ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை என்ன செய்தீர்கள்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சி சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரில் என்ன நியாயம் இருக்கிறது. இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை என்ன செய்தீர்கள்? இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை சுடும் தைரியம் பயங்கரவாதிகளுக்கு எப்படி வந்தது?
பயங்கரவாதிகள் குழு நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி திரும்பி விட முடியும் என்கிற எண்ணம் எப்படி வந்தது. அந்த எண்ணமே வந்து இருக்கக்கூடாது. அவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள். நினைத்தாலே போட்டுத்தள்ளி விடுவார்கள் என்கிற பயம் இருந்திருந்தால் அந்த சிந்தனை அங்கேயே செத்து இருக்கும்.
புல்வாமா தாக்குதல் ஒரு படிப்பினை இல்லையா. பஹல்காம் சுற்றுலா தலத்தில் கூடுதல் பாதுகாப்பு இருந்து இருக்க வேண்டாமா? சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க முடியவில்லை. புல்வாமா தாக்குதலில் 42 ராணுவ வீரர்களையே நம்மால் பாதுகாக்க முடியவில்லை என என சீமான் தெரிவித்தார்.