தலைவிரித்து ஆடும் ஊழல்: நல்லா.. இருக்கும் சாலைக்கு 3 கோடியா..?

ஒரு சாமானியன் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் வீடு கட்டி முடித்து பில் வாங்குவது என்றால் சாமானியனின் முழு ஆவியும் போய் அவருடைய வாயில் இருந்து நுரை தள்ளிவிடும் அளவிற்கு அவர் படும் பாடு அந்த இறைவனே ஒரு கணம் விழி பிதுங்கி நிற்பார். இது இன்றல்ல நேற்றல்ல பல ஆண்டுகளாகவே சாமானியன் படும் துயரம் சொல்லில் அடங்காது.

பத்து ஆண்டுகால அதிமுகவின் ஊழல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி தமிழகத்தில் விடியலை உருவாக்குவோம் என விடியல் வசனங்களை பேசி ஆட்சி பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக தமிழகம் முழுவதும் சாலைகள் சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதன் வரிசையில் கரூர் மாவட்டத்தில் சாலைப்பணிகள் மேற்கொள்ள ரூ.170 கோடி நிதியில் எம்.சி.எஸ்.சங்கருக்கு மட்டும் ரூ.140 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளன என முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுலவர் எம்.லியாகத்திடம் புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில் கரூர், ஈசநத்தம் சாலையில் உள்ள வால்காட்டுப்புதூர், வாங்கல் சாலையில் உள்ள என்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் சாலையில் புதிய சாலை அமைத்ததாக கூறி மோசடி நடந்துள்ளதாகவும் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் நன்றாக உள்ள சாலைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாக கூறி சுமார் 3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளன என புகாரில் தெரிவித்து மட்டுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில். ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ் சங்கர் ஆனந்த், கரூர் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி அவசர அவசரமாக சாலை போடும் பணி நடைபெற்றுள்ளது. இதனிடையே, விசாரணை நிறைவடையும் வரை சாலை போடும் பணியை நிறுத்தசொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் எம்.ஆர். விஜயபாஸ்கர் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தில் 4 முறையும், தலைமைச் செயலாளரிடமும் எம்.ஆர் விஜயபாஸ்கர் புகார் அளித்து மட்டுமின்றி தமிழக ஆளுநருக்கும் தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் நெடுஞ்சாலை துறையின் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமாவை, நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் பணியிடைநீக்கம் செய்துள்ளார். மேலும் உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோரை, திருப்பூர் மண்டல பொறியாளர் வளர்மதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

நெடுஞ்சாலைத்துறை கிராமப்புற சாலைகள் கோட்ட பொறியாளர் நித்திலன், உதவி கோட்ட பொறியாளர் முகமது ரஃபிக், கோட்ட கணக்கர் சத்யா, உதவி பொறியாளர்கள் தீபிகா, கார்த்திக்கை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.
கடந்த அரை நூற்றாண்டுகளாகவே அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி தமிழகம் முழுவதும் ஊழல் தலைவிரித்து, ஊழல் அதிகாரிகளை தட்டி கேட்க திறனில்லாத ஆட்சியாளர்கயாகவே வளம் வருகின்றார்கள் என்பதே ஒவ்வொரு சாமானியனின் மன குமுரலாக உள்ளது