டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்

டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்.


பெட்ரோல் – டீசலுக்கு வாட் வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே,கொரோனா பேரிடரனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா? என தெரிவித்துள்ளார்.

கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ‘தி மயிலாப்பூர் கிளப்’ சீல்- ரூ.3 கோடி வாடகை பாக்கி கேட்டு நோட்டீஸ்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சொந்தமான 42 கிரவுண்ட் இடம், மயிலாப்பூர் லஸ் கார்னரில் ‘தி மயிலாப்பூர் கிளப்’ நடத்த 1903 ஜனவரி 1ம் தேதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் குத்தகை காலம் கடந்த 2000-ம் ஆண்டு முடிவடைந்தது. அதன்பிறகு, குத்தகைக்கு விட தடை விதிக்கப்பட்டது. எனவே, மயிலாப்பூர் கிளப் நிர்வாகத்திடம் கோயில் நிர்வாகம் சந்தை நிலவரம் அடிப்படையில் நிர்ணயித்து வாடகை வசூலித்து வந்தது.

2007ல் இந்த 42 கிரவுண்ட் நிலத்தில் 18 கிரவுண்ட் நிலத்தை கோயில் நிர்வாகம் கையகப்படுத்தி, அதை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அங்கு பார்க்கிங் மற்றும் நூலக கட்டப்பட்டது. இதனால் மீதம் இருந்த 24 கிரவுண்ட் நிலத்துக்கு கடந்த 2007 முதல் மாத வாடகைரூ.2.50 லட்சம் என நிர்ணயித்து ‘தி மயிலாப்பூர் கிளப்’ அறக்கட்டளை நிர்வாகத்துக்கு விடப்பட்டது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும்ரூ.50 ஆயிரம் கட்டணம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2016ல் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் மாதம்ரூ.4.50 லட்சம் செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தான் ரூ.3.57 கோடி பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பாக்கி தொகையை செலுத்த கோரி கோயில் நிர்வாகம் பலமுறை கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பேரில் சில லட்சங்களை மட்டும் கிளப் நிர்வாகம் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் ரூ.3 கோடி பாக்கி தொகை தர வேண்டியிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் கோயில் நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் கிளப்பில் இருந்து மதுபான பாரை எடுக்கவில்லை என்றால் கோயில் நிர்வாகம் சார்பில் சீல் வைக்குமாறு உத்தரவிட்டார். செயல்பட்டு வரும் மயிலாப்பூர் கிளப்பில், கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த மதுபான பாருக்கு கோயில் நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்தது. மேலும் ரூ.3 கோடி வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வடகொரியா பொருளாதார நெருக்கடியால் ஒரு கிலோ வாழைப்பழம் பல ஆயிரம் ரூபாய்

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்திலிருந்து உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நேரத்தில் சீனாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வட கொரியா துரிதமாகச் செயல்பட்டு எல்லைகளை மூடி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி மக்களை முடக்கியது. அதன் காரணமாக, 2020-ன் முற்பகுதியில் வட கொரியா கொரோனா நோய்த்தொற்றின் முதலாம் அலையைச் சிரமமின்றி சமாளித்தது.

ஆனால், 2020-ன் பிற்பகுதியில் கிம் ஜாங் உன்-னின் தற்காப்பு நடவடிக்கைகளை மீறி நோய்த்தொற்று பரவல் வட கொரியாவில் தீவிரமடைந்தது. அதன் விளைவாக, வட கொரிய அரசு பிற நாடுகளின் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவது, விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்தை நிறுத்துவது மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிப்பது எனக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது. கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டதன் காரணத்தால் வட கொரியா வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஏற்கனவே, கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நிலைகுலைந்து நின்ற அந்நாடு கூடுதலாக இயற்கை பேரிடர் மற்றும் பொருளாதார பாதிப்பால் கலங்கிப்போனது. அதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக வட கொரியாவில் கடும் பட்டினியும் பஞ்சமும் நிலவிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணுசக்தி திட்டத்தின் காரணமாக வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், இயற்கை பேரிடர்களால் பயிர்கள் நாசமாகி விட்டதாலும் தற்போது அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் பல ஆயிரம் ரூபாய்க்கு அதுவும் கடும் தட்டுப்பாட்டுடன் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது பொதுவெளியில் தலைகாட்டத் துவங்கியிருக்கும் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு உயர் மட்ட அதிகாரிகள் தான் காரணம் என்று சமீபத்தில் நடந்து முடிந்த உயர்மட்டக் கூட்டத்தில் கடுமையாக குற்றம்சாட்டினார். வெறும் எச்சரிக்கையோடு விட்டுவிடாமல் மக்களின் பசிக்கும், பட்டினிக்கும், கொரோனா உயிரிழப்புகளுக்கும் அரசு அதிகாரிகளின் அலட்சியமும், பொறுப்பற்ற செயல்பாடும் தான் காரணம் என்று கூறி ஏராளமானவர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக வட கொரிய ஊடகங்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் இரத்தம் உறைதலுக்கு சிகிச்சை

ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியால் அரிதான ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டன.

