அதிக கட்டணம் வசூலித்த எதிரொலி கொரோனா ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு நடத்த உத்தரவிட்டனர்.

அப்போது பொள்ளாச்சியில் ஊத்துக்காடு ரோடு, பாலகோபாலபுரம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் இருப்பது தெரியவந்தது. மேலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு ரூ.900 கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது.

ஆனால் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ.1200 முதல் ரூ.1900 வரை கட்டணம் வசூலித்து உள்ளனர். எனவே 2 ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

எங்கே செல்கிறது தமிழகம்: பெற்ற மகளை தந்தையே சீரழித்ததால் 6 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி..!

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த 14 வயது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காவல்துறை விசாரணையில் அம்பலம் இதுகுறித்து அவர்கள் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை விசாரணையில் கர்ப்பத்திற்கு காரணம் அவரது தந்தை என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக மகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. காவல்துறையினர் தந்தையை கைது செய்தனர்.

தாசில்தார் வாகனத்தை, விஷ பாட்டிலுடன் முற்றுகையிட்ட இருளர் சமுதாய மக்கள்

அரியலூர் மாவட்டம் விளாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தேளூர், குடிசல், மண்ணுழி ஆகிய ஊர்களில் கடந்த 2006-07-ம் ஆண்டு மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு, ஒரத்தூர் இருளரின மக்கள், விவசாயம் செய்த நிலத்தை பட்டா போட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இருளர் சமுதாய மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்ததைத்தொடர்ந்து, 2012-ம் ஆண்டு பட்டா ரத்து செய்யப்பட்டது.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி, இருளர் சமுதாயத்தினருக்கு பட்டா வழங்க முன்வந்தார். இதையடுத்து அந்த இடத்தை அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு, இடத்தை அனுபவித்து வந்த இருளர் சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க, 2014-ம் ஆண்டு அரியலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

தற்போது இருளர் சமுதாயத்தினர் ஆழ்துளை கிணறு அமைத்து எள், கடலை, உளுந்து, பருத்தி, முந்திரி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வருவாய்த்துறை அதிகாரிகள், இருளரின மக்கள் விவசாயம் செய்துவரும் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அரியலூர் தாசில்தார் ராஜமூர்த்தி, நில அளவையர், விளாங்குடி கிராம நிர்வாக அலுவலர் அனுசுயா தேவி, தேளூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருளர் சமுதாயத்தினர் பட்டா மற்றும் கையில் விஷ பாட்டிலுடன் சென்று, தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரசாமி: மத்திய அரசின் முன்பு அடிமைகளை போல் நிற்பது தான் ஜி.எஸ்.டி. வரி நோக்கம்

சரக்கு சேவை வரி நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் ஆவதை பா.ஜனதா மற்றும் மத்திய அரசு கொண்டாடுகிறது. மாநிலங்களுக்கு இருக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை பறித்து, மத்திய அரசு தனது வயிற்றை நிரப்பி கொண்டது. அதனால் இதை மத்திய அரசு கொண்டாடலாம். ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களை சேர்த்துக் கொண்ட மத்திய அரசு, இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தது. ஆனால் போதிய இழப்பீடு வழங்காமல் மாநிலங்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது. இதை மாநிலங்கள் கொண்டாட வேண்டுமா?.

கர்நாடகத்திற்கு மத்திய அரசு ரூ.9 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டியது நிலுவையில் உள்ளது. கொண்டாட்ட நேரத்தில் இந்த இழப்பீட்டு தொகையை ஒதுக்கி இருந்தால், கர்நாடகமும் கொண்டாடி இருக்கும். கொரோனா நெருக்கடி நேரத்தில் இழப்பீட்டை வழங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாநிலங்களின் வலியின் மீது மத்திய அரசு கொண்டாடுகிறது.

மாநிலங்களின் வருவாயை மத்திய அரசுக்கு திருப்பி விடுவது, நிதி உதவிக்காக மாநிலங்கள் மத்திய அரசின் முன்பு அடிமைகளை போல் நிற்பது ஆகியவை தான் இந்த ஜி.எஸ்.டி. வரி திட்டத்தின் நோக்கம். இத்தகைய அடிமை திட்டத்தை வகுத்தது காங்கிரஸ். அதை பா.ஜனதா அமல்படுத்தியது. இப்போது நிதி வேண்டும் என்று மாநிலங்கள் கை ஏந்தி நின்று கொண்டிருக்கின்றன.

பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் சேர்க்க வேண்டாம் என போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. மாநிலங்களின் வருவாயை பறித்துள்ளது. அதனால் சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்பாட்டுள்ளதா?. புதிய தொழில் நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதா?. இவை எதையும் மத்திய அரசு செய்யவில்லை. இத்தகைய ஜி.எஸ்.டி. திட்டத்தை கொண்டாட வேண்டுமா?.என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியேற்று வெறும் 3 மாதங்களே முடிவடைந்த நிலையில் தீரத் சிங் ராவத் ராஜினாமா..!?

உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தலைமை மீது மாநில பாஜக தலைவா்கள் சிலா் அதிருப்தி அடைந்துள்ளனா். அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை அவரது தலைமையின் கீழ் பாஜக எதிர்கொள்வது சிறப்பாக இருக்காது என அவர்கள் கூறி வந்தனர்.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் டெல்லியில் தேசியத் தலைவர் நட்டாவுடனான சந்திப்புக்குப் பின் திரிவேந்திர சிங் ராவத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், உத்தரகாண்டின் அடுத்த முதலமைச்சராக 56 வயதான தீரத் சிங் ராவத் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் பதவியேற்று வெறும் 3 மாதங்களே முடிவடைந்த நிலையில் தீரத் சிங் ராவத் டேராடூனில் உள்ள ராஜ் பவனில் கவர்னர் பேபி ராணி மவுரியாவை இன்றிரவு நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவர் தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளார். அவரது இந்த திடீர் ராஜினாமா கட்சியினரிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன்: மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது? என தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை உடனே கையகப்படுத்த அதிகாரிகளுக்கு KKSSR ராமசந்திரன் உத்தரவு

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பணவீக்கத்தின் அழிவால் பொது மக்கள் கூக்குரலிடுகிறார்கள்

பணவீக்கம் எவ்வாறு பாதிக்கிறது

1 லிட்டர் கடுகு எண்ணெய் = விவசாயியின் 14 கிலோ கோதுமை

ஒரு விவசாயி குடும்பம் கடுகு எண்ணெய் வாங்க ஒரு மாதத்திற்கு சுமார் 1 குவிண்டால் கோதுமையை விற்க வேண்டும். வருமானமும் அதிகரிக்கவில்லை, விவசாயத்தில் சேமிப்பும் இல்லை. பணவீக்கத்தின் அழிவால் பொது மக்கள் கூக்குரலிடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

விரைவில் ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ரெடி..!

ஆவின் நியமனங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் – தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்.