கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி பூமலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குப்புசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிற அப்போது பிரச்சாரத்தின் போது தேசிய அண்ணாமலை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் ஜவுளி தொழிலை காத்திடுவோம் என அண்ணாமலை குப்புசாமி பேசினார்.
அப்போது விசைத்தறியாளர் ஒருவர் அவரைக் குறுக்கிட்டு கடந்த 10 ஆண்டு காலமாக நீங்கள் தானே ஆட்சி செய்தீர்கள் ஜவுளி தொழிலை நீங்கள் காக்க வில்லையே கடந்து பத்து ஆண்டுகாலம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
உடனே அண்ணாமலையை சுற்றி இருந்த பாஜகவினர் அவரைத் தாக்க முயன்றனர். எனினும் தொடர்ந்து நான் கேட்டதற்கு பதில் அளிக்குமாறு விசைத்தளியாளர் கேட்டார். மேலும் 10 ஆண்டில் எங்கள் தறி தொழில் நாசமடைய காரணமே உங்க பாஜக ஆட்சிதான் என கூறிய நபருடன், பாஜக குழுவினர் தகராறில் ஈடுபட்டு அவரை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.