தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்கிக் கிடப்பதும், வாகனப் போக்குவரத்தில் பாதிப்பது ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல், போன்றவை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தின.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், ஆறுகள் போன்றவற்றில் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் வரிசையில் வேளச்சேரி ஏரியில் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். குறிப்பாக வேளச்சேரி மக்களின் நீண்ட நாள் கனவு கோரிக்கையான வேளச்சேரி ஏரியை தூய்மைபடுத்தி மக்களின் குடிநீர் ஆதாரமாக கொண்டுவரவேண்டுமென்கிற நிலையை புரிந்து மாண்புமிகு முதல்வர் இன்று நேரில் வந்து ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மாண்புமிகு அமைச்சர்மா. சுப்பிரமணியம் அவர்கள், மாண்புமிகு திருமதி தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள், திரு.ஹஸ்ஸான் மௌலானா அவர்கள், மேற்கு பகுதி செயலாளர் திரு.அரிமா சு . சேகர் அவர்கள்.178-வது வட்டக்கழக செயலாளர் சேவை மாமணி K.N.தாமோதரன், அவர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள்,மகளிரணி சகோதரிகள்,பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.