தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய புதிய கட்டிடம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி சென்றுள்ளார்.
இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகள் மற்றும் சிறப்பாக கொரோனா பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் கேடயங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் அதே நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சுகாதாரத் துறையின் பரிசு பெட்டகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பென்னாகரம் வட்டம் ஒகேனக்கலில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் ஒகேனக்கல் புறப்பட்டுச் சென்றார்.
அப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென காரை நிறுத்தி மாணவிகளை சந்தித்தார். பின்னர் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.