நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், புதிய தலைமுறை நேர்காணலில் பேசிய அண்ணாமலை குப்புசாமி “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் பாஜக உள்ளே வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எங்கெல்லாம் பாஜகவின் கை ஓங்குகிறதோ அங்கெல்லாம் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயல்படுவார்கள். ஆனால் அந்த இரண்டு கட்சிகளின் வாக்காளர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். குறிப்பாக பெண் வாக்காளர்கள். ஆறு தலைவர்களின் ஊழல்களின் கூடாரம் அதிமுக.
2024ஆம் ஆண்டு இந்த இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி கரைந்து போகும். காரணம், ஒரு கட்சியின் கூட்டணி பலமாக இருப்பதால் அது உடனே கரைய வாய்ப்பில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு திராவிட கட்சி கரைந்து போகும். திமுக எதிர்ப்புக்காக ஒரு கட்சி தமிழ்நாட்டுக்கு தேவையா? திமுக எதிர்ப்பு என்பது ஒரு கொள்கையே கிடையாது” இவ்வாறு அண்ணாமலை குப்புசாமி தெரிவித்தார்.