கே.பி. சர்மா ஒலி: யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல, நேபாளத்தில் தான் உருவானது

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானது, யோகா. மனித குலத்தின் நலம் பேணும் அற்புதமான இந்த கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிரணாயாம மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் நேற்று சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஒலி பேசுகையில், யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப் பட்டபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை. பல ராஜ்ஜியங்களாக இருந்தது. நேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம். ஆனால் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார் என தெரிவித்தார்.

அஜித்பவார் பங்கேற்ற விழாவில் அதிக கூட்டம்: 6 பேர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் புனே சிவாஜிநகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழா நடந்தது. துணை முதலமைச்சர் அஜித்பவார் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அந்த பகுதியில் அதிக கூட்டம் கூடியது.

மேலும் பலர் முககவசம் அணியாமல், சமூகஇடைவெளியை பின்பற்றாமல் இருந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிவாஜிநகர் காவல்துறை, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தேசியவாத காங்கிரஸ் புனே மாவட்ட தலைவர் பிரசாந்த் ஜக்தாப் மற்றும் 5 கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர்.

இணையவழி வணிகம் உள்பட மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதி

கோவில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்க உயர்மட்ட குழு

தமிழ்நாட்டின் சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில் பாரம்பரியச் சுற்றுலா ஊக்குவிக்கப்படும்

குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்

ராமதாஸ் பாராட்டு: வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட், சேவை உரிமை சட்டம்

தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சிக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 13 ஆண்டுகளாக பா.ம.க. சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக்குழு அமைக்கப்படும். தமிழக அரசின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்பவை உள்ளிட்ட தமிழக அரசின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என தெரிவித்தார்.

ராகுல் காந்தி டுவிட்டரில் கோவிட் -19 மரணங்களுக்கு இழப்பீடு வழங்க மோடி அரசு தயாராக இல்லை

மத்திய, மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் கோவிட் -19 னால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘உயிரை மதிப்பிடுவது சாத்தியமில்லை என்றாலும், அரசு வழங்கும் இழப்பீடு ஒரு சிறிய உதவி மட்டுமே. ஆனால் அதைக்கூட செய்ய மோடி அரசு தயாராக இல்லை’ என்று கூறியுள்ளார். கோவிட் -19 தொற்று காலத்தில் முதலில் சிகிச்சை பற்றாக்குறை, பின்னர் தவறான புள்ளிவிவரங்கள், அதற்கு மேல் அரசாங்கத்தின் கொடுமை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

மகாராஷ்டிராவில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி போதிய மருந்து இல்லாத காரணத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் 30 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று இரவு சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அறிவித்தார். அப்போது அவர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளதாக கூறினார்.