பி.எப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் பற்று வைக்கப்படும் தொகை வந்து சேராது

நாடு முழுவதும் கோவிட் -19 பரவல் காரணமாக நிதி சிக்கல்களில் தவிக்கும் ஒரு நபர் தனது பி.எப் கணக்கில் இருந்து ஒரு தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க பி.எப் கணக்கில் இருக்கும் தொகையின் ஒரு பகுதியை ஊழியர்கள் திரும்ப பெறலாம்.

இந்நிலையில் சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவில் சமீபத்தில் ஒரு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதியின்படி ஊழியர்களின் பி.எப் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் பற்று வைக்கப்படும் தொகை இந்த மாதம் முதல் பி.எப். கணக்கில் வந்து சேராது. ஊழியர்களின் கணக்கில் நிறுவனம் சார்பில் அவர்களது பங்கை பி.எப் கணக்கில் சேர்க்க இயலாத நிலை ஏற்படும்.

மேலும் வருங்கால வைப்புநிதி கணக்கில் இருந்து கோவிட் -19 முன் தொகையையும் எடுக்க இயலாது. எனவே இதுவரை பி.எப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள் உடனடியாக www.epfindia.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று ஆதார் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி சேலம் விமான நிலையத்தில் வரவேற்பு

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்: கடந்த 10 ஆண்டாக செல்லூர் ராஜூ தவறான தகவல்கூட்டுகடந்த 10 ஆண்டாக செல்லூர் ராஜூ தவறான தகவல் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் பல குறைபாடுகள் உள்ளன 4451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தவறுகள் நடைபெற்று இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.


மத்திய கூட்டுறவு வங்கியுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை. இந்நிலையில் யார் யார்கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி உள்ளனர் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கடந்த 10 ஆண்டாக செல்லூர் ராஜூ தவறான தகவல் தெரிவித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு முட்டை வழங்கல்

தமிழகத்தில் கோவிட் -19 யை ஒழிப்பு பணியில் தங்களை ஈடுபடுத்தியுள்ள முன்களப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில், சுமார் 3,000 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 30 முட்டைகள் வழங்கும் பணியை இன்று அமைச்சர் கே.என் .நேரு தொடங்கி வைத்தார்.

சிவகாசியில் பெட்ரோல், உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஒன்றிய மோடி அரசின் பெட்ரோல், உயர்வை கண்டித்து இன்று நகரத்தலைவர் குமரன் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் இனைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்டையும் அதன் கோரிக்கைகளையும் கையாள முடியாவிட்டால், ராஜினாமா செய்..!


வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா தலைமையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. நாட்டையும் அதன் கோரிக்கைகளையும் கையாள முடியாவிட்டால், ராஜினாமா செய்யுமாறு அசன் மெளலானா தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்தை பாடை கட்டி தூக்கி ஆர்ப்பாட்டம்


மயூரா ஜெயக்குமார் தலைமையில் கோயம்புத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அண்ணா சிலை சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தை பாடை கட்டி தூக்கி வந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் நாமக்கல் அரசு மருத்துவமனையை ஆய்வு


அமைச்சர் மா . மதிவேந்தன் இன்று காலை நாமக்கல் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். அதன்பின்னர், மாவட்ட ஆட்சியர் திரு. மெகராஜ் அவர்கள் முன்னிலையில் மருத்துவர்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் KRN. இராஜேஷ் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இராமலிங்கம், பொன்னுசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் AKP. சின்ராஜ் மற்றும் நாமக்கல் நகர கழக பொறுப்பாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

சாராய வேட்டையில் வீடு புகுந்து திருடிய காவல்துறை

வேலூர் மாவட்டம் நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் காவல் துணை ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் நேற்று முன்தினம் சாராய வேட்டைக்கு சென்றனர். காவல்துறையினரை கண்டதும் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

அங்கிருந்த சாராய அடுப்பு, சாராய ஊறல்களை அழித்த காவல்துறையினர் பின்னர் நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள சாராய வியாபாரிகள் வீடுகளில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிட்டனர்.

பூட்டியிருந்த சில வீடுகளின் பூட்டு மற்றும் பீரோக்களை உடைத்து பார்த்தனர். அப்போது 2 வீடுகளில் இருந்து ரூ.8½ லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர். இதனை அறிந்த மலைக்கிராம மக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டு, ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைப்பது தவறு, அத்துடன் பீரோக்களை உடைத்து எடுக்கப்பட்ட பணம், நகையை ஒப்படைக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் சுபா சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அந்த வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பணம், நகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.