அம்மா, அப்பா கூடவே ஒற்றுமையா இல்லாதவர் எப்படி இளைஞர்களை வழி நடத்துவார் என வேளாண் துறை அமைச்சர் MRK. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு, 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி, நிதி நிலை அறிக்கையில் தமிழகம் என்ற பெயரை புறக்கணித்தது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் பொதுக் கூட்டம் நடத்துமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி கடலூர் மாவட்டம் திருமுட்டத்தில் அறிஞர் அண்ணா திடல் கலைஞர் அரங்கத்தில் பாஜகவை கண்டித்து திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் MRK. பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் MRK. பன்னீர் செல்வம் பேசுகையில்,. நேற்று மழையில் முளைத்த காளான் சொல்றாரு! என்னாது இனிமே ஏமாற மாட்டாங்களாம். நீங்கள் சினிமாகாரர், முதலமைச்சர் ஆகுறது சாதாரணமா? 50 ஆண்டுகாலம் கஷ்டப்பட்டு உழைத்து பல்வேறு தடைகளை தாண்டி நாம் ஆட்சியை பிடித்துள்ளோம்.
பிளாக் டிக்கெட் விற்றவங்கலாம் பேசுறாங்க! அவர் வாங்கும் சம்பளமே பிளாக்கில் தான் வாங்குகிறார். ஒயிட்டில் வாங்காதவர், ஆட்சிக்கு வந்து அமர போகிறாராம். அம்மா, அப்பா கூடவே ஒற்றுமையா இல்லை. இளைஞர்களை எப்படி வழி நடத்துவார். ஆட்சியை பிடிக்க போறாங்களாம், முதல்வராக போறாங்களாம், இதென்ன சினிமாவா? இளைஞர்களை கொள்கை பிடிப்புள்ளவர்களாக உருவாக்கியதே திமுகதான். நாங்கள் தடம் மாறாமல் எங்கள் உடலில் கருப்பு சிகப்பு ரத்தம் ஓடுது.
இளைஞர்களின் கலாச்சாரத்தையே வீணாக்கும் நடிகன், ஆட்சியை பிடிக்க போறாராம். இளைஞர்களை திருத்த போறாராம். நேற்று கட்சி ஆரம்பித்துவிட்டு போராட்டம் நடத்தவில்லை, 10 கட்சி துண்டை போட்டுகிட்டார். எல்லாம் சினிமா செட்டிங் என MRK. பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சனம் செய்தார்.