உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆன்மிக சுற்றுலாச் சென்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர். கடந்த 3-ஆம் தேதி சிதம்பரத்தைச் சேர்ந்த 18 ஆண்கள், 2 பெண்கள் என 30 பேர் உத்தரகாண்ட் ஆதி கைலாஷ் என்ற பகுதியில் இருந்து மலைப்பகுதி வழியாக வேனில் திரும்பியபோது, தவாகாட் – தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். கீழே இறங்கி வர முயன்றபோது கற்கள் விழுந்ததால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர்.வேனில் சென்ற பொது திடீரென எதிரிலேயே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடுமையான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மலைப்பாதையை சரிசெய்ய ஒருவார காலமாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. தமிழர்கள் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.