பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகம், பொதுசெயலாளர் கரு.நாகராஜன், வி.பி. துரைசாமி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு சியாமா பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் எல்.முருகன் அளித்த பேட்டியில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன சொன்னார்களோ, அது கவர்னர் உரையில் இடம் பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஒன்றிய அரசு என்று அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கரை அவமதிக்கும் செயல் என தெரிவித்தார்.