நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது, ஒரு பக்கம் ஸ்டாலினின் திமுக, மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக. இருகட்சிகளும் பெயரில் தான் வேறு. மற்ற செயல்களில் அனைத்தும் ஒன்றுதான்.
இருகட்சிகளும் சேர்ந்து டிடிவி.தினகரனை தோற்கடிக்க முயல்கிறார்கள். ஆனால் மக்கள் அவர்கள் பக்கம் இல்லை. அதிமுக தொண்டர்கள் வாக்கும் டிடிவி.தினகரனுக்கு தான். அதிமுக தொண்டர்கள் அமமுகவுடன் இணைய போகிறார்கள். அவர்களை வழிநடத்தக் கூடிய உண்மையான தலைவன் யார் என்பது அதிமுக தொண்டர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.
பூச்சாண்டிகளையும், போலித் தலைவர்களையும் எந்த தொண்டனும் கண்டுபிடித்து விடுவான். அப்படிபட்ட தலைவர்கள் தான் இப்போது தேர்தலில் ஒன்று சேர்ந்து உள்ளார்கள். ஸ்டாலின், இபிஎஸ் இருவருக்கும் டிடிவி.தினகரனை பிடிக்காது. காரணம், அவர் வெற்றிபெற்றுவிட்டால் தமிழகத்தின் அரசியல் மாறும் என்பது இருவருக்கும் தெரியும்.
ஜூன் 4-ம் தேதி டிடிவி.தினகரன் வெற்றிபெற்ற பிறகு உண்மையான மக்களை சார்ந்த அரசியல் நடக்கும். அதனால் தான் இருவரும் இணைந்து இவரை தோற்கடிக்க கங்கனம் கட்டிக்கொண்டு தேனியில் பேசிவிட்டு சென்றுள்ளனர் ” என அண்ணாமலை குப்புசாமி தெரிவித்தார்.