சர்வதேச சாதனை படைத்த 10 மாத பெண் குழந்தை..!

சென்னை, கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் வியட்நாம் நாட்டில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். மணிகண்டனின் மனைவி பெயர் ரேவதி. இவர்களுக்கு மகிழினி என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.

சுட்டியான இந்த குழந்தை உலக நாடுகளின் தேசிய கொடிகள், விலங்குகள், பறவைகள், காய்கறிகள், பழங்களின் புகைப்படங்களை காட்டினால் அதன் பெயர்களைக் கூறும் அளவுக்கு குழந்தை நினைவாற்றலுடன் விளங்கி வருகிறது. எடுத்துகாட்டாக ஒரு கேள்விக்கு 2 பதில்களில் இருந்து சரியான விடையை தேர்வு செய்வதுபோல், குழந்தை மகிழினி காய்கறிகள், பறவைகள், தேசிய கொடிகளின் 2 புகைப்படங்கள் வைத்து, அதன் பெயர் கூறினால் சரியானவற்றை தேர்வு செய்து அசத்துகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சாதனையாளர்களுக்கான “இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டு” போட்டியில் கலந்துகொண்டு ஒரு நிமிடத்தில் தாய் ரேவதி கூறும் 12 நாட்டின் தேசியக் கொடியை ஒரு நிமிடத்தில் மளமளவென சுட்டிக்காட்டி குழந்தை மகிழினி அசத்தி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்காக அக்குழந்தைக்கு சர்வதேச சாதனையாளர் விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. குழந்தை மகிழினியின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.