உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் உதவி


சேலம் மேற்கு மாவட்டம், ஓமலூர் பேரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது தனக்கு உதவி வேண்டுமென்ற சித்ரா பாட்டிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இயங்கும் அறக்கட்டளை சார்பில் ரூ.7,500-க்கான காசோலையை உடனடியாக வழங்கினார். மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளை எனக்கு தெரியப்படுத்துமாறும் அவரிடம் கேட்டுக்கொண்டார்.

வி.கே.ஏ நிறுவனங்களின் சார்பில் கோவிட் -19 நிவாரண நிதி ஒரு கோடி


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கரூர் வி.கே.ஏ நிறுவனங்களின் சார்பில் அந்நிறுவன‌ சேர்மன் வி.கே.ஏ. சாமியப்பன் அவர்கள்‌ நேற்று சேலத்தில் கோவிட் -19 தடுப்பு பணிக்காக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயினை அளித்தார்.

நாமக்கல் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அமைச்சர் திடீர் சந்திப்பு

உதயநிதி ஸ்டாலின் எடப்பாடியில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் வாயிலாக எடப்பாடி தொகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரம்

தமிழ்நாடு முழுவதும் சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் நடக்கும் தூய்மை பணிகளை இன்று அமைச்சர் கே.என். நேரு நேரில் ஆய்வு செய்தார்.

அத்துடன் 53 வது வார்டு கொடாப்பு ரோடு பெருமாள் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார்.

சைதாப்பேட்டை மீன் அங்காடி மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கும் தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதிலும் கோவிட் -19 இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் கோவிட்-19 தடுப்பூசி மருத்துவ முகாம் 10-வது மண்டலம் 142-வது வட்டம் சைதாப்பேட்டை திரு காரணிஸ்வரர் திருக்கோயிலியின் அருகே உள்ள மீன் அங்காடி காய்கறி வியாபாரிகளுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதிலும் கோவிட் -19 இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவிட் -19 பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறு இருப்பதால் அவர்களுக்கென்று சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகிறது.

திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் கொரோனா சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு 19 திருநங்கைகளுக்கு தலா ரூ.2000 கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கினார்.

நியாய விலை கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள எர்ரப்பட்டியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முழுநேர நியாய விலை கடை செயல்பட்டு வந்தது. 650-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த முழுநேர கடையை பகுதிநேர கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பை நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது. இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் முழு நேர நியாய விலை கடையை பகுதி நேர கடையாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று நியாய விலை கடை முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரும்பாலை காவல்துறை விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊரடங்கு உள்ள நேரத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பானது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேரறிவாளன் இனி சிறைக்கு செல்லக்கூடாது: டிவிட்டர் மூலம் அற்புதம்மாள் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திருப் பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்த பேரறி வாளன் கடந்த 28-ம் தேதி ஒரு மாதம் பரோலில் 4-வது முறையாக தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், பேரறிவாள னுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும், அதனால் இனிமேல் சிறைக்கு அவர் செல்லக்கூடாது. அதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் டிவிட்டர் மூலம் தனது வேண்டுகோளை தெரிவித்துள்ளார்.