திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் காணாங்குளம் பகுதியில் மாட்டு இறைச்சி வியாபாரியிடம், அவினாசி தாசில்தார் தமிழ்ச்செல்வன் மாட்டு இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகவும் அதனை கண்டித்து நேற்று அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Author: rajaram
இலங்கை தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமில் ஓவியங்களை வரைந்து நூதன போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, கென்யா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய 117 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீதான குற்றத்துக்கு தண்டனை காலம் முடிந்தாலும் அவரவர் சொந்த நாட்டுக்கு அனுப்பும் வரை முகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முகாமிலிருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நேற்று 20-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நீடிக்கும் நிலையில், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் படும் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில், `அப்பா’ என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்தும், வாசகங்களை எழுதியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
பீட்டர் அல்போன்ஸ் சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்
தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் , கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து , அதன் தலைவராக எஸ் . பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாமில் நடந்த கொடுமை: ஒரே பெண்ணுக்கு சில நிமிடங்களில் 3 டோஸ் தடுப்பூசிகள்
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாநகராட்சி ஊழியர் ஒருவரின் மனைவி ஆனந்த்நகரில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடச் சென்று உள்ளார். அவருக்கு தடுப்பூசி செயல்முறை பற்றி அறிந்திருக்கவில்லை, இந்நிலையில் தடுப்பூசி மையத்தில் சில நிமிடங்களில் 3 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கூறி உள்ளார்.
இதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் கணவர் உள்ளூர் அதிகாரியிடம் பிரச்சினையை கூறி உள்ளார். மாநகராட்சி மருத்துவ சுகாதார அதிகாரி மருத்துவர் குஷ்பூ தவ்ரே இது குறித்து கூறும் போது, மருத்துவர்கள் குழு பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று அவரை கண்காணித்து வருகிறது. அவர் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளோம் என கூறினார்.
அபுதாபியில் அறிமுகம்: முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் கொரோனா பரிசோதனை
ஒருவரின் உடலில் வைரசின் புரத பொருளான ஆர்.என்.ஏ. இருப்பது தெரிந்தால் மின்காந்த அலையின் வீச்சில் மாற்றம் ஏற்படும். இந்த முறையில் சில்வர் நிறத்திலான ரேடார் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் பொருத்தப்படுகிறது. அந்த ரேடாரின் தொடர்பு ஒரு ஸ்மார்ட் செல்போனுடன் இணைக்கப்படுகிறது.
அந்த செல்போனை வைத்து வணிக வளாகம் அல்லது கட்டிடத்திற்குள் வருவோரை காவலாளி அல்லது ஊழியரின் உதவியுடன் ஸ்கேன் செய்தால் போதும். ஒரு சில வினாடிகளில் அவருக்கு கொரோனா உள்ளதா? இல்லையா? என்பது அறிந்து கொள்ள முடியும். அதாவது கொரோனா தொற்று இல்லை என்றால் ஸ்கேன் செய்யும்போது அதில் பச்சை நிறத்தில் ஒளிரும். கொரோனா தொற்று உள்ளது என்றால் சிவப்பு நிறத்தில் ஒளிரும்.
அவ்வாறு சிவப்பு நிறம் ஒளிர்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படும்.இந்த நவீன முகத்தை வைத்து கொரோனா பரிசோதனை செய்யும் முறை நேற்று அபுதாபியில் உள்ள வணிக வளாகங்கள், பொது மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் முதல் அமலுக்கு வந்தது.
‘ஆப்பிள் டெய்லி’ பத்திரிக்கையின் நிறுவனத்தலைவர் கைது
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த பிரபல ஜனநாயக ஆதரவு செய்தித்தாளான ‘ஆப்பிள் டெய்லி’ பத்திரிக்கையின் நிறுவனத்தலைவர் ஜிம்மி லேயை ஹாங்காங் காவல்துறை கைது செய்தனர். மேலும், அந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஹாங்காங் நிர்வாகம் எடுத்தது. ஆப்பிள் டெய்லி நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
கடம்பூர் ராஜூ : சசிகலா ஒரு கட்சியை தொடங்கிய பின்னர் சுற்றுப்பயணம் செய்தால் அதை யாரும் தடுக்க முடியாது.
கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களிடமே சசிகலா பேசி வருகிறார். விளாத்திளத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.வில் சசிகலாவை ஏற்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அவர் அ.தி.மு.க.வுக்கு வர முயற்சிப்பதற்கு என்ன நிர்ப்பந்தம் என்று தெரியவில்லை.
சசிகலா ஒரு கட்சியை தொடங்கிய பின்னர் சுற்றுப்பயணம் செய்தால் அதை யாரும் தடுக்க முடியாது. மாறாக அவர் அ.தி.மு.க. என்ற போர்வையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் வரக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. சசிகலா அ.ம.மு.க.விற்கு தலைமையேற்று வழி நடத்தலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை கிடையாது.
தமிழகத்தில் சசிகலா சுற்றுப்பயணத்தின்போது அ.தி.மு.க.வினர் யாரும் செல்லப்போவதில்லை. ஆகையால் சசிகலா சுற்றுப்பயணத்தினால் அ.தி.மு.க.விற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என தெரிவித்தார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் 2017-ல் எடப்பாடி ஆட்சியில்தான் ‘நீட்’ தேர்வு முதல் முறையாக திணிக்கப்பட்டது
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் ‘நீட்’ தேர்வு திணிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாக பதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் திரும்பத்திரும்பப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அ.தி.மு.க. முயல்கிறது. ‘நீட்’ தேர்வு குறித்து இத்தகைய கேள்வியை எழுப்புவதற்கு அ.தி.மு.க.வினருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வைத் திணித்தது பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும்தான் என்பதற்கு நிறைய ஆதாரங்களை கூற முடியும். தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகத்தை எடப்பாடி பழனிசாமி ஆயிரம் அறிக்கைகள் விட்டாலும் மூடிமறைக்க முடியாது.
எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மத்தியில் 2014-ல் இருந்த வரை தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு திணிக்கப்பட வில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் 2017-ல் எடப்பாடி ஆட்சியில்தான் ‘நீட்’ தேர்வு முதல் முறையாக திணிக்கப்பட்டது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது என தெரிவித்தார்.