ஆதவ் அர்ஜுனா மாமனார் எதுக்காக 900 கோடியை கொடுத்தார் .. என்ன நோக்கத்திற்காக கொடுத்தார்.. எந்த நலத்திட்டத்திற்காவது என்று சொல்லி கொடுக்கப்பட்டதா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜை 2026 நிகழ்ச்சி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சீமான் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தம்பி ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் எழுந்து நின்று, உதயநிதி ஸ்டாலினை பார்த்து 900 கோடியை நீங்க மார்டினிடம் இருந்து வாங்குனீர்களா? இல்லையா? என்று கேட்டாரா இல்லையா? அதை கொடுத்த உங்க மாமாகிட்ட தான் கேட்க வேண்டும் என உதயநிதி சொல்கிறார்.. ஏன் வாங்குனீங்க என அவர் கேட்கிறார்.. ஏன் கொடுத்தீங்க என இவர் கேட்கிறார்.. அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவராவது எழுந்து 900 கோடி ரூபாய் எங்க இருந்து வந்தது, எதற்காக கொடுத்தீங்க என கேட்டார்களா.

விஜய் ஒதுக்கிய தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்துக்கு 755 கோடி தான் ஒதுக்கியிருக்காரு.. அண்ணன் சீருக்கு 760 கோடி தான் ஒதுக்கியிருக்காரு.. ஒரு திட்டத்தினுடைய நிதி எவ்வளவு ஒதுக்கப்படுகிறதோ, அதை விட சற்று கூடுதலாக 900 கோடியை வாங்குனதாகவும் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். ஒரு தனி முதலாளி, அதிகாரத்தில் இருக்கிற அரசுக்கு 900 கோடி ரூபாயை ஏன் கொடுத்தார்?.. அவரிடம் இருந்து எதற்காக 900 கோடி வாங்கப்பட்டது.
இதற்கு யார் கிட்ட பதில் இருக்கு.. கொடுத்த இவங்க பதில் சொல்லுவாங்களா.. இல்லை வாங்கின இவங்க பதில் சொல்லுவாங்களா? அவையில் இருந்த யாரும் கூட கேள்வி கேட்கவில்லையே ஏன்?.. எல்லாரும் வாங்கி இருக்காங்க.. ஆமாவா, இல்லையா.. இப்போ நான் கேட்கிற கேள்வியை அவையில் கேட்டிருக்க வேண்டுமா இல்லையா? எதுக்காக அரசுக்கு 900 கோடியை கொடுத்தீங்க.. என்ன நோக்கத்திற்காக கொடுத்தீங்க.. எந்த நலத்திட்டத்திற்காவது என்று சொல்லி கொடுக்கப்பட்டதா?” என சீமான் தெரிவித்தார்.