முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவான அவரைத் தொடர்ந்து தேடிய நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு காவல்துறையினர் சென்னை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர். நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள அவரது வீடு மற்றும் விடுதியில் வைத்து விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

இன்று காலை அவரை காவல் வேனில் மதுரைக்கு அழைத்து வந்தனர். 7 மணிக்கு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பால்வளத்துறை அமைச்சர் நாசர்: தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது

சேலம் ஆவின் பால் நிலையங்களில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்கள் சந்திப்பில், சென்னையில் பழைய விலைக்கே ஆவின் பால் விற்ற 22 ஆவீன் பால் நிலையங்களுக்கு சீல் தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு ஒன்றரை டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக தரப்பட்டன.

அதற்கு ஒரு தொகையும் இதுவரை வரவில்லை. ஆதாரத்துடன் எங்களிடம் உள்ளது. அதன்மேல் நடவடிக்கை எடுப்போம், விடமாட்டோம்.இங்கிருந்து போனதற்கு அனைத்து ரசீதுகளும் உள்ளன. பணம் எதுவும் வரவில்லை.

வெளியே போனதற்கு மட்டும் ஆவணங்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் நடந்த முறைகேடான பணி நியமனம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் இந்த ஆட்சியில் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் வைர வரிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நினைவூட்டுகிறார்

கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்வது பெண்கள் ஒப்பாரி

 

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மதுரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மேலப்பொன்னகரம் பகுதி குழு சார்பில் தலையில் முக்காடு போட்டு பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

விலை உயர்வை கண்டிக்கும் வகையில், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்வது போன்றும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நூற்றாண்டு பழமையான அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கல்யாண் சிங் அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார்

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குச் சென்று உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் ஸ்ரீ கல்யாண் சிங் ஜி அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்: இந்த ஆண்டு “இந்திய மருத்துவர்” பாரத ரத்னாவைப் பெற வேண்டும்

அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு “இந்திய மருத்துவர்” பாரத ரத்னாவைப் பெற வேண்டும். “இந்தியன் டாக்டர்” என்றால் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களும்

இது தியாக மருத்துவர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும். இது அவர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் சேவை செய்பவர்களின் மரியாதையாக இருக்கும். இதில் முழு நாடும் மகிழ்ச்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

செஞ்சிலுவை சங்க நிர்வாகிக்கு தேசிய விருது

செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் சிறப்பாக சேவையாற்றும் ஒருவருக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தகுதியானவர்கள் ஜனாதிபதி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் செஞ்சிலுவை சங்கம் மூலம் சிறப்பாக சேவையாற்றியவர்களில் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அறிவிக்கும் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இணையதளம் மூலம் நடந்தது.

இதில் திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் இணை செயலாளர் சையது அபுதாகிருக்கு தேசிய அளவில் விருது அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் விருது நேரில் வழங்கப்படாமல் திண்டுக்கல் சங்க அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சையது அபுதாகிருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆட்சியர் விசாகன் சையது அபுதாகிருக்கு விருதை வழங்கி பாராட்டினார்.

மாற்றுத்திறனாளியின் கோரிக்கை ஏற்று உடனடி பணி தொடங்கியது

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற மாற்றுத்திறனாளி தையல் கடை நடத்தி வருகிறார். நடக்க முடியாத மூர்த்தி வீட்டில் இருந்து கடைக்கு சென்று வரும் மண் சாலை தாழ்வான இடத்தில் இருந்து மேட்டுப்பாங்கான பகுதிக்கு செல்லும் வகையில் அமைந்துள்ளது.

இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் மூலமாக அந்தப்பகுதியில் அவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் மண் சாலையால் தனக்கு ஏற்படும் சிரமங்களை போக்கவும், இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காகவும் மண் சாலை உள்ள பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனுப்பினார்.


இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கான டுவிட்டர் கணக்குக்கு இந்த கோரிக்கை குறித்த மனுவை அண்மையில் அனுப்பினார். இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவுப்படி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினார்கள். அதன் அடிப்படையில் அங்கே மண் சாலை இருந்த பகுதியில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.