மாற்றுத்திறனாளி மாணவி ஆர் ஷிவானி போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சாசி சிவசங்கர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகத்தில் 2024-2025 -ஆம் கல்வியாண்டில் + 2, SSLC தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 -ஆம் தேதி வரை நடைபெற்றன.+ 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர். விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி அந்த பணிகள் நிறைவடைந்தன.
அத்தனை தொடர்ந்து மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிளஸ்-2 தோ்வு முடிவுகள் மே-9-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், +2 தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்து இருந்தனர்.
இந்நிலையில், அரியலூர் CSI மேல்நிலைப் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி R. ஷிவானி சமீபத்தில் வெளியான + 2 பொது தேர்வில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார் .அதனையடுத்து மாணவி R. ஷிவானி அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் , போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சாசி சிவசங்கரை, தனது தாய் பிரசன்னா தேவியுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின் போது சாய்பாபா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ் எம் சந்திரசேகர், பள்ளியின் தாளாளர் புனிதவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.