மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவர் திலீப் கோஷ் தனது 60-வது வயதில் பாஜக பெண் தொண்டரை காதலித்து திருமணம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான 60 வயதான திலீப் கோஷ். கடந்த 2021-ம் ஆண்டில் எக்கோ பார்க்கில் திலீப் கோஷ் நடைப்பயிற்சிக்கு சென்றார். அப்போது பாஜகவை சேர்ந்த பெண் தொண்டர் ரிங்கு மஜும்தார் என்பவர் பழக்கம் ஏற்பட்டது. ரிங்கு மஜும்தாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதும், அவருடன் இப்போது கணவர் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே தான் ரிங்கு மஜும்தார், திலீப் கோஷிடம் தனது காதலை கூறினார். அதனை திலீப் கோஷ் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கொல்கத்தா அருகே உள்ள நியூ டவுனில் உள்ள வீட்டில் திலீப் கோஷ் மற்றும் ரிங்கு மஜும்தார் பாரம்பரிய உடை அணிந்து வேதமந்திரங்கள் முழங்க திருமணம் செய்து கொண்டனர்.