98 வயதான எஸ்.காமேஸ்வரன் அவர்களின் திருவுடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதி அஞ்சலி

டாக்டர் எஸ்.காமேஸ்வரன் சென்னை மருத்துவக் கல்லூரி காது, மூக்கு, தொண்டை துறை இயக்குநராக பொறுப்பு வகித்தவர். காது, மூக்கு, தொண்டை துறையில் இந்தியாவில் முதன் முதலாக ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர்.

தேசிய மருத்துவ அறிவியல் அகாதெமி சார்பில் வாழ் நாள் சாதனையாளர் விருது வாங்கியவர். 98 வயதான எஸ்.காமேஸ்வரன் இன்று இயற்கையெய்திய அவர்களின் திருவுடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ம.பொ.சிவஞானம் அவர்களின் 116 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை

சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பொன்னுசாமி சிவஞானம் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. 1945 ஆம் ஆண்டு ம.பொ.சி. தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கினார்.

ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார். தமிழ்நாட்டைத் தாய்நாடாகவும், தமிழ் மொழியை தாய்மொழியாகவும் கொண்டு வாழும் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிகள் அனைவரும் தமிழராகக் கொள்ளப்படுவர்.

தமிழர் எங்கெல்லாம் பெருவாரியாக வசிக்கிறார்களோ அந்தத் தொடர்ச்சியான பிரதேசங்கள் தமிழ்நாடாகக் கொள்ளப்படும்’ என்றும், தமிழர் தனித்தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்றும் கூறி 1946ஆம் ஆண்டில், தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தை தொடங்கி வைத்தவர் ஐயா ம.பொ.சி. அவர்கள் ஆவார்.

சுதந்திர இந்தியாவில், சுதந்திர தமிழரசு அமைந்தே தீரவேண்டும்; தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகைய சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு என தமிழ்த்தேசிய முழக்கமிட்டவர் தமிழர் தலைவர் ம.பொ.சிவஞானம் ஆவார்.

சிலம்புச் செல்வர் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் அவர்களின் 116 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் ம. சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திரு மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள்

கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 ஐத் தாண்டியது

கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?

இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை!

இந்தியாவில் 51 பேருக்கு அதிக வேகமாக பரவும் திறன் வாய்ந்த டெல்டா பிளஸ் தொற்று

உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. இதில் சமீப நாட்களாக டெல்டா, டெல்டா பிளஸ் என 2 மாறுபாடு அடைந்த வைரஸ்கள் பரவலாக கண்டறியப்பட்டு வருகின்றன. இதில் டெல்டா வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டது ஆகும்.

இது ஏற்கனவே கண்டறியப்பட்ட வைரசை விட அதிக வேகமாக பரவும் திறன் வாய்ந்தது ஆகும். இதன் தொடர்ச்சியாக தற்போது டெல்டா பிளஸ் தொற்று பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரிய மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த தொற்றுகள், அரசுகளை கவலையுற வைத்துள்ளன.

குறிப்பாக டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலைக்கு காரணமாகி விடும் என்றும் அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை பரிசோதிக்கப்பட்ட 45 ஆயிரம் மாதிரிகளில் மகாராஷ்டிரா 22 பேர், தமிழ்நாட்டில் 9 பேர், மத்திய பிரதேசம் 7 பேர் கேரளா 3 பேர், பஞ்சாப், குஜராத்தில் தலா 2 பேர், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், காஷ்மீர் மற்றும் கர்நாடகா, அரியானா தலா ஒருவர் என மொத்தத்தில் 51 பேர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

5 வயது சிறுவன் 928 Colour Cubes-ஐ கொண்டு முதலமைச்சர் அவர்களின் உருவப்படத்தை வரைந்து சாதனை


கொளத்தூரை சேர்ந்த கலையரசி பார்த்தசாரதி தம்பதியின் மகன் சாய் சித்தார்த். 928 Colour Cubes-ஐ கொண்டு முதலமைச்சர் அவர்களின் உருவப்படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார். தம்பி சாய் சித்தார்த்தை முதல்வர் அவர்கள் நேற்று பாராட்டினார்கள்.