நக்கீரன் கோபால் வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுப்பு..! ஓம்கார் பாலாஜி அதிரடி கைது..!

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காததால் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27 -ஆம் தேதி கோயம்புத்தூர் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கை அறுத்து விடுவதாகவும் ஓம்கார் பாலாஜி பேசியிருந்தார்.

இது தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின்பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி, மனுதாரர் தான் பேசியதற்கு மன்னிப்பு கோரினால் அது பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து வாய்மொழி உத்தரவை பிறப்பித்து இருந்தார்.

இந்த மனு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓம்கார் பாலாஜி தரப்பில் மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை மாற்றி தானாக முன்வந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மனுவை மாற்றி தாக்கல் செய்ய சம்மதிக்கவில்லை. இதையடுத்து, முன் ஜாமீன் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி விசாரணையை நவம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையடுத்து, மாலை 5 மணிக்கு நீதிமன்றத்திற்கு சென்ற ஓம்கார் பாலாஜி, என்னை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளனர், எனவே காலை சரணடைகிறேன் என்று கோரினார். அரசு வழக்கறிஞர் சந்தோஷ், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காததால் இனி காவல்துறையினர்தான் முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார். அப்போது, நீதிபதி, இப்போது நிவாரணம் கோர முடியாது என தெரிவித்தார். இதையடுத்து, ஓம்கார் பாலாஜி வழக்கறிஞர்கள் சங்க அறைக்கு சென்றார்.

கைது செய்ய எந்த தடை உத்தரவும் இல்லாததால் ஓம்கார் பாலாஜியை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்லக்கூடிய அனைத்து வாயில்களிலும் கோயம்புத்தூர் காவல்துறை நிறுத்தப்பட்டனர். ஓம்கார் பாலாஜி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது வழக்கறிஞர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் ஓம்கார் பாலாஜி வெளியில் வந்தபோது அவரை காவல்துறை கைது செய்து பின்னர் கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அமித் ஷா திட்டவட்டம்: சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பினாலும் 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது..!

சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பினாலும் 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது என அமித் ஷா தெரிவித்தார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஷிந்த்கேடா மற்றும் சாலிஸ்கான் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “சில நாட்களுக்கு முன்பு உமேலா குழுவைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை சந்தித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டனர். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், SC – ST – OBC-க்கான இடஒதுக்கீட்டை குறைக்க வேண்டும். ராகுல் காந்திக்கு நான் சொல்கிறேன், உங்கள் நான்கு தலைமுறைகளால் கூட SC – ST – OBC க்கான இடஒதுக்கீட்டை வெட்டி முஸ்லிம்களுக்கு கொடுக்க முடியாது.

ராகுல் பாபா, நீங்கள் அல்ல உங்களது நான்கு தலைமுறை வந்தாலும் SC – ST – OBC யினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்து இஸ்லாமியருக்கு வழங்கமுடியாது. என்ன வந்தாலும் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவர முடியாது. சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பினாலும் 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது என அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை..! விடுதி கண்காணிப்பாளர் உட்பட இரண்டு பேர் கைது..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்பள்ளியின் விடுதி கண்காணிப்பாளர் சரண் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் பாலியல் தொல்லையை தாங்க முடியாத மாணவர் சம்பவம் பற்றி முதலில் பள்ளி தாளாளர் சுரேஷிடம் தெரிவித்துள்ளனர் அதனை பொருட்படுத்தாத பள்ளி தாளாளர் மாணவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து துணை காப்பாளர் ராம் பாபுவிடம் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், அவரும் மாணவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, தனது பெற்றோர்களிடம் கூறி கதறி மாணவர்கள் அழுதுள்ளனர். இதனை கேட்ட ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பள்ளியின் முன் திரண்டு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை கைது செய்து பள்ளியை மூடி சீல் வைக்க வேண்டும் என பிரச்சனை எழுப்பினர்.

சம்பவம் அறிந்த தாராபுரம் காவல்துறை சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியது.

மேலும், திருப்பூர் குழந்தைகள் நல அமைப்பு மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட 17 மாணவர்கள் பள்ளி தாளாளர் சுரேஷ் மற்றும் காப்பாளர் சரண் உதவிக்காப்பாளர் ராம்பாபு மாணவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுரேஷ், விடுதி காப்பாளர் சரண் மற்றும் உதவிக்காப்பாளர் ராம்பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமான்: கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்..!

கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, “கூட்டணி என்பது எனக்கு சரிப்பட்டு வராது. நான் பெரிய கனவு கொண்டுள்ளேன். ஒரு நேர்மையற்றவன் நாட்டு மக்களையும் நேர்மையற்றவன் ஆக்குகிறான். ஒரு தலைவன் தான்தான் இதை செய்வேன் என இருக்க கூடாது. எனக்கு பின்னால் வரும் தலைமுறை இதை செய்யும் என்ற நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும். எங்கள் காலத்தில் வென்றால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் இன்னொரு தலைமுறைக்கு கையளித்து செல்வோம்.

நல்லாட்சி நடத்துவதற்கு எதற்கு விளம்பரம் தேவை. தாய்மார்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்?. படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்?. நல்ல ஆட்சி கொடுப்பதாக நாடும், மக்களும் சொல்லவில்லை. ஆட்சியில் இருக்கும் அவர்கள்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். இங்கு சேவை அரசியலோ, செயல் அரசியலோ இல்லை. வெறும் செய்தி அரசியல், விளம்பர அரசியல் மட்டும்தான் உள்ளது.

நல்ல ஆட்சி கொடுத்தால் மக்கள் அந்த தலைவனை சந்திக்க ஓடி வர வேண்டும். ஆனால் 200 ரூபாய் கொடுத்து மக்களை திரட்டி வரவேற்பு கொடுக்கிறார்கள். நல்லாட்சி கொடுப்பவர் ஏன் ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது? மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதாக சொன்னார்கள். எத்தனை முறை திமுக ஆட்சியில் இருந்துள்ளது. ஏன் மழைநீர் வடிகால் வசதிக்கு நிரந்தர திட்டம் செயல்படுத்தப்படவில்லை?. 4 ஆயிரம் கோடி செலவழித்த பின்னர் ஏன் 1,500 படகுகள், ஆயிரக்கணக்கான நீர் இறைப்பு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன?.

காமராஜரே தான் நல்லாட்சி கொடுத்ததாக சொல்லவில்லை. நல்லாட்சி கொடுப்பவன் அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது மக்களுக்கே தெரியும். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். அதிகாரத்துக்கு தனித்து நின்று வர முடியாது என்று யார் சொன்னது?. என்னால் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாவிட்டாலும் என்னை தொடர்ந்து வரும் என் தம்பி, தங்கைகள் ஆட்சி அமைப்பார்கள்.

கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். என் கால்களை நம்பித்தான் என் பயணம் இருக்கும். அடுத்தவன் கால்களை நம்பி என் பயணத்தை தொடர முடியாது. எனவே கூட்டணி எனக்கு சரியாக வராது. கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை. விஜய் தற்போது கட்சி ஆரம்பித்து தனது கொள்கைகளை அறிவித்துள்ளார் . ஆனால் அவரின் கொள்கைகளுக்கும் எங்களது கொள்கைகளுக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது முதலில் அவர் தனது கொள்கைகளை திருத்திக் கொள்ளட்டும் என சீமான் தெரிவித்தார்.

தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்காததால் மருத்துவருக்கு கத்திக்குத்தா..!?

தாயாரின் தற்போதைய உடல்நல பிரச்சனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சை சரியாக கொடுக்காதது தான் காரணம் என்று தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதன் விளைவு அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து.

சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ 230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 1000 படுக்கை வசதிகள் கொண்டு இதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்தே புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியிலுள்ள காமராஜர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த விக்னேஷின் தந்தை 3 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். தாய் மற்றும் 2 சகோதரருடன் விக்னேஷ் வசித்து வருகிறார். இவரது தாய் உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது.

முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயின் சிகிக்சைக்கு பணம் தடையாக இருந்ததால் தாயை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்திலுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்தவமனையில் சேர்த்துள்ளார். இங்கு விக்னேஷின் தாயாருக்கு 6 முறை கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தாயாரை விக்னேஷ் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையே தான் தாயாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மீண்டும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் உன்னுடைய தாயாருக்கு முதலில் சரியாக வழங்கப்படவில்லை. அதனால், தற்போதைய உடல்நல பிரச்சனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சை சரியாக கொடுக்காதது தான் காரணம் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த விக்னேஷ் இன்று காலையில் தனது வீட்டில் இருந்தே கத்தியை எடுத்து வந்து கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை சந்தித்து பேசியுள்ளார். இதில் ஏற்பட்ட கருத்து மோதலில் மருத்துவர் பாலாஜியை சராமரியாக குத்தியுள்ளார். மருத்துவர் பாலாஜி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தான் தாயாருக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்ததாக தெரிகின்றது.

கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து..!

“சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு நான்கு பேர் சிகிச்சைக்காக இன்று வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான்கு பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பார்கள் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி பணியில் இருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்த சிலர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியதில் ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிண்டி காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மருத்துவர் பாலாஜியை தாக்கிய நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் மறியல்..!

விழுப்புரம் அருகே சுடுகாடு வசதி இல்லாததால் சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் அடுத்த பனங்குப்பம், புதுநகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கருணாநிதி உடல்நலம் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது சுடுகாடு வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் திடீரென கோலியனூர் கூட்ரோடு பகுதியில் சாலையிலேயே சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த வளவனூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பனங்குப்பம் புதிய காலனியில் இறந்தவர்களுக்கு சுடுகாடு இல்லாததால், வாய்க்காலுக்கு அருகே புதைத்து வருகிறோம். இதனால், இறந்தோரை புதைக்க தோண்டும் போது, வாய்க்காலில் இருந்து வெளியேறும் விஷவாயு தாக்கி, பலருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இந்த பிரச்னை சம்பந்தமாக நாங்கள் பல முறை, தாசில்தார் உட்பட பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், இப்பிரச்னை சம்பந்தமாக நாங்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்து போஸ்டர் வைத்து கொண்டு சடலத்தோடு ஊர்வலமாக வந்ததோடு, மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை, நீங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் செய்யக்கூடாது என்றும், உங்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் முறையாக கொண்டு செல்லுங்கள், நாங்களும் இந்த பிரச்னையை அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு, சடலத்தை பழைய இடத்திலேயே புதைக்க பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாராபுரத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..! நீதிபதி சி. எம். சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பேரணியை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சி. எம். சரவணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி பொள்ளாச்சி சாலையில் கடைவீதி வழியாக அமராவதி ரவுண்டானா சென்று மீண்டும் CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் வந்தடைந்தது. அப்போது பள்ளி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போதையை ஒழிப்போம், போதைப் பொருட்களை தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு மாணவர்கள் சென்றனர்.

மேலும் இந்த பேரணியின் முடிவில் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழு, தலைவரும்மான சக்திவேல். மூத்த வழக்கறிஞர் கார்வேந்தன் ஆகியோர் மாணவர்களிடையே பேசுகையில், பீடி, சிகரெட், புகையிலை பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் உபயோகிப்பதால் உயிர் கொல்லி நோய்களான கேன்சர், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்பாடு என்ன தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து தகுந்த மருத்துவ சிகிச்சைகள் பெற்று நலவாழ்வு வாழ அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் போதைப்பொருட்களை உபயோகிக்க மாட்டோம் போதைப் பொருட்களை ஒழிக்க உறுதுணையாக இருப்போம் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பேரணியில், தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கலைச்செழியன், சங்கச் செயலாளர் ராஜேந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அர்ச்சனா பட்நாயக் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பு..!

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரத சாஹூ சமீபத்தில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளத்துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில், தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து, ஒடிசாவை சேர்ந்த 2002-ஆம் ஆண்டு தமிழக பிரிவு IAS-சான அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நேற்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பற்றுக் கொண்டார். எனவே தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழிசை செளந்தரராஜன்: திமுகவின் மிரட்டல்..! கமல்ஹாசன் தன் உலக நாயகன் பட்டம் துறவு..!

உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய அரசின் திட்டமான 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “மழை பெய்ய தொடங்கினால், துணை முதலமைச்சர் உடனடியாக மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு வருவார், ஆய்வு செய்வார் அப்புறம் சென்று விடுவார். பிறகு இந்த மழை நேரத்தில் பொதுமக்களாகிய நாம் தான் கஷ்டப்பட வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

சிறிய மழை பெய்தாலும் கூட உடனடியாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதாக கூறி கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து விடுவார். துணை முதலமைச்சர் ஆய்வு செய்த விளம்பரம் இன்று மாலை வரை சேனல்களில் ஒளிபரப்பப்படும். அந்த வகையில் விளம்பரத்திற்கான ஆட்சியே தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. தற்போது முதலமைச்சர் உள்ள மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போதில் இருந்து தற்போது வரை சிறுமழை வந்தாலும் சென்னை தத்தளித்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும், உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள். கமலஹாசன் முழுவதும் திமுகவாக மாறி விட்டார் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.