இந்த கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் மேற்படி அரிய ரத்தம் உறைதலுக்கான சிகிச்சையை கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்தவகையில் ரத்தம் உறைதலுக்கு எதிரான மருந்துகள், இன்ட்ரெவனஸ் இம்யூனோகுளோபூலின் இணைந்த கலவையை இந்த விஞ்ஞானிகள் பரிந்துரைத்து உள்ளனர்.

மோடி-அமித் ஷாவுக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜனதா தலைவர்களுக்கும் இடையேயான அரசியல் மோதல் சட்டசபை தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிய நிலையில், இறுதியாக மம்தா பானர்ஜி தேர்தலில் வென்று, மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு மாறவில்லை.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியிருக்கிறது. இதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் வாழ்த்துகளுடன் மாம்பழங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

வி.கே. சசிகலா: என்னைக் கட்சியை விட்டு நீக்குவதும் சிறுபிள்ளைத்தனமானது

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், தொண்டரிடம் பேசிய ஆடியோவை வி.கே. சசிகலா வெளியிட்டுள்ளார். அதில் வி.கே. சசிகலா எம்ஜிஆரின் அரசியல் பயணத்திலும் நான் இருந்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது.

கட்சிக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்பதும், என்னைக் கட்சியை விட்டு நீக்குவதும் சிறுபிள்ளைத்தனமானது. கட்சி தொடர்பாக நிறையக் கருத்துகளை என்னிடம் எம்ஜிஆர் கேட்பார். மேலும் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி எப்போதும் ஒற்றுமையுடன் இணைந்திருக்க வேண்டும். பிரிந்திருக்கக் கூடாது. அதிமுகவை கைப்பற்ற வேண்டியதில்லை அது நமது கட்சி எனத் தெரிவித்துள்ளார்.

நிரவ் மோடி சகோதரி மன்னிப்பு பெறுவதற்காக மத்திய அரசுக்கு ரூ.17¼ கோடி அனுப்பினார்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி நிரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய சகோதரி புர்வி மோடிக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளது. அவர் இவ்வழக்கில் மன்னிப்பு பெறுவதற்காக இந்திய அரசுக்கு புர்வி மோடி பணம் கொடுத்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

அமலாக்கத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24-ந்தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தை புர்வி மோடி தொடர்பு கொண்டார். தனது சகோதரர் உத்தரவின்பேரில், லண்டனில் தனது பெயரில் ஒரு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்ட தகவல் தனக்கு தெரிய வந்திருப்பதாகவும், அக்கணக்கில் உள்ள பணம் தனக்கு சொந்தமானது அல்ல என்றும் அவர் கூறினார்.

முழு விவரங்களையும் தெரிவித்தால் அவருக்கு மன்னிப்பு அளிப்பதாக நிபந்தனை விதித்தோம். அதன் அடிப்படையில், அவர் தனது லண்டன் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.17 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை இந்திய அரசின் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைத்தார். அவரது ஒத்துழைப்பால், குற்றச்செயலில் ஈட்டப்பட்ட ரூ.17 கோடியே 25 லட்சத்தை மீட்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை, கிண்டி, கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள அரசு கொரோனா மருத்துவமனையில், சட்டமன்றப்பேரவையில் கவர்னர் உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தவாறு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்கள்.

இம்மையத்தில் ககொரோனா தொற்றுலிருந்து மீண்டவர்களுக்கு இருதயம், நரம்பியல், சிறுநீரகம், வயிறு மற்றும் குடல், கண், நீரழிவு, உளவியல் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றிற்கான வசதிகளும் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தை மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, வெளிநாடு செல்பவர்களுக்கான மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார். இம்மையம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இம்மையத்தில், சர்வதேச பயணிகளுக்கு பன்னாட்டு சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படி ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு 1948-ல் இருந்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டு, உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தென் இந்திய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரே தடுப்பூசி மையமாக இந்நிலையம் விளங்குகிறது. மேலும், ஹஜ் பயணம் மேற்கொள்வோர்க்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும் இம்மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது எண்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 1 தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால்: வெங்கையா நாயுடு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடுஜி. உங்கள் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை என தெரிவித்துள்ளார்.