அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸை” எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேடி வான்ஸும் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்புக்கு பிறகு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தனது திட்டங்களை வகுத்து, தொடக்க உரை டொனால்ட் ட்ரம்ப்ய நிகழ்த்த உள்ளார்.

இந்த விழாவில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா என அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்களோடு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். எலான் மஸ்க், ஜெஃப் பிசோஸ், மார்க் ஸூகர்பெர்க் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா கேபிடல் கட்டிட வளாகத்தின் திறந்தவெளியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் அங்கு கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், அமெரிக்க அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்கெனவே 2,20,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், பதவியேற்பு விழா நிகழ்ச்சி உள் அரங்குக்கு மாற்றப்பட்டதால் அதில் 600 பேர் மட்டுமே பங்கேற்க முடிந்தது

அதனால் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பார்ப்பதற்கு கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டொனால்ட் ட்ரம்ப்க்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

கமலா ஹாரிஸ் அதிபராக தான் தேர்வு செய்யப்பட்டால் காஸா மீதான தாக்குதல் முடிவுக்கு கொண்டு வரப்படும்..!

அமெரிக்காவின் 60-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னமும் ஒரு நாளே மட்டும் எஞ்சி உள்ள இருக்கும் நிலையில் கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் சூறாவளியாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பும் நேற்று இரவு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

மிச்சிகனில் பிரச்சாரம் செய்ய வந்திருந்த கமலா ஹாரிஸை அவரது ஆதரவாளர்கள் பெரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். பின்னர் கமலா ஹாரிஸ் பேசுகையில், காஸா, லெபனான் மீது நடைபெற்று வரும் தாக்குதல்கள் பெரும் கவலை அளிப்பதாக குறிப்பிட்டார். மேலும் கமலா ஹாரிஸ் அதிபராக தான் தேர்வு செய்யப்பட்டால் காஸா, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கமலா ஹாரிஸ் உறுதி அளித்தார்.

அடித்து சொல்லும் ஆலன் ஜே லிச்ட்மேன்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் இந்திய வம்சாவளி தான்..!

உலகமே அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றித்தான் இன்று விவாதித்து வரும் வேளையில், தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், அமெரிக்கத் தேர்தலின் நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் ஆலன் ஜே லிச்ட்மேன் முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியரான டாக்டர் ஆலன் ஜே லிச்ட்மேன், சமீபத்தில் தனது நேர்காணலில் கமலா ஹாரிஸ் தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற தனது முந்தைய கணிப்பில் இருந்து மாற்றப் போவதில்லை எனத் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது அமெரிக்கரக்கள் மத்தியில் முக்கியம் விவாத பொருளாக மாறியுள்ளது.

ஆலன் ஜே லிச்ட்மேன் தனது கணிப்பை செப்டம்பர் 5 -ஆம் தேதி அறிவித்தார், இவருடைய அறிவிப்புக்குப் பின்பு தான் ஏபிசி நியூஸ் விவாதம் நடந்தது. இந்த விவாதம் டிரம்ப்-ன் வெற்றி வாய்ப்புகளைப் பெரிய அளவில் மாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையிலும் ஆலன் ஜே லிச்ட்மேன், “எனது கணிப்பை மாற்ற எதுவும் மாறவில்லை” என்று கூறினார்.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நேரலை பேட்டியில் பேசிய போது, இந்த தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் இந்த ஆர்வம் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை விடவும் இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளவதில் தான் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

ஆலன் ஜே லிச்ட்மேன் 42 ஆண்டுகளாக அதிபர் தேர்தல் குறித்து தனது கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்று பெறுவார் என்பதில் எனக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை என்பதை அடித்துச் சொல்கிறார். அதற்கான சில விஷயங்களையும் முன்வைத்துள்ளார். ஆலன் ஜே லிச்ட்மேனின் கணிப்புகள் வெறும் வாக்குகள் அடிப்படையில் இல்லை, வெள்ளை மாளிகைக்கு மிகவும் முக்கியமான 13 அளவுகோல் அடிப்படையாகக் கொண்டது.

இந்நிலையில் இந்த தேர்தலில் டிரம்ப் வெறும் மூன்று அளவுகோலில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறார். ஆனால் கமலா ஹாரிஸ் 8-ல் முன்னிலை பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கிறார். மேலும் 47 ஆண்டுகளாக தனது கணிப்பின் மாடல் அதிக எண்ணிக்கையில் வெற்றியை மட்டுமே கண்டுள்ளதாகவும் நம்பிக்கையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் தான் வெற்றி பெறுவார் என ஆலன் ஜே லிச்ட்மேன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின் உரை: இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் அமெரிக்கா சென்றுள்ளார். சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை, சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்று வரும் உலக மூதலிட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். அதில், “வளர்ச்சி மிகுந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20% தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர்.

மனித வளங்கள் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நவீன உள்கட்டமைப்பு திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வர வேண்டும். சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தொழிலதிபர்களை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும், சென்னையடுத்த சிறுச்சேரியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ரூ.450 கோடி நோக்கிய நிறுவனம் முதலீடு செய்வதன் மூலம் 100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.