பிரேசில் அதிபர் உணவு விடுதிக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ளார். ஜெய்ர் போல்சனேரோ தன் சக அமைச்சர்களுடன் சேர்ந்து இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார்.

அப்போது அங்கு பாதுகாவலில் இருந்த பாதுகாவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழை கேட்டுள்ளனர். அதற்கு ஜெய்ர் போல்சனேரோ தடுப்பூசி இன்னும் செலுத்திக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஜெய்ர் போல்சனேரோ சாலையோர உணவகத்தில் உணவருந்தும் நிலை ஏற்பட்டது.

விமானப்படை துணை தளபதியாக இருந்து வரும் விவேக்ராம் சவுத்ரி புதிய விமானப்படை தளபதியாக நியமனம்

இந்திய விமானப்படை தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா பதவி வகித்து வருகிறார். இவர் வருகிற 30-ந் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். ஆகையால், ஆர்.கே.எஸ். பதாரியாவிற்கு பதிலாக ஏற்கனவே விமானப்படை துணை தளபதியாக இருந்து வரும் விவேக்ராம் சவுத்ரியை புதிய விமானப்படை தளபதியாக நியமித்து உள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் இன்று ஆலோசனை

உலகம் முழுவதும் கொரோனா அதி தீவிரம் அடைந்த காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளை நடத்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்ற வந்தன.

மேலும், குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும் 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6, 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 755 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 626 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்களுக்கு அக்டோபர் 9-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த இரண்டு வாக்குப்பதிவுக்கும் சேர்த்து வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், நேற்று ஏராளமானோர் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 9 மாவட்டங்களிலும் பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராகுல்காந்தி: இந்திய-சீன எல்லையில் புதிய போர் அபாயம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அந்த பதிவில், “எல்லைகளில் புதிய போர் அபாயத்தை சந்தித்து வருகிறோம். அதை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா ஃபஸ்ட் மாத இதழின் அரசியல் ஆசிரியர் முனைவர் சி. அமல்தாஸ் அவர்கள் மா. சுப்பிரமணியம் மற்றும் ஹஸ்ஸான் மௌலானா அவர்களை சந்தித்தார்

தமிழக முதல்வரின் மக்களாட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறையை மகுடமாய் ஏற்று மக்களின் சுகாதாரத்திற்காக சுழன்று சுழன்று சுறு சுறுப்புடன் மாநிலம் முழுவதும் சூறாவளி பயணத்தால் மாவட்டந்தோறும் ஆய்வு பணிகள் மேற்கொண்டு அவ்வப்பொழுது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அரசு அலுவலர்களுக்கு வழங்கி முதல்வரின் நம்பிக்கை நாயகரான அண்ணன் DR.M.SUBRAMANIYAN, BA,LLB. அவர்களை இன்று அவர் தம் இல்லத்தில் இந்தியா ஃபஸ்ட் மாத இதழின் அரசியல் முனைவர் சி. அமல்தாஸ் அவர்கள் இன்று சந்தித்தார்.

மேலும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு JMH.ASAAN MOULAANA.M.L.A,. அவர்களை இன்று அவர் தம் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சந்தித்தார்.

நஞ்சராயன் குளத்தில் ஆயிரம் மரங்கள் நடும் விழாவை திருப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாநகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையம் நான்கு ரோடு அருகே நஞ்சராயன் குளம் அமைத்துள்ளது. திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக கூலிபாளையம் நான்கு ரோட்டில் உள்ள நஞ்சராயன் குளத்தில் ஆயிரம் மரங்கள் நடும் விழா சுற்றுச்சூழல் அணி மாநிலத் துணைச் செயலாளர் மா.நாராயணமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மத்திய மாவட்ட கழகத்தினுடைய ஆற்றல்மிக்க செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் க.செல்வராஜ்MLA அவர்கள் மரம் நடும் விழாவை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி IAS அவர்களும் தெற்கு மாநகர பொறுப்பாளர் அண்ணன் TKT நாகராஜ் அவர்களும் வடக்கு மாநகர பொறுப்பாளர் அண்ணன் ந.தினேஷ் குமார் அவர்களும் மாவட்டத்தின் புதல்வர் அண்ணன் திலகராஜ் அவர்களும் மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு அரசாணை: நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த குழு அமைத்து

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் அதாவது நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்கும் திட்டதை செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக குழுவை அமைக்கவும் கேட்டுக் கொண்டிருந்தது.

அதைப்போல, இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கமல்ஹாசன்: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது.

ஒரே நாளில் 453 நிலத்தரகர்கள் அதிரடி கைது

அசாம் மாநிலத்தில் சட்டவிரோத நிலத்தரகு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 453 நிலத்தரகர்கள் காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா டுவிட்டரில் பக்கத்தில், ‘மாநிலத்தில் இடைத்தரகர்கள் ராஜ்ஜியத்தை ஒழிக்கும் விதமாக சட்டவிரோத நிலத்தரகு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலகங்களில் பொதுமக்களை தொந்தரவுபடுத்தும் இடைத்தரகர்களின் செயல்பாடு முடிவுக்கு வர வேண்டும். அதற்காக அவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.