சரத்பவார் குற்றச்சாட்டு: அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை // மாநில அரசின் உரிமையை ஆக்கிரமிக்கும் முயற்சி:

சிவசேனா மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சிலர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை முன் எப்போதும் இதுபோன்று இருந்ததில்லை. ஏக்நாத் கட்சே மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மற்றொருபுறம் முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. சிவசேனா எம்.பி.பாவ்னா கவாலி மீதும் நடவடிக்கை பாய்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது மாநில அரசின் உரிமையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. மேலும் மத்திய ஏஜென்சிகளை கருவியாக வைத்து, எதிர்க்கட்சிகளின் தைரியத்தை குறைக்க நடக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக இறங்கியுள்ளது என சரத்பவார் தெரிவித்தார்.