சென்னை மாநகராட்சியின் 340 வருட வரலாற்றில் தலித் பெண் மேயர் பதவியேற்பு..!

340 வருட வரலாற்றில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியில் திமுக சார்பில் முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர மா.சுப்பிரமணியன் போன்றோர் அலங்கரித்த நிலையில் இன்று திருவிக நகர் 74-வது வார்டு பகுதியில் வெற்றி பெற்ற பிரியா ராஜன் சென்னை மேயராக பொறுப்பேற்க உள்ளார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சென்னை மாநகராட்சியில் 153 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. மேலும் அதிமுக 15 இடங்களிலும், அமமுக, பாஜக தலா ஒரு இடங்கள் மட்டுமின்றி சுயேட்டைகள் 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் வார்டு உறுப்பினராக நேற்று பதவியேற்று கொண்டனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி முதன்முறையாக பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் சென்னை மாநகராட்சியின் அடுத்த மேயராக சென்னை திருவிக நகர் 74-வது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் திமுக தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்த 28 வயதான பிரியா ராஜன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டவேட்பாளரை 6,299 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்ற பிரியா ராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி என்பது மட்டுமின்றி பிரியா ராஜன் தந்தை பி.ராஜன், அப்பகுதியின் தி.மு.க துணைச்செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் சென்னை மாநகராட்சி, 1957 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகிய இரு பெண் மேயர்களாக பதவி ஏற்ற நிலையில் தற்போது பிரியா ராஜன் மூன்றாவது பெண் மேயரராகவும், முதல் தலித் மேயராக பிரியா ராஜன் பதவி ஏற்ற என்பதும் குறிப்பிடத்தக்கது.