தாம் தூம் எகிறி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த வந்த அண்ணாமலையின் குரல் வலையை சமயம் பார்த்து மிக கச்சிதமாக எடப்பாடி பழனிசாமி அடக்கனார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முன்னாள் அமைச்சர்களான KP முனுசாமி, SP வேலுமணி, CV சண்முகம், M தம்பிதுரை MP ஆகியோரின் டெல்லி பயணம் பலரது புருவங்களை உயர்த்த வைத்தது. மேலும் எவ்வித முன்னறிவிப்புமின்றி எடப்பாடி பழனிசாமி அணியை சென்னை விமான நிலையத்தில் பார்த்த அடுத்த நொடியில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது.
இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அணி இறங்கியதில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நகர்வுகளையும் கேமராக்கள் வட்டமிட தொடங்கியது. ஆகையால், இந்த கேமராவின் மூன்றாவது கண்களுக்கு பயந்து சில கார்கள் மாறி மாறி செல்லவேண்டுய சூழ்நிலை ஏற்படாது. எப்படியோ ஒரு வழியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது மட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி மட்டும் அமித் ஷாவை தனியே 50 நிமிடம் சந்தித்து பேசியது தமிழக அரசியல் பேசுபொருளாக மாறியது.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அணி அமித் ஷாவை நடத்திய சந்திப்பை வைத்து அதிமுகவைவும், எடப்பாடி பழனிச்சாமியையும் சமூக வலைத்தளங்களில் பங்கமாய் கலாய்க்க தொடங்கினர். தமிழக சட்டசபையிலும் இது எதிரொலிக்க தொடங்கியது. இந்நிலையில், தமிழக சட்டசபை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சிறப்பு திட்டங்கள் மீதான விவாதத்தின் போது, கடந்த 2022 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை கூட்டம் முடிவடைந்து, அமைச்சர்கள், MLA -க்கள் உள்ளிட்டோரை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் கார்கள் தயாராக இருந்தபோது ஆங்கில தொலைக்காட்சி நிரூபர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்விகள் கேட்க அவர்களுக்கு பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக சென்று அங்கு நின்ற சாம்பல் நிற காரில் ஏற கதவை திறக்க அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த காவலர் ஒருவர், சார் இது உங்கள் கார் இல்லை என சொன்னது சுதாரித்துக் கொண்டு பின்னர் அதற்கு முன்னால் நின்றிருந்த அதே நிற காரில் ஏறி எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.
அதன் பின்புதான் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்ற கார், உதயநிதி ஸ்டாலினின் கார் என தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து அன்று தமிழக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி எனது காரில் தவறுதலாக ஏற சென்றார். எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லட்டும், ஆனால் ரூட் மாறி கமலாலயத்திற்கு செல்லாமல் இருந்தால் சரி உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ. பன்னீர்செல்வம், நாங்கள் ரூட் மாறி செல்ல மாட்டோம் என தெரிவித்தார். அந்த நிகழ்வை இன்று சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின் , அன்று ரூட் மாறாதுனு சொன்னீங்களே இன்று 3 கார்களில் மாறி மாறி அமித் ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி சென்றாரே என விமர்சனம் செய்த அடுத்த நொடியே தமிழக சட்டமன்றமே சிரிப்பொலியால் அதிர்ந்து போனது.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.. என்ற எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ரிக்ஷாக்காரன் படத்தில் வரும் பாடல் வரிகளைப் போல டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,அதிமுக சார்பில், புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். அந்த அலுவலகத்தைப் பார்வையிடவே சென்றதாக எடப்பாடி பழனிசாமி ஒற்றை வாயில் பதிலளித்தார்.
மேலும், அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதில் பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஒழிப்பதே எனது இலக்கு என தெரிவித்தார்.
பாஜகவின் மேலிடமும் அனைவரும் ஒன்றிணைந்தால் 2026- ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பில் அண்ணாமலையை தமிழக பாஜகவிலிருந்து நீக்கினால் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வர தயார் என சமயம் பார்த்து மிக கச்சிதமாக எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தினர்.
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து திரும்பிய அடுத்த நாளே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி விரைந்தார். அதற்கு முன்பு வரை தாம் தூம் எகிறி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த அண்ணாமலையின் குரல் வலையை எடப்பாடியின் சதுரங்க வேட்டையில் சிக்கி சின்னாபின்னமாகினார்.