நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி காவல்துறையினரிடம் மன்னிப்பு கேட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது.
ஆனால், அதை மீறி நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது.
சீமான் காவலாளி மிரட்டல் விசாரணைக்கு வந்த காவல்துறையினரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல்துறை அங்கே வந்து காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். அதோடு அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீமான் ஓசூரிலுள்ள நிலையில் சீமான் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அழைத்து செல்லும் போது, சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு போலீஸ் அதிகாரி.. என்னங்க சாரி.. என்ன சாரி.. விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரியிடம் இப்படித்தான் செய்வீர்களா? என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து கயல்விழி அந்த காவல்துறை அதிகாரியிடம் சாரி கேட்டபடியே பின் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.