2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் வீழ்த்த முடியாத அணியாக அசுர பலத்துடன் திகழ்ந்தது. இந்திய எதிர்த்து விளையாடிய 9 அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளை குவித்து லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அரை இறுதி சுற்றில் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் நியூஸிலாந்து அணியிடன் தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த முறை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 4-வது முறையாக இறுதி சுற்றில் விளையாட உள்ளது.
இதேபோன்று 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இம்முறை பாட் கம்மின்ஸ் தலைமையில் அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை குவித்து அரை இறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 8-வது முறையாக இறுதி சுற்றிற்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி 711 ரன்கள், ரோஹித் சர்மா 50 ரன்கள், ஸ்ரேயஸ் ஐயர் 526 ரன்கள், கே.எல்.ராகுல் 386 ரன்கள் மற்றும் ஷுப்மன் கில் 350 ரன்கள் என பேட்டிங்கிளும், முகமது ஷமி 23 விக்கெட்கள், ஜஸ்பிரீத் பும்ரா 18 விக்கெட்கள், குல்தீப் யாதவ் 15 விக்கெட்கள்,முகமது சிராஜ் 13 விக்கெட்கள், மற்றும் ரவீந்திர ஜடேஜா 11 விக்கெட்கள் பந்து வீச்சிலும் மற்றும் பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர் 528 ரன்கள் டிராவிஸ் ஹெ ட், மிட்செல் மார்ஷ் 426 ரன்கள், கிளென் மேக்ஸ்வெல் 398 ரன்கள் என பேட்டிங்கில் பலம் சேர்க்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். ஆடம் ஸம்பா 22 விக்கெட்கள் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என இந்தியாவை போலவே சிறந்து விளங்குகிறது. எது எப்படியோ ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி 140 கோடி மக்களின் கனவை நினைவாக்கும்.