நாட்டை பெருமை படுத்திய வீரர்களுக்கு தன் கைகளால் உணவு பரிமாறிய முதலமைச்சர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் 19 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 24 இடத்தை பிடித்து இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் பதக்கம் வாங்கிய பெருமையுடன் இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு நாடு முழுவதும் பாராட்டு மற்றும் விருந்தளிக்கும் விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் அரசு சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பஞ்சாப் மாநில வீரர்களுக்கு இன்று பாராட்டு மற்றும் விருந்தளிக்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கே சமைத்து பரிமாறியதாக அம்மாநில அரசு தெரிவித்ததுடன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. இந்த விருந்தில், ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.