தமிழகத்தில் அதிகாரிகளின் ஆசியுடன் இயங்கும் பார்களில் தொடரும் கொடூரம்… திருப்பூரில் பட்டப்பகலில் பாரில் இளைஞர் அடித்துக்கொலை …

உலகே கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரை அரங்குகள், கேளிக்கை விடுதிகள், பார்கள், கிளப்புகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கின்றன. இது ஒருபுறமிருக்க தமிழக அரசும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்க அனுமதிக்கவில்லை.

ஆனால் சில சட்ட விரோதிகள்  டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு தமிழக மூலை, முடுக்கெல்லாம் பார்கள் இயங்குவது மட்டுமின்றி இரவு பகல் பாராமல் சரக்கு மக்களுக்கு தங்குதடை  இல்லாமல் வழங்குவதால் பல இளைஞர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயமே இன்று சீர்கெட்டு கொண்டுள்ளது. இதன்விளைவாக எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இதன் ஒரு தொடர்ச்சியாக  திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மட்டுமல்லாது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் சின்ன மனூரை சேர்ந்த பாபு ராஜ்  என்பவர் தனது பெற்றோருடன் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள வாஷிங் டன் நகரில் வசித்து வந்தார். இவர் மீது பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

அதே பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான டாஸ்மாக்( கடை எண்: 1948) பார் ஒன்று கண்ணப்பன் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.  கண்ணப்பன் நடத்தி வரும் பாரில் பணம் கேட்டு மிரட்டியதாக பாபுராஜ் மீது கடந்த 6 மாதத்திற்கு முன் கண்ணப்பன் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை பாபுராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் நிபந்தனை ஜாமீன் பெற்ற பாபுராஜ் சொந்த ஊரான தேனி சின்னமனூர் சென்று வசித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரை பார்க்க பாபு ராஜ் திருப்பூர் வந்துள்ளார். மேலும் பாபுராஜ் பெற்றோரை பார்த்து விட்டு நண்பன் தினேஷூடன் சின்னமனூர் செல்வதற்காக பெருமாநல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த போது அதை மோப்பம் பிடித்த கண்ணப்பன் அடியாட்களை அனுப்பி உன்னை கண்ணப்பன் பேச அழைக்கிறார் எனவே நீ வா தங்கள் பைக்கில் என அழைத்து கொண்டு அருகில் உள்ள விஸ்வநாதனுக்கு சொந்தமான டாஸ்மாக் பாருக்கு சென்றுள்ளனர் .

ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த பிரச்சனையை மனதில் கொண்டு ஆத்திரம் அடைந்த கண்ணப்பன் மற்றும் கண்ணப்பன் அடியாட்கள் சரமாரியாக கட்டை மற்றும் இரும்பு கம்பியால் பாபு ராஜை தாக்கி உள்ளனர் இதன்விளைவாக பாபு ராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். மேலும் பாபு ராஜுடன் சென்ற அவரது நண்பன் தினேஷ்க்கும் பலத்த அடி விழுந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற பாபு ராஜ் நண்பர்கள் மயங்கி கிடந்த பாபுராஜை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பாபுராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையில் சம்பவம் நடைபெறும் முன் பார் உரிமையாளர் கண்ணப்பன் பாபு ராஜ் சகோதர் ஷேக்கை  அழைத்து உங்கள் தம்பி பாரில் வந்து தகராறு செய்வதாகவும், அவனை அடித்து கொன்று விடுவேன் நீ வந்து அவன் பிணத்தை அள்ளிக் கொண்டு போ என ஆவேசமாக பேசும் ஆடியோ வைரலாகி நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு பாபுராஜ் உடல் உறவினர்களிடத்தில்  ஒப்படைக்கப்பட்டது.

பெருமாநல்லூர் வாஷிங்டன் நகரில் உடலைக் கொண்டு சென்ற அவரது உறவினர்கள் வாசிங்டன் நகர் பேருந்து நிலையத்தில்  கொலைக்கு உடந்தையாக இருந்த  பார் உரிமையாளர் விஸ்வநாதனை கைது செய்யக்கோரி பேருந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி பவுல்ராஜ் மற்றும் ஆய்வாளர் மகாலிங்கம் பார் உரிமையாளர் விஸ்வநாதன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அரசால் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் பார்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் துணையோடு இயங்குவதன காரணமாக பார் கொலைகள் அதிகரித்துள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்து வருவது வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர்.

அரசு பணத்தை சொந்த கணக்கில் செலுத்திய முத்திரைத்தாள் தனி தாசில்தார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்திரைத்தாள் தீர்வை தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான முத்திரைத்தாள் தனி தாசில்தார்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், தேனி மாவட்டத்துக்கான தனி தாசில்தாராக பணியாற்றுபவர் செந்தில்குமார். இவர் தேனி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தேனி மாவட்டத்துக்கான முத்திரைத்தாள் தனி தாசில்தார் செந்தில்குமார், அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை அரசின் கணக்கில் செலுத்தாமல், தனக்கு சொந்தமான வங்கிக்கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் செந்தில்குமார் செய்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.