கருணாஸ்: “மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும்”

மதுரையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும் ” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவருமான கருணாஸ் தமிழம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக மாவட்டம் தோறும் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மேலும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணித்து சொற்பொழிவாற்ற திட்டமிட்டுள்ளேன்.

சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான வரலாறு சென்றடைவதை மாற்றி உண்மை வரலாற்றை மக்களை சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு மதுவுக்கு எதிராக பாமக போராட்டம் நடத்தி வந்துள்ளது. ஆனால் மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஜாதி கட்சியையும், மத கட்சியையும் ஒதுக்கி வைத்துவிட்டு மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார். மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாமகவையும் அழைத்து இருக்க வேண்டும்.

திருமாவளவன் உள்நோக்கத்துடன் மாநாட்டை நடத்துகிறார். அப்படி பார்த்தால் விசிக ஜாதி கட்சி இல்லையா? இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் எந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. மதுவுக்கு எதிராக எல்லோரையும் வரவழைத்து தமிழனாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த வேண்டும் என கருணாஸ் தெரிவித்தார்.

யாருக்கு என்ன செய்தியை சொல்ல தொல். திருமாவளவன் நினைக்கிறார்..!?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 -ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொல். திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழக அரசியலில் பரபரப்பையும், தி.மு.க. கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஏற்கனவே பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என அவர் பேசி உள்ளார். திடீரென பழைய வீடியோவை தொல். திருமாவளவன் பகிர்ந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 1999-ல் விசிக இந்த கோரிக்கையை முன் வைத்துதான் அரசியலில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு என்ன செய்தியை சொல்ல பழைய வீடியோவை தொல். திருமாவளவன் தற்போது பகிர்ந்துள்ளார் என்றும் திமுகவிற்கு மறைமுகமாக தனது கோரிக்கையை வைக்கிறாரா திருமாவளவன்? என வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொல். திருமாவளவன்: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு என்ற அமைச்சரின் உத்தரவாதத்திற்கு நன்றி..!

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கும் போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம். இக்கொள்கையில் உடன்பாடு உள்ள சாதியவாத, மதவாத சக்திகளைத் தவிர அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் விசிகவின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம்” என தெரிவித்திருந்தார்.

இக்கருத்து அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி, “தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை” என தெரிவித்திருந்தர் .

இதற்கு நன்றி தெரிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில், “படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என அமைச்சர் முத்துசாமி அறிவித்திருப்பது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அவருக்கு எமதுமனமார்ந்த நன்றி” என தொல்.திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமாவளவன்: அண்ணாமலை அரசியல் காமெடியன்…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்.

உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம் ஆகிய இடங்களில் அவர் பேசுகையில், மீண்டும் மக்களவையில் ரவிக் குமாரின் குரல் ஒலிக்க வேண்டும். ரவிக் குமாரின் வெற்றி முதல்வருக்கு கிடைக்கும் வெற்றி; இண்டியா கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றி. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு பறந்து சென்றதுதான் மோடியின் சாதனை. அம்பானி, அதானியை உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னிலையில் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. ஆனால் மக்களுக்காக என்ன செய்தார்?

பாஜக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். தொடர்ந்தால் பேராபத்தை நாட்டுமக்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல் சட்டத்தை நீர்த்துபோக செய்துவிடுவார்கள். அண்ணாமலை நாள்தோறும் பொய் பேசி வருகிறார். அரசியல் காமெடியன் அண்ணாமலை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவை காப்பற்ற வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கத்தை நிறைவேற்ற 40 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும். அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக கட்சிகளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தை கொடுக்க வேண்டும் என திருமாவளவன் பேசினார்.