திமுகவை வீழ்த்த வேண்டும், அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத ஆட்சியான திமுகவை, தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்தது மக்கள் பிரச்சினைகளுக்காக தான். மக்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். காலையிலே இது குறித்து விளக்கம் அளித்துவிட்டேன்.
எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா? , அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும். அதை எப்படி இப்போது கூற முடியும். 2019 -ஆம் ஆண்டுக்கான கூட்டணியை பிப்ரவரி மாதத்தில் தான் அறிவித்தோம். தேர்தல் வரும்போது தான் ஒத்த கருத்தோடு இருக்கும் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். இப்போது கூட்டணி இருக்கிறதா, இல்லையா என கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்.
அமித் ஷா கூறியது அவரது கட்சியின் விருப்பம். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி குறித்து முடிவு செய்யும் போது, அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து தெரிவிக்கப்படும். அது குறித்து கவலையே பட வேண்டாம். எங்களுக்கு , திமுகவை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத ஆட்சியான திமுகவை, தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.