விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வாயுக்கசிவு..! மாணவிகள் 39 பேர் மயங்கியதால் பெற்றோர் பரபரப்பு..!

திருவொற்றியூர், கிராமத்தெருவில், விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். சென்னை, திருவொற்றியூர் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் மாணவிகள் 39 பேர் மயக்கம் அடைந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நேற்று காலை திடீரென வாயுநெடி பரவியது. இதில் மாணவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுவிட சிரமம், வாந்தி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்பட்டன. சிலர் மயக்கமடைந்தனர். இத்தனை தொடர்ந்து ஆசிரியர்கள் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றினர். எனினும் 39 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவலறிந்ததும் தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல ஒரே நேரத்தில் பள்ளி முன்பு பெற்றோர்கள் திரண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் சமாதானம் படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திருவொற்றியூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தூய்மை பணியாளர் மேரிக்கு எஸ்.வி.சேகர் பாராட்டு

சென்னை திருவொற்றியூர், அண்ணாமலை நகரை சேர்ந்த கணேஷ் ராமன் கூரியர் ஊழியரான இவர் கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி ஒரு கவரில் போட்டு கட்டிலின் அடியில் வைத்துள்ளார். இதனை அறியாத அவரது மனைவி வீட்டை சுத்தம் செய்தபோது அந்த கவரை குப்பையில் போட்டுள்ளார். பின்னர் இது குறித்து அறிந்தது அதிர்ச்சியடைந்த கணேஷ் ராமன், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இது தொடர்பாக தூய்மை பணியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மேரி என்பவர், தங்க நாணயம் இருந்த கவரை கண்டு, உடனடியாக தனது மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு சாத்தாங்காடு காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்தார்.

நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பணமே முக்கியம், நேர்மையாக வாழ்வது மிகக்கடினம் என நினைக்கும் இக்காலத்திலும், வறுமையிலும், ஏழ்மையிலும் அடுத்தவர் பொருள் நமக்கு வேண்டாம் என நினைத்த மேரியின் மிகப்பெரிய நேர்மையான இச்செயலை பாராட்டி என் தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.5 ஆயிரம் வழங்குவதில் பெருமை அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் முதல் கோவளம் வரை செல்லும் 109 டி என்ற புதிய வழித்தட பேருந்து சேவை

சென்னை திருவொற்றியூர் புதிய பேருந்து பணிமனையில், திருவொற்றியூர் முதல் கோவளம் வரை செல்லும் 109 டி என்ற புதிய வழித்தட பேருந்து சேவையின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி விழாவில் பங்கேற்று புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, திருவொற்றியூர் முதல் கோவளம் வரையிலான புதிய வழித்தடத்தில் ரூ.47 கட்டணத்தில் இப்பேருந்து இயக்கப்பட்டது. இப்பேருந்து காசிமேடு பகுதிக்குள் நுழைந்தபோது அங்கு திரளாக கூடியிருந்த மீனவர்கள் மலர்தூவி, தீபாராதனை காண்பித்து வரவேற்றனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.