பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 5-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பிரதமர் மோடி டெலிவிஷனில் தோன்றி, ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் தடை செய்யப்படுவதாக அறிவித்தார்.
பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது, ஒரு பேரழிவு நடவடிக்கை. அத்திட்டம் வெற்றிகரமானதாக இருந்திருந்தால், ஊழல் ஏன் நிற்கவில்லை? கருப்பு பணம் ஏன் திரும்பி வரவில்லை? விலைவாசி ஏன் கட்டுக்குள் வரவில்லை?” என தெரிவித்துள்ளார்.