் கீழ், நான் தத்தெடுத்துள்ள, சோழிங்கநல்லூர் – சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக் கிணறு, உயர்மின் கோபுர விளக்குகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


இந்நிகழ்வில், புனித தோமையர்மலை ஒன்றியச் செயலாளர் மேடவாக்கம் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.