ஜிபேயில் ரூ 200 செலுத்தினால் பிறப்பு, ஜாதி சான்றிதழ் கிடைக்கும்..!

ரூ.200 ஜிபே செலுத்தினால் பிறப்பு, சாதி சான்றிதழ் கிடைக்கும் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பிரபா கனி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பகுதியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கையூட்டு பெறப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலக காம்பவுண்ட் சுவரில் மர்மநபர்கள் திடீரென போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் விலை பட்டியல் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெற ரூ.200 ஜிபே செலுத்தவும். 20 நாட்களில் சான்றிதழ் கிடைக்கும்.

ஜிபே ஏற்றுக் கொள்ளப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கு கட்டணம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திடீர் போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அலுவலர் பெண் உதவியாளருடன் கிராம நிர்வாக கைது..!

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மிட்டா நூலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜடையன் மகன் கணேசமூர்த்தி. இவரது தாத்தா பச்சையப்பன் மற்றும் அவரது தந்தை காளியப்பன் பெயரில் 18 சென்ட் நிலம் இருந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு, இந்த நிலத்திற்கான பட்டா எண்ணில், காளியப்பன் மகன் பச்சையப்பன் மற்றும் சடையன் என்கிற பச்சையப்பன் என இருவரது பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து, பட்டாவில் உள்ள சடையன் என்ற பச்சையப்பன் என்பவருக்கும், தங்கள் நிலத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தவறுதலாக பதிவாகி உள்ளது என கூறிய கணேசமூர்த்தி, பட்டாவில் இருந்து அந்த பெயரை நீக்கித் தருமாறு, கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி, நூலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் கேட்டுள்ளார்‌.

அப்போது, பட்டாவில் பெயர் நீக்கம் செய்வதற்கு, வெங்கடேசன் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். பின்னர், டிசம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில், கணேசமூர்த்திக்கு போன் செய்த வெங்கடேசன், தனக்கு அவசர தேவை என்றும், ரூ.20 ஆயிரம் கொடுத்தால் போதும் என்றும் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசமூர்த்தி, இதுகுறித்து நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறைக்கு புகார் தெரிவித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுரையின் படி, கணேசமூர்த்தி நேற்று மதியம் விஏஓ அலுவலகத்துக்கு சென்று, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, அங்கிருந்த விஏஓவின் உதவியாளரான சாமிகவுண்டனூரைச் சேர்ந்த அமுதா என்பவரிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிய அமுதா, விஏஓ வெங்கடேசனிடம் கொடுத்துள்ளார்.

அவர் பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை அவரை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணைக்கு பிறகு, விஏஓ வெங்கடேசன், உதவியாளர் அமுதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம், நல்லம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